இந்தியாவின் மும்பாய் நகரில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தபட்சம் 4 பேராவது கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அல்தாஃப் மன்ஷில் என்னும் 5 மாடிக்கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
திங்களன்று மாலை நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து தேடும் பணிகள் இரவிரவாகத் தொடர்ந்தன.
இடிபாடுகளில் வேறு யாராவது இன்னமும் அகப்பட்டிருக்கிறார்களா என்று மீட்புப் பணீயாளர்கள் தேடி வருகிறார்கள்.
இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம என்னவென்று இன்னமும் தெரியவில்லை, ஆனால், நிர்மாணப் பணிகளில் உள்ள குறைபாடு காரணமாக கட்டிடங்கள் இடிந்துவீழ்வது என்பது இந்தியாவில் வழக்கமான ஒன்று என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
கடுமையான மழை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மும்பாயில் கடந்த ஏப்ரலில் சட்டவிரோதமாக, அளவுக்கு அதிகமான உயரத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 74 பேர் கொல்லப்படனர்.
அந்தச் சம்பவம் தொடர்பாக 9 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்தியாவில் வீடுகளுக்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கும் அதேவேளை, நிர்மாணத்துறையிலும் கணிசமான ஊழல் காணப்படுகிறது.
Post a Comment