TRB -ஆசிரியர் தகுதித்தேர்வினை ( TET)
இரண்டு முறை
நடத்தியும் இன்னும்
தேர்வெழுதுபவர்களுக்கு இத்தேர்வு
பற்றிய முழுமையான விழிப்புணர்வோ
புரிதலோ இல்லை. அக்குறையை முடிந்த
வரை நீக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
TET தேர்வு என்பது அனைவருக்கும்
கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம்
2009 ன்படி அறிமுகப் படுத்தப்பட்டது.
மத்தியிலும் (CTET) வேறு சில மாநிலங்களிலும்
அறிமுகப்படுத்தபப்பட்ட பிறகே தமிழகத்தில்
TET தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.தகுதியும் திறமையும்
வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இதன்நோக்கம்.
முதல் TET தேர்வு அனைவரின் எதிர்பார்ப்பையும்
பொய்யாக்கி வினாக்கள் மிகத்தரமானதாகவும் 90 நிமிடங்களில்
பதிலளிக்க முடியாததாகவும் இருந்ததால்அனைவருக்கும்
அதிர்ச்சியே மிஞ்சியது. மிகக்குறைந்த அளவே வெற்றி பெற்றனர்.
இரண்டாவது தேர்வில் வினாக்களின் தரம் ஓரளவு
தெரிந்திருந்ததாலும் நேரம்அதிகரிக்கப்பட்டதாலும் ஓரளவு தேர்ச்சி
விகிதம் இருந்தது.
வினாக்கள் கடினமாக இருக்கிறது என்று புலம்புவதை
விட அந்த தரத்தில்உங்களுடைய தயாரிப்பு முறைகள் மற்றும்
பயிற்சி முறைகள் இருக்கவேண்டும்.கேள்வி பதில்களை
மனப்பாடம் செய்து மட்டும் வெற்றி பெற முடியாது. பாடங்களை
புரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் பல கடினமான
கேள்விகளை புரிந்துகொண்டு விடையளிக்க முடியும்.
மேலும் SET, NET தேர்வு போல இத்தேர்வும் ஒரு தகுதித்தேர்வு
தான். இதில்வெற்றிபெற்றால் நிச்சயம் பணி கிடைக்கும்
என்று நினைக்கக்கூடாது. அதன்பிறகுதங்களுடைய 10,12ம்
வகுப்பு, பட்டபடிப்பு, D.T.Ed., (or) B.Ed., ஆகியவற்றில் உங்களது
மதிப்பெண் மற்றும் TET தேர்வில் நீங்கள் பெறும்
மதிப்பெண் ஆகியவற்றின்அடிப்படையில் கிடைக்கும்
கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே பணிக்கு தேர்வு
செய்யப்படுவீர்கள்.
இதற்கு முன் நடந்த இரண்டு தேர்வுகளில் வெற்றி
பெற்றோரின் எண்ணிக்கைதேவையானதை விட குறைவு.
எனவே அனைவருக்கும் பணி கிடைத்தது. ஆனால்இனிவரும்
தேர்வுகளில் தேவையை விட வெற்றி
பெறுவோரின் எண்ணிக்கைஅதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்நிலையில்
அதிக கட்ஆப் மதிப்பெண்வைத்திருப்போர்களுக்கு மட்டும்
பணி கிடைக்கும். எந்த பாடத்திற்கு எவ்வளவுஆசிரியர்கள்
தேவையென அறிவிக்கப்படுகிறதோ,அவ்வளவு
ஆசிரியர்கள் மட்டுமேபணியமர்த்தப்படுவர்.
குறிப்பாக கம்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில்,
வெற்றிபெற்றாலும் அப்பாடத்தில் காலிபணியிடங்கள்
அறிவிக்கப்படும் போதுதான் பணி கிடைக்கும்.
தேர்வில் வெற்றிபெற்றால் உடனே வேலை உறுதி என்று எண்ணி,
பிறகு மனம் உடையக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல்.
தேர்வில் வெற்றிபெற்றும் கட்ஆப் மதிப்பெண் குறைவாக
பெற்றதால் வேலை கிடைக்காதவர்கள் அடுத்தமுறை மீண்டும்
தேர்வெழுதி தங்களுடைய மதிப்பெண்களை
அதிகரித்துக்கொள்ளலாம். எத்தனை முறை
வேண்டுமானாலும் தேர்வெழுதி
மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். முடிந்தவரையில்
TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் (அதாவது 135) பெற்றுவிட்டால்
வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
(அதாவது கட்ஆப் மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம்).
உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய
செய்தி என்னவென்றால்,இத்தேர்வில் வெற்றிபெற்றால்
அரசுப்பள்ளிக்கு மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளிலும்
அரசு ஊதியத்துடன் பணி கிடைக்கும். தனியார் பள்ளிகளிலும்
நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தற்போது TET
தேர்வில் வெற்றிபெற்றோருக்கான தேவை அதிகமாகவே
உள்ளது என்பதை மனதில் கொண்டு தேர்வுக்கு
மனஉறுதியுடன் தயார்செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
தற்போது B.Ed, (or) DT.Ed, 2 ம் ஆண்டு
படித்துக்கொண்டிருப்போரும் இப்போதிருந்தே தேர்வுக்கு
தயாராகலாம்.
இத்தேர்வைப்பற்றிய முறையான பார்வை, சரியான வியூகம்,
கடின உழைப்பு ஆகியவை இருந்தால் இத்தேர்வில்
வெற்றிபெறுவது என்பது ஒன்றும் சவாலான செயல் அல்ல.
நன்றி :
பாரதி கல்வி மையம்.
தொகுப்பு: திருத்துறைப்பூண்டி ராஜா முகம்மது
நன்றி - tntjsw
|
Post a Comment