துபாயில் வேலைக்கார பெண்களை அறையில் அடைத்து சித்ரவதை: போலீஸ் அதிகாரி மனைவியின் ருத்ரதாண்டவம்

அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும், அரபு நாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

எஜமானியின் சித்ரவதையால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வேலைக்காரப் பெண் துபாயில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரபு நாடுகளில் வேலை செய்யும் வெளிநாட்டு பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிலிப்பைன்சை சேர்ந்த கதீஜா கமெல் என்ற அந்த பெண் துபாயில் உள்ள போலீஸ் அதிகாரியின் வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலைக்கு சேர்ந்தார்.

அவரது மனைவிக்கு எடுபிடி வேலைகளை செய்து வந்த அந்த பெண் 3-11 வயதிற்குட்பட்ட அவர்களின் 4 குழந்தைகளையும் கவனித்து பராமரித்து வந்தார்.

காலை மற்றும் மதிய உணவாக ஒரு கோப்பை தேநீரும், ஒரு துண்டு ரொட்டியும் தந்துவிட்டு நாள் முழுக்க வேலை வாங்கிய எஜமானி, இரவில் சாப்பிட எதுவும் தராமல் பட்டினியாகவே படுக்க சொல்வாராம்.

வீடு முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. மூலம் கதீஜாவை எந்நேரமும் கண்காணித்து சிறிய தவறுகளுக்கு எல்லாம் ரத்தம் வடியும்படி பிரம்பால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

சில வேளைகளில் அவரது தலையை சுவற்றில் மோதி காயப்படுத்தி சித்ரவதை செய்தும் அந்த ஈவிரக்கமில்லாத எஜமானி ஆனந்தமடைந்துள்ளார்.

இதேபோல் அந்த வீட்டில் வேலை செய்யும் இன்னொரு பெண்ணையும் அவர் சித்ரவதை செய்து வந்துள்ளார்.

பல வேளைகளில் துடைப்பம், செருப்பு போன்றவற்றால் அடித்தும் தனது உள்ளாடையை முகர்ந்துப் பார்க்கும் படியும் வற்புறுத்திய அந்த ராட்சசி, வேலைக்கார பெண்கள் இருவரையும் பலமுறை நிர்வாணப்படுத்தி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

எனது கணவர் போலீஸ் அதிகாரியாக இருப்பதால் எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அடிக்கடி கூறி வந்த அவர், நான்கைந்து நாட்களுக்கு உணவு தராமல் தனியறையில் அடைத்து வைத்து 2 வேலைக்காரிகளில் ஒருவருக்கும் மட்டும் உணவு தந்து அதை மற்றொரு பெண் பார்த்து ஏங்கும்படி கொடுமைப்படுத்தியுள்ளார்.

போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் குற்றுயிராக கிடந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கதீஜா பரிதாபமாக உயிரிழந்ததால், கொடுமைக்கார எஜமானி, அவரது போலீஸ்கார கணவர் ஆகியோர் மீது துபாய் கோர்ட்டில் பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்தது, ஒரு பெண்ணின் மரணத்துக்கு காரணமாக இருந்தது போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கின் மறு விசாரணை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger