பிரபாகரன் செய்த அட்டூழியங்களையும், விடுதலைப்புலிகள் செய்த அடாவடித்தனங்களையும், இனப்படுகொலைகளையும் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டி டிஎன்டிஜேவின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கரூர் குளித்தலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும் அவர் பேசிய பொதுக்கூட்ட உரைகள் ஃபேஸ் புக்கிலும் இடம்பெற்றிருந்தது. இதற்கு வாதப்பிரதிவாதங்கள் ரீதியாக பதிலளிக்கத் திராணியில்லாத விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான, “நாம் தமிழர்” கட்சியினர் நமது மாநில நிர்வாகிகள் எம்.ஐ.சுலைமான் மற்றும் சையது இப்ராஹீம் ஆகியோரிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளனர்.
பிரபாகரன் முஸ்லிம்களை கொலை செய்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? என்று முதல் கேள்வி எழுப்ப அனைத்திற்கும் தெள்ளத்தெளிவான ஆதாரங்கள் உள்ளன. அதை நீங்கள் மறுப்பீர்களேயானால் அதை நாங்கள் நிரூபிக்கத்தயார் என்று நமது நிர்வாகிகள் பதில் சொல்ல, அது உண்மையென்று வைத்துக் கொண்டால் ராஜபக்சேவை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர். ராஜபக்சே போர் குற்றங்கள் செய்திருப்பாரேயானால் அவரும் குற்றவாளிதான்; அதே நேரத்தில் முஸ்லிம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் கொலை செய்து படுபாதக செய்லபுரிந்த பிரபாகரனும் அவனுடைய ஆதரவாளர்களும் மரணதண்டனை கொடுக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று நமது நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர்.
அப்படியானால், மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்திய முஸ்லிம்களை நீங்கள் ஆதரிப்பீர்களா? அவர்களைக் கண்டிப்பீர்களா? என்று அவர்கள் கேள்வி கேட்க, தீவிரவாத செயல்களை யார் செய்தாலும் அதை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். முஸ்லிம் பெயர் தாங்கிகள் அதைச் செய்திருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று நாம் பதில் கூற பதிலளிக்க முடியாமல் விழிபிதுங்கியுள்ளனர், "நாம் தமிழர்" கட்சியினர்.
இது குறித்து பகிரங்க விவாதம் நடத்த நீங்கள் தாயாரா? என்று விவாதத்திற்கு பகிரங்க அறைகூவல் விடுக்கப்பட்டது. அதற்கு பதில் இல்லை.
நமது கேள்விகளுக்கு பதிலளிக்க வக்கில்லை என்றவுடன், விடுதலைப்புலிகளை எதிர்த்து பேசுவதை நீங்கள் நிறுத்த முடியுமா? முடியாதா? என்று மிரட்டல் தொனியில் கேள்வி வர, “நீ இப்படியெல்லாம் மிரட்டினாயேயானால், இன்னும் அதிகமாக அவர்களைப்பற்றி பேசி அவர்களை தோலுரிப்போம் என்று நமது நிர்வாகிகள் தெரிவிக்க, அப்படியானால் நாளை கரூரில் நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுபோன்று ஒரு நாளைக்கு நூறுபேரை நாங்கள் சந்திக்கின்றோம். நீ என்னவேண்டுமானாலும் செய்துகொள். உன்னுடைய இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்” என்று நமது நிர்வாகிகள் கூற தொலைபேசி இணைப்பைத் துண்டித்தனர். அதைத் தொடர்ந்து அந்த விடுதலைப்புலி ஆதரவாளர் நமது கரூர் மாவட்ட பொறுப்பாளர் இர்ஷாத் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.
நமது நிர்வாகிகள் உடனடியாக கரூர் டவுன் காவல்நிலையத்தில் அவரது தொலைபேசி எண்ணைக் கொடுத்து புகார் செய்யவே காவல்துறை உடனடியாக களமிறங்கியது. நமது நிர்வாகிகளிடம் அவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ரெகார்டு செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் வசமாகச் சிக்கிக்கொண்டனர்.
போலீசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தவே அரண்டு போன விடுதலைப்புலி ஆதரவாளர்கள் ஆரம்பத்தில் நாங்கள் அவ்வாறு பேசவே இல்லை என்று மறுத்துள்ளனர். இவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ரிகார்டு செய்யப்பட்டுள்ளது. அதை மாநிலத்தலைமையிடமிருந்து வாங்கி போட்டுக்காட்டட்டுமா? என்று நமது கரூர் மாவட்ட பொறுப்பாளர் ஹனீஃபா அவர்கள் கேள்வியெழுப்பியவுடன் நமது குட்டு வெளிப்பட்டுவிடும் என்று பயந்த விடுதலைப்புலிகளின் ஆதாரவாளர்கள் தாங்கள் பேசியது உண்மைதான் என்றும், அவ்வாறு நாங்கள் பேசியதற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கின்றோம் என்றும் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துள்ளனர்.
அவர்களிடத்தில் இது குறித்து நேரடியாக விவாதம் நடத்திக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதிலிருந்தே அவர்களிடத்தில் உண்மையில்லை என்பது தெளிவாகின்றது.
நாம் தமிழர் மாவட்டத் தலைவர் ராஜா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இஸ்லாமிய அழைப்புப்பணியும் செவ்வனே செய்யப்பட்டது
Post a Comment