எகிப்து அதிபர் ஹொஸ்னி முபாரக் (85) பதவி விலக வேண்டும் என கடந்த 2011ம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய பெரும் போராட்டத்தையடுத்து அவர் அதிபர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.
இதன் பின்னர், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட முபாரக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய மகன்கள் இருவரும் சிறையில் உள்ளனர்.
அவரது மனைவிகள், மகன்கள், மருமகள்கள் ஆகியோர் மீதும் முறைகேடான வகையில் சொத்து சேர்த்ததாக கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆட்சியை பயன்படுத்தி கொள்ளையடித்த பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைத்திருப்பதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
முன்னாள் மந்திரி ஒருவரிடம் நன்கொடையாக பெற்ற 6 லட்சம் அமெரிக்க டாலர்களை முபாரக் குடும்பம் அரசிடம் ஒப்படைத்தது.
இதேபோல் முபாரக்கின் மனைவியிடம் இருந்த 5 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் முபாரக் பதுக்கி வைத்துள்ள தொகையை கண்டுபிடித்து முடக்கி வைக்கும் முயற்சியில் எகிப்து அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், எகிப்து நாட்டில் மட்டும் ரொக்கமாகவும், நிலங்கள், கட்டிடங்கள், வணிக பங்குகள் போன்ற முதலீட்டிலும் முபாரக்கின் குடும்பம் 120 கோடி அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.7 ஆயிரத்து 200 கோடி) முடக்கி வைத்துள்ளதாக எகிப்து நாட்டின் மத்திய தணிக்கை குழு அறிவித்துள்ளது.
Post a Comment