காலச் சக்கரம் சுற்றிக் கொண்டிருப்பதால் உலகின் வளர்ச்சி பல விதங்களில் முன்னேறிக் கொண்டு வருகிறது.
ஆரம்ப காலங்களில் எங்காவது பிரயாணம் செய்ய வேண்டும் என்றால் கழுதை குதிரை ஒட்டகம் என்று பயணித்த காலம் போய் இன்று சைக்கில் தொடங்கி ராக்கட் வரை மனிதன் முன்னேறியுள்ளான். இந்த முன்னேற்றம் பாராட்டத் தக்க ஒன்றாக இருந்தாலும் முன்னேற்றத்தினால் வரும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் வழி முறைகளையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
இன்று பிரயாணிப்பதெற்கென்று பல வாகன முறைகள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் பஸ்ஸில் தான் பிரயாணம் செய்கிறார்கள் இந்த பஸ் பிரயாணம் இலாபகரமானதாகவும், சுலபமானதாகவும் இருந்தாலும் பல சரியான முறையில் பயண்படுத்தாவிடில் பல சிக்கல்களை நம்முள் ஏற்படுத்தி விடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பஸ் பிரயாணம் பல வகைகளில் அமைந்திருக்கிறது.
இலங்கை இந்திய மக்களைப் பொருத்தவரை பஸ் பிரயாணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதாவது பஸ் பிரயாணத்தை தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
பஸ்ஸில் பிரயாணிக்கும் ஒவ்வொருவரும் ஷைத்தானை கூடவே அழைத்து செல்வதைப் போன்ற ஒரு நிலையை அடைகிறார்கள்.
இலங்கையைப் பொருத்தவரை ஆண், பெண் கலவை என்பது தற்காலத்தில் சாதாரணமானதாக மாறிவிட்டது.
ஆண்களுடன் பேசுவது சுற்றுவது ஆண்கள் பெண்கள் நிகழ்ச்சிகள் நடத்தப் படுவது அனைத்தும் ஒரு மேற்கத்தேய கலாச்சாரம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இதே நிலை பஸ் பிரயாணத்திலும் தொடர்கிறது.
அதாவது அண்ணிய ஆணும் பெண்ணும் சாதாரணமாக அருகாமையில் அமர்ந்து செல்லும் காட்சிகள்.
கூட்ட நெறிசலில் ஒருவரை ஒருவர் உரசும் நிகழ்ச்சிகள் இவையெல்லாம் மிகைத்துப் போயிருப்பதை இலங்கை பஸ் பயணத்தில் நாம் கண் கூடாக காண முடியும்.
இதே நேரம் சிங்களப் பாடல் இல்லாமல் பஸ் ஒரு அடி கூட நகராது.
பாடல் போட்டால் தான் அங்கு எதுவும் நடக்கும் என்ற ஒரு அவள நிலை.
ஆடைக் கலாச்சாரத்தை சொல்லவே வேண்டியதில்லை. குட்டைப் பாவாடைகளும், உடலோடு ஒட்டிப் போன சல்வாரிகளும், துபை பேஷனை மிஞ்சிய ஹபாயாக்களும் காற்றில் பறப்பதென்பது இலங்கையில் அன்றாட காட்சியாக மாறிவிட்டது.
இதில் சில மாற்றங்களுடன் தான் இந்திய பஸ் பயணம் அமைந்திருக்கும்.
இலங்கையில் பாடல் இல்லையென்றால் பஸ் இல்லை.இந்தியாவில் படம் இல்லையென்றால் பஸ் இல்லை.
சென்னை நகருக்குள் ஓடும் பஸ்களில் மாத்திரம் பெரும்பாலும் டி.வி இல்லாமல் இருக்கிறது.
மற்ற எல்லா ஊர்களுக்கு செல்லும் பஸ்களிலும் டி.வி கட்டாயம் இருந்தாக வேண்டும் என்ற நிலை.
ஒரு காலத்தில் டெக் வைத்து படம் போட்ட காலம் போய் இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் சேட்லைட் மூலமாக அரசு போக்குவரத்துக் கலகமே படம் போடும் நிலை. இதே நேரம் ஆடைக் கலாச்சாரமோ இலங்கை இந்தியா என்று எந்த வேறுபாடும் இல்லாமல் தான் இருக்கிறது. இப்படிப் பட்ட பயணங்களில் கூட்ட நெறிசலில் சிக்கிக் கொள்பவர்களின் நிலை என்ன?
கூட்ட நெறிசலில் பெண்களோடு உறச வேண்டும் என்பதற்காகவே வரும் இளைஞர்களும் இலங்கையை விட இந்தியாவில் அதிகம் தான். இந்த நிலைகளை கருத்தில் கொண்டுதான் ஈமானைப் பாதுகாப்பதற்காகவே இஸ்லாம் மிகச் சிறந்த ஒரு பிராத்தனையை பிரயாணத்தில் ஓதும் படி சொல்லித் தருகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை, “அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர்‘ எனக் கூறுவார்கள். பின்னர் பின்வருமாறு கூறுவார்கள்:
ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க ஃபீ ஸஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃபரனா ஹாதா வத்வி அன்னா புஃதஹுஇ அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி வல் கலீஃப(த்)து ஃபில் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸஃபரி வகாப தில் மன்ளரி வஸுயில் முன்கலபி ஃபில் மாலி வல் அஹ்லி
பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்: முஸ்லிம் 2392
மேற்கண்ட பிராத்தனையில் இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும்இ இறையச்சத்தையும்இ நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். என்று குறிப்பாக குறிப்பிட்டு சொல்லப் படுகிறது.
அதாவது பிரயாணம் என்பது தீமையை அதிகம் தூண்டும் ஒரு இடம்.அதிலும் இரவு நேரங்களில் தூரப்பயணங்களை பஸ்ஸில் மேற்கொள்ளும் போது வீடியோ படங்களும் காமத்தை தூண்டும் பாடல்களும் ஒளி,ஒலி பறப்பப்படுவதென்பது சாதாரணமாகிவிட்டதால் ஈமானைப் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொரு இஸ்லாமியனும் மேற்கண்ட துஆவை மனனம் செய்து ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் ஓதிக் கொள்ள வேண்டும்.
rasminmisc
Post a Comment