அல்லாஹ்வின் உதவியால் காலத்தின் அவசியம் கருதி மக்களுக்கு தேவையான தகவல்களை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உடனுக்குடன் வழங்கிக் கொண்டிருக்கிறது.அந்த வகையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, தற்போது முஸ்லிம்கள் மத்தில் பெருமளவு பேசப் படும் இரு நிகழ்வுகள் குறித்த தெளிவை வழங்கும்நோக்கில் இன்று (26.11.2012) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் சமூக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் “இஸ்லாத்தை இழிவாக்கும் சினிமா” எனும் தலைப்பில் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோ: ரியாஸ் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதையடுத்து “பலஸ்தீன் யாருக்குச் சொந்தம்?” எனும் தலைப்பில் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோ:ரஸ்மின் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். நூற்றுக் கணக்கானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.!
நன்றி - sltjweb .com







Post a Comment