புது டெல்லி : இந்தியாவின் முதல் அதிகாரபூர்வ பாசிஸ்ட்டான நரேந்திர மோடி காங்கிரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சவாலாக இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ் நரேந்திர மோடி காங்கிரசுக்கு சித்தாந்த ரீதியான சவாலாக இருப்பார் என்று கூறினார். நரேந்திர மோடியை கண்டு காங்கிரஸ் பயப்படவில்லை என்றும் அவர் பாஜகவின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பதாலேயே அவரை எதிர்கொள்வதை பற்றி பேசுவதாகவும் கூறினார்.
பாஜகவில் நடக்கும் பிரச்னைகளை பற்றி பேசிய ஜெய்ராம் ரமேஷ் “ மோடி பஸ்மாசுரை போன்றவர். தன்னை உருவாக்கிய மனிதர்களை விழுங்க கூடியவர். 2002 குஜராத் கலவரத்தை மோடியுடன் சேர்ந்து நடத்திய தொகாடியாவை விழுங்கிய நரேந்திர மோடி தற்போது தன் குருவான அத்வானியை விழுங்கி விட்டார்” என்று கூறினார்.
இந்து மத புராணங்களின் படி தான் தலையில் கை வைப்பவரை அழிக்கும் ஆற்றலை சிவனிடம் பெற்ற பஸ்மாசர் சிவனின் மனைவி பார்வதியில் அழகில் மயங்கி பார்வதியை அடையும் பொருட்டு சிவனின் தலையிலேயே கை வைக்க முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment