விபச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய பாலியல் தொழிலாளியின் மகளை அமெரிக்காவின் போர்டு கல்லூரி கல்வி அமைப்பு தத்தெடுத்துள்ளது.
மும்பை பாலியல் தொழிலாளியின் மகள் ஸ்வேதா(18). ஸ்வேதாவின் தாய் வயிற்றுப் பிழைப்புக்காகவே இந்த தொழிலை செய்து வந்தார். தன் மகளும் இதில் சிக்கிவிடக் கூடாது என்று நல்ல முறையில் வளர்த்து வந்தார். அதன் பின் பாலியல் தொழிலையும் கைவிட்டார்.
இருப்பினும் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் காமாட்டிபுராவிலேயே வசித்ததால், விவரம் தெரியாத வயதில் ஸ்வேதாவும் பல ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அப்பகுதி அரசுப் பள்ளியில் படித்த ஸ்வேதா, கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். மேலும் தொடர்ந்து படிப்பை தொடராமல் மக்களிடையே விபச்சாரத்தின் கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சத்தீஸ்கர் உள்ளிட்ட பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இவரது சிறந்த பணிகளை பாராட்டி அமெரிக்காவில் உள்ள போர்டு கல்லூரி கல்வி உதவித் தொகையுடன், இலவசமாக மேற்படிப்பை தொடரவும் ஸ்வேதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீட்டையும் ஸ்வேதாவுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

Post a Comment