கேரளாவில் அடைமழை பெய்து வருவதால் சில பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலரும் சிரமத்திற்காளாகி வருகின்றனர்.
பேருந்து போக்குவரத்து இல்லாத காரணத்தால், தன்னுடைய கர்ப்பிணி மனைவியை 40 கி.மீ தூரம் தோளில் சுமந்து நடந்துச் சென்று மருத்துவமனையில் சேர்ப்பித்த கணவரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொன்னி மலை காட்டுப் பகுதியில் வாழ்ந்துவரும் அய்யப்பன் காட்டில் கிடைக்கும் தேன் மற்றும் விளைபொருட்களை விற்றுப் பிழைத்து வருகிறார். இவரது மனைவி ஏழுமாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், கைகால்களில் நீர்கோத்து வீங்கியிருந்தது. இதனால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், பெருமழை காரணமாக, பேருந்துப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டிருந்தது.
ஆயினும் மன உறுதியுடன் அய்யப்பன் கொட்டும் மழையில் மனைவியை தோளில் சுமந்தபடி 40 கல் தொலைவு தூரத்தையும் கடந்து சென்று பத்தனம் திட்டாவிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
10 மணி நேரமாக மழையில் நனைந்து சுயநினைவை இழந்திருந்த மனைவிக்கு உடனடியாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆயினும், குழந்தையைக் காப்பாற்ற இயலவில்லை என்று கூறப்படுகிறது.
அய்யப்பனின் மன உறுதியை, குடும்ப நேசத்தைப் பாராட்டி பலரும் அவருக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

Post a Comment