மறுக்கப்படும் நன்மைகள்


நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
(அல்குர்ஆன் 6:160)
நன்மை செய்தவருக்கு பத்துமடங்கு கூலி என்ற இறைவாக்கு ஈமானுடன் மனத் தூய்மையாக செய்யும் செயல்களுக்கு மட்டுமே. உள்ளத்தில் ஈமான் இல்லாமல் உலக வாழ்வின் அலங்காரத்தையும் அதில் கிடைக்கும் புகழ்ச்சிகளை மட்டும் நாடியவனாக செய்கின்றவனின் கூலி ஒருபோதும் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது. அவனால் புறக்கணிக்கப்படும். இவ்வாறு இறைவன் புறக்கணித்து விடும் நன்மைகள் சிலவற்றை இக்கட்டுரையில் பார்ப்போம்.

செய்த தர்மத்தை சொல்லிக் காட்டுதல்

தர்மம் என்பது மக்களின் வறுமை நிலையினை கருதியும் தானாக மனமுவந்தும் மறுமையில் இறைவன் தரக்கூடிய மிகப்பெரும் கூலிலி யான சொர்க்கத்தை நாடியும் தர்மங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய உலகில் மனிதர்கள் தர்மம் என்ற பெயரில் மனிதர்களுக்கு கொடுத்து உதவிய பொருட்களையும் பணத்தொகையினையும் மேடைப் பேச்சுகளிலும் பொது இடங்களிலும் தனது தகுதியினை உணர்த்தும் விதமாகவும் உயர்த்தும் விதமாகவும் கூறுவருகிறார்கள். இவ்வாறு செய்வதால் அவன் செய்த தர்மங்கள் சிறிதோ பெரிதோ ஒன்றுக்கும் பயன் இல்லாமல் போய்விடுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிலி க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(
அல்குர்ஆன் 2:264)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும்மாட்டான்;

அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு'' என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்;

நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (தரையில் படுமாறு) கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்ரிலி க் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : முஸ்லிலி ம் 171

பெருமைக்காக செய்தல்

பெருமை மற்றும் புகழ் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியன.அதில் மனிதர்கள் போட்டிபோடக்கூடாது. தாம் செய்யும் தர்மங்கள், நற்காரியங்கள் தற்பெருமையை காட்டுவதற்காக அமைந்தால் செய்த நன்மைகள் அழிந்து போய்விடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியம், (ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறினான்:) ஆகவே, (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வேதனை செய்வேன்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம் (5114)

ஒருவர் 10000 ரூபாய் தர்மம் செய்யும் போது அதைப்பார்த்த இன்னொருவர் 20000 ரூபாய் தர்மம் செய்கிறார். ஆனால் அவரின் நோக்கம், நான்தான் பெரிய மனிதர், நான்தான் பணக்காரன் என்பதை காட்டுவதற்காக இருந்தால் கண்டிப்பாக அவரின் தர்மத்திற்கு நன்மை கிடைக்காது.
அதே நேரத்தில் பெருமையை நாடமல் நம்மைவிட பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவரே இவ்வளவு தர்மம் செய்தால் நாம் கூடுதலாக செய்யவேண்டும், இறைவனிடம் கூடுதல் நன்மையை பெறவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நிச்சயம் இவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

இது போன்று நடந்த காரூன் என்பவனை அல்லாஹ் தண்டித்ததை திருக்குர்ஆனில் விளக்கிக்காட்டியுள்ளான்.

அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).

"
என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். "இவனை விட அதிக வலிலி மையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்'' என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.
"
உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.

அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம்.
அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.

"
அந்தோ! தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். "அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள்.

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக
அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை)
அஞ்சுவோர்க்கே. (அல்குர்ஆன் 28:77லி83)

பிறர் மெச்சுவதற்காக செலவிடுதல்

நாம் செய்த காரியத்தை பார்த்து மற்றவர்கள் புகழ்ந்து பாரட்ட வேண்டும் என்பதற்காக இறை திருப்தியை மறந்து செய்யும் எல்லா செயல்களின் நன்மைகளும் அழிந்துவிடும். மறுமையில் அல்லாஹ் விசாரிக்கும் போது செய்த நற்செயல்கள் படைத்தவனின் திருப்திக்காக இல்லை படைப்பினங்களின் திருப்திக்காக செய்யப்பட்டவை என்று அவை நிராகரிக்கப்பட்டுவிடும்.

உங்கள் விசயத்தில் நான் மிகவும் பயப்படும் விசயம் சிறிய இணைவைப்பாகும்.

அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, முகஸ்துதி (அடுத்தவர்கள் மெச்ச வேண்டுமென்பதற்காக செய்வது) என்று கூறிவிட்டு. மறுமை நாளில் மக்களுக்கு அவர்கள் செய்த அமல்களுக்கு கூலி வழங்கப்படும்போது நீங்கள் உலகத்தில் யார் பார்ப்பதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள் உங்களுக்கு கூலி வழங்கப்படுகிறதா? என்பதை பாருங்கள் என்று அல்லாஹ் கூறிவிடுவான் என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஹ்மூத் பின் லபீத் (ரலிலி ),
நூல் : அஹ்மத் (22523)

(
ஒரு முறை) அபூஹுரைரா (ரலிலி ) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை)
கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்டார்.

அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "ஆம் (தெரிவிக்கிறேன்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன் என் றார்கள்: மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல் பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) உனக்காக நான் அறப் போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்'' என்று பதிலளிப்பார்.

இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, "மாவீரன்' என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப் பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப் படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு "அந்த அருட் கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்'' என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவு மில்லை; கற்பிக்கவுமில்லை.) "அறிஞர்' என்று சொல் லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; "குர்ஆன் அறிஞர்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு,
அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார்.

அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், "நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்'' என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய் "இவர் ஒரு புரவலர்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
அறிவிப்பவர் : சுலைமான் பின் யஸார்,
நூல் : முஸ்லிம் (3865)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியüப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெüப்படுத்தும் அந்த (மறுமை) நாüல், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கüன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி),
நூல் : புகாரி (4919)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களுடைய நோன்பையும், அவர்கüன் நற்செயல்களுடன் உங்கüன் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களது வழிபாடு கலைகட்டியிருக்கும்.) மேலும், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்கüன் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலி ன் மறுபுறம்) வெüப்பட்டு சென்று விடுவதைப் போல மார்க்கத் திலிருந்து அவர்கள் வெüயேறிவிடுவார்கள்.

(
அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெüவந் ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா என்று) அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு, அம்பின் இறகைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். அம்பி(ன் முனையி)ல் நாணைப் பொருத்தும் இடம் தொடர்பாகவும் (அது வேட்டைப் பிராணியைத் தைத்ததா) என்று சந்தேகம்கொள்வார். (அந்த அளவிற்கு அம்பில் எந்தத் சுவடும் இராது.)

அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : புகாரி (5058)

நன்றி - onlinepj 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger