தமிழக அரசு இன்று எடுத்துள்ள அதிரடி அரசாணை முடிவுப்படி இனி மாணவிகள் மட்டுமே பயிலும் பெண்கள் பாடசாலைகளில் ஆசிரியர்களாக பெண்கள் மட்டுமே நியமிக்கப்படுவர் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கல்வியாண்டு முதலே இந்த அரசாணை நடைமுறைக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் அரசாணையில் (G.O), பெண்கள் பள்ளிகளில் பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியரையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியராகவும் பெண்களே இருக்க வேண்டும் என்றும் அதுபோலவே, ஆண்கள் பள்ளிகளில் ஆண்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்றும் இருபாலர் பள்ளிகள் மட்டுமே இரு பாலரும் நியமிக்கப்படலாம், ஆயினும் பெண்களுக்கே அங்கும் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வருவதையடுத்தே அரசு இந்த ஆணையை பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது. அரசின் இந்த ஆணைப் பெற்றோர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நேரம்
Post a Comment