தமிழகத்தின் அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ் நாடு பப்ளிக்சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்என்ற பெயரில் 1929ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1970ல் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக அரசுக் காலிஇடமான அஸிஸ ்டெண்ட் ஸ ்டாடிஸ ்டிகல் இன்வெஸ ்டிகேடர் பதவியில் உள்ள240 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள அஸிஸ்டெண்ட் ஸ்டாடிஸ்டிகல் இன்வெஸ்டிகேடர் பதவிக்குவிண்ணப்பிப்பவர்கள் 01.07.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும். புள்ளியியலில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்தப் பதவிக்குவிண்ணப்பிக்கலாம். இதர பிரிவுகளான கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், கம்ப்யூட்டர்அப்ளிகேஷன்ஸ் போன்றவற்றில் பட்டப் படிப்பில் புள்ளியியலை துணைப் பாடமாகப் படித்தவர்களும்இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் முடித்துவிட்டு ஆப்பரேஷன்ஸ் ரிசர்ச், எக்னாமெட்ரிக்ஸ், மேதமெடிக்கல் எகனாமிக்ஸ் போன்ற ஏதாவது ஒன்றில் முது நிலைப் பட்டம் பெற்றவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். படிப்புகள் எந்தப் பிரிவாக இருப்பினும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டம், முது நிலைப் பட்டம் போன்ற முழுமையான வரிசையில் அவற்றை முடித்திருப்பது கட்டாயத் தேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு நிலைகளிலான தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மற்றவை:
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இதற்காக ரூ.300/-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலமாக செலுத்த வேண்டும். கட்டண விலக்கு சலுகை பெறத் தகுதியானவர்கள் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தப் பணி இடங்களுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையாக அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய மையங்களில் நடத்தப்பட உள்ளது. ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 20.03.2013
கட்டணம் செலுத்த இறுதி நாள் :
22.03.2013
எழுத்துத் தேர்வு நடை பெறும் நாள் :
07.04.2013
- Thanks to dinamalar
thanks to - tntjsw
|
Post a Comment