டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேற இருந்து ஐக்கிய ஜனதா தளம் முடிவெடுத்துவிட்டது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல ஆண்டுகளாக ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகித்து வருகிறது.
பீகார் மாநிலத்திலும் நிதிஷ்குமார் தலைமையில் பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக முன்னிறுத்துவதை ஐக்கிய ஜனதா தளம் விரும்பவில்லை. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டண்யில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலக முடிவு செய்துவிட்டது.
இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் அக்கட்சித் தலைவர் சரத் யாதவ் ஏற்கெனவே ஆலோசனை நடத்தி உள்ளார்.
பாஜக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதா? இல்லையா? என்பதை வரும் 15ந் தேதிக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளம் அறிவிக்க இருக்கிறது. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறினாலும் பீகாரில் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை அக்கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில், ஐக்கிய ஜனதா தளத்தின் பலம் 118. அந்த கட்சி தனிப்பெரும்பான்மை பலம் பெறுவதற்கு 4 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவையாகும். இதற்காக 6 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Post a Comment