புதுடெல்லி: தகவல் ஆணைய சேவையின் புதிய மைல்கல்லாக, தகவல் அறியும் உரிமை சட்டம் இனி அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்று இந்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எந்த ஒரு அரசுத்துறை அதிகாரியிடம் இருந்தும், பொதுமக்கள் தகவல்களைக் கேட்டுப் பெறலாம். இதன்மூலம் உள்ளூரில் நடைபெற்று வரும் அரசுத் திட்டப் பணிகள், எம்.பி. நிதி மற்றும் எம்.எல்.ஏ. நிதியில் நமது பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து தகவல்கள் பெற முடியும்.
இதுபோல அரசியல் கட்சிகளிடம் இருந்து இனி எழுத்துப்பூர்வமாக எந்த ஆவணத்தையும் கேட்டுப் பெற முடியும். கட்சிகள் வாங்கிய நன்கொடைகள், செலவு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு பற்றிய விவரங்களையும் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் மற்றும் பல்வேறு தரப்பினரின் மனுவை ஏற்று தகவல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நன்றி - இந்நேரம்
Post a Comment