தமிழ் நாட்டில் பிக்குமார்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும்﹐ இத்தாக்குதலை மையமாக வைத்து பொது பல சேனா ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மீது சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டை வண்மையாக கண்டித்தும் இன்று (20-03-2013) மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை கொழும்பு 02 இல் அமைந்துள்ள ‘நிபோன் ஹொட்டலில்’ ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இனிதே நடைபெற்றது﹐ அல்ஹம்துலில்லாஹ். இதில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஆர்.எம்.ரியால்﹐ செயலாளர் அப்துர் ராஸிக்﹐ துணைத்தலைவர் எம்.டீ.எம்.பர்ஸான் மற்றும் துணைச் செயலாளர் எப்.எம்.ரஸ்மின் ஆகியோர் தெளிவுகளை வழங்கினர்.
பல ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்வுூடகவியலாளர் ஒன்று கூடலில் பின்வரும் முக்கியமான விடயங்கள் குறித்து அறிக்கைகள் விடப்பட்டன.
1.தஞ்சை﹐ திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இடம்பெற்ற பிக்குமார்களுக்கு எதிரான மிலேச்சத்தனமான தாக்குதலை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வண்மையாக கண்டிக்கிறது.
2.இத்தாக்குதல்களுக்கு பின்னணியில் தூண்டுகோளாய் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தும்﹐ ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் உள்ளன என்று பொது பலசேனா அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கை பொய்களால் சோடிக்கப்பட்ட அடிப்படையற்ற அபாண்டம் என்பதை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆணித்தரமாய் அறிவித்துக் கொள்கிறது.
3.ஹலால் விடயத்தில் ஜம்இய்யதுல் உலமா எடுத்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது என்பதோடு﹐ ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை ஜம்இய்யதுல் உலமா அல்லது முஸ்லிம் கலாசார திணைக்களத்தினூடாக தொடர்ந்தும் அமுல்படுத்தப்படல் வேண்டும்.
4.பொது பலசேனா என்ற அமைப்பு இந்நாட்டின் சமூகங்களுக்கிடையில் சகவாழ்வை சீர்குலைக்கும் பச்சை இனவாதத்தை கக்கும் அமைப்பாகும். இந்நாட்டின் அமைதிக்கு வேட்டுவைக்கும் இப்பொது பலசேனா அமைப்பினை இலங்கை அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும்.
5.இஸ்லாம் குறித்து பொது பலசேனா முன்வைக்கும் எந்தவொரு கருத்தினையும் விவாதக் களத்தில் சந்திப்பதற்கு நாம் தயார்.
மேற்படி ஊடகவியலாளர் ஒன்று கூடலின் இறுதியில் வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில்கள் வழங்கப்பட்டன. இது குறித்த மேலதிக தகவல்கள் கீழே அறிக்கையாக தரப்பட்டுள்ளது.
thanks to - sltj
Post a Comment