மாசு மண்டலம்: இந்தோனேசியாவை குறைகூறுகிறது சிங்கப்பூர்

சிங்கப்பூரை மாசுமண்டலம் சூழ்ந்துகொண்டுள்ளது. இந்த நிலைமை இன்னும் பல வாரங்களுக்கு அங்கு நீடிக்கலாம் என்று அந்நாட்டு பிரதமர் கூறுகிறார்.
பல தென்கிழக்காசிய நாடுகளில் காற்றில் மாசு மண்டலம் பரவியுள்ளதுகாற்றில் கலந்துள்ள மாசு சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய அபாயகரமான அளவான 200 பிஎஸ்ஐ-யையும் தாண்டி, 371 வரை அதிகரித்துள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என அரசாங்கம் அறிவித்து வருகிறது. அண்டையிலுள்ள மலேசியாவிலும் காற்றில் மாசு மண்டலம் பரவியுள்ளதை அடுத்து பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், காட்டுப் பகுதியை எரித்து பயிர்ச் செய்கைக்காக நிலத்தைப் பண்படுத்த விவசாயிகள் முனைந்தபோது பரவிய காட்டுத் தீயே காற்றில் மாசுப் புகை மண்டலம் பரவக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரச்சனை தொடர்பில் இரண்டு அண்டை நாடுகளும் ஆளையாள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக காடுகள் எரிக்கப்படுவதாக சிங்கப்பூர் கூறுகிறது.
'சிங்கப்பூர் மக்களின் சுகாதாரத்தை துச்சமாக மதித்து காற்றை மாசுபடுத்த எந்த நாட்டுக்கு உரிமை கிடையாது' என்று சிங்கப்பூர் சுற்றுச்சூழல் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆனால் சிங்கப்பூரின் கருத்து 'சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறது' என்று இந்தோனேசிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
காட்டுத் தீ என்பது இயற்கையாக ஏற்படுவது என்று அமைச்சர் அகுங் லக்சோனோ கூறினார். இவ்விவகாரம் தொடர்பில் சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்துகின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பு 2002-ம் ஆண்டில் காற்று மாசடைவதை தடுப்பதற்கான உடன்படிக்கையைக் கொண்டுவந்தது.

இந்தோனேசியா அதில் கைச்சாத்திட மறுத்துவருவதால் தமக்குள்ள வழிகள் மிகக்குறைவே என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கே. சன்முகம் கூறினார்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger