குடல் வாலுக்கு பதிலாக கர்ப்ப பை அகற்றம்: லண்டன் ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் சாவு

லண்டன் அருகே உள்ள டகென்ஹாம் பகுதியை சேர்ந்தவர் மரியா டி ஜீசஸ் (32). 3 குழந்தைகளுக்கு தாயான இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் அபெண்டிசைட்டிஸ் (குடல் வால்) ஆபரேஷன் செய்து கொண்டார்.

இருப்பினும், அவ்வப்போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தார்.

அவரை சோதித்த டாக்டர்கள், இரண்டாவது முறையாக மேலும் ஒரு ஆபரேஷன் செய்தால் வலி தீர்ந்து விடும் என்று கூறினர்.

'தனது வாழ்க்கையே தீர்ந்து விடப்போகிறது' என்பது, பாவம்... மரியா டி ஜீசசிற்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

5 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு லண்டன் ராம்போர்ட் நகரில் உள்ள குயீன்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 'தேதி' குறித்தனர்.

மயக்க நிலையில் ஆபரேஷன் மேஜையில் கிடந்த அவருக்கு 2 பயிற்சி சர்ஜன்கள் ஆபரேஷன் செய்ததாக கூறப்படுகிறது.

மயக்கம் தெளிந்த பின்னர் வயிற்றுப் பகுதியில் வினோதமான வலியை அவர் உணர்ந்தார்.

இது தொடர்பாக வார்ட் டாக்டர்களிடம் கூறிய போது அவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது தான் நடந்திருக்கும் விபரீதத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் உணர்ந்தது.

பிரச்சினைக்குரிய குடல் வாலை அகற்றுவதற்கு பதிலாக அவருக்கு ஆபரேஷன் செய்த 'கத்துக்குட்டி' டாக்டர்கள், கருப்பையை அகற்றிவிட்ட அபத்தம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

சுமார் 2 வார காலமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த மரியா டி ஜீசஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது வழக்கு தொடரப் போவதாக அவரது கணவர் கூறியுள்ளார்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger