இலங்கையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை திடீரென வீசிய புயலுடன் கூடிய மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. காணாமல்போன 30 மீனவர்கள் தேடப்பட்டுவருகின்றனர்.
நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கரையோர மாவட்டங்களில் கடலுக்குச் சென்றிருந்த பல மீன்பிடி படகுகள் இந்த புயலில் சிக்கி காணாமல்போயிருந்தன.
கடற்படையினரும் விமானப்படையினரும் தொடர்ந்தும் தேடுதல்- மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை 38 மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே அளவிலானோர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
காணாமல்போயுள்ள 30 பேரின் கதி என்னவென்று தெரியாதநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல முன்னதாகவே, சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் அதிகாரிகள் எச்சரிக்கை அறிவித்தல்களை விடுத்தார்களா என்று ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகைகள் வழங்கப்படுமென்று அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்
Post a Comment