மெல்போர்ன்: ஆஸ்திராலியாவில் இந்திய இளைஞர் மீது மீண்டும் ஒரு இனவெறி தாக்குதல் அரங்கேறியுள்ளது.
இந்நேரம்
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகேயுள்ள பல்லரட் பகுதியில் உணவகம் ஒன்று நடத்தி வந்த 22 வயதான ஹிமன்ஷு கோயல் என்பவரை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அந்நாட்டு வாலிபர்கள் சிலர் இவரது உணவகத்திற்கு வந்து ஹிமன்ஷு கோயலை தரக்குறைவாக திட்டி, அடித்து உதைத்தனர்.
இதனால் பலத்த காயங்களுக்குள்ளான ஹிமன்ஷூ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். . உணவகத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளின் மூலம் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரை பல்லர்ட் நகர மேயர் ஜான் பர்ட் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிப்போம் எனவும் அவர் உறுதி அளித்தார்.
இதுபோன்ற இனவெறி தாக்குதல் இதற்கு முன்னரும் பல முறை நிகழ்ந்துள்ளதால் இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஹிமன்ஷூ கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்பிற்காக சென்று பட்டம் பெற்று அங்கேயே உணவகம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது..

Post a Comment