எகிப்தில் படித்து வந்த தனது மகனை அபுதாபியில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவனது தந்தை 12ம் வகுப்பில் சேர்த்தார்.
அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில், எகிப்தின் கல்வி முறை அபுதாபி கல்வி முறைக்கு இணையானது அல்ல என கூறிய பள்ளி நிர்வாகம் அந்த மாணவனை தகுதி நீக்கம் செய்து 11ம் வகுப்பில் அனுமதித்தது.
11ம் வகுப்பில் ஓராண்டு படித்த பின்னர் 12ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று அந்த மாணவன் பள்ளியில் இருந்து தகுதிச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு வெளியேறினான்.
இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் மீது மாணவனின் தந்தை அபுதாபி கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
முதன்முதலில் 6 மாத காலம் 12ம் வகுப்பில் எனது மகன் அபுதாபியில் படித்தபோது அவனது டியூஷன் செலவுக்கு 30 ஆயிரம் திர்ஹம் செலவானது. மீண்டும் 11ம் வகுப்பிற்கு அவனை தகுதி நீக்கம் செய்த போது 20 ஆயிரம் திர்ஹம் டியூஷனுக்காக செலவழித்துள்ளேன்.
மேலும், இந்த தகுதி நீக்கத்தால் எனது மகனும், மனைவியும் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக நேர்ந்தது. இதற்கு தக்க இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என அவர் வாதாடினார்.
மாணவனை முதன்முதலாக 12ம் வகுப்பில் அனுமதிப்பதற்கு முன்னரே பள்ளியின் சட்டதிட்டங்களைப் பற்றி தெளிவாக கூறாமல், 12ம் வகுப்பின் இடைக்காலத்தில் அவனை 11ம் வகுப்பிற்கு மாற்றிய பள்ளி நிர்வாகத்திற்கு 10 ஆயிரம் திர்ஹம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இலங்கை முஸ்லிம்
Post a Comment