சிரியா: சிரியாவில் கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக 'சரின்' என்ற ரசாயனம் மூலம் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
இந்நேரம்
மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் நடைபெறும் உள் நாட்டுப் போரில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ''சரின்'' என்னும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸும், பிரிட்டனும் கூறியுள்ளன. இதில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் நடத்தப் பட்ட இரத்த பரிசோதனையில், அவர்களது இரத்தத்தில் அந்த சரின் வேதிப் பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் லோரண்ட் ஃபபியஸ் கூறியுள்ளார்.
ஜனவரி தொடக்கத்தில் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையினால் சேகரிக்கப் பட்ட தகவல்களின் படியும் சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் உபயோகிக்கப் பட்டு வருகின்றன என்று கூறப்பட்டிருந்தது.
Post a Comment