புது டெல்லி:"கூட்டம் சேர்ப்பவரெல்லாம் பிரதமர் வேட்பாளர் ஆக முடியாது" என குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டி அளிக்கும்போது உமாபாரதி மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் கூறும்போது,
"ராஜ்நாத் சிங்கை வாஜ்பாயுடன் ஒப்பிட்டு வருண் காந்தி பேசியிருப்பதை ஏற்க முடியாது. வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் யாரையும் ஒப்பிட முடியாது. மக்களைக் கவரும் திறன் கொண்ட அரசியல் தலைவர்களை எல்லாம் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவசியம் பாஜக-வுக்கு இல்லை"
என்று கூறிய அவர், "வருண் காந்தியின் பேச்சைக் கேட்க கூட மக்கள் அதிக அளவில் திரளுகின்றனர். அதற்காக அவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா?" என்று நக்கலாக கேள்வியும் எழுப்பியுள்ளார்.
மோடியை பிரதமர் வேட்பாளர் அறிவிக்க நிதிஷ் குமார் உட்பட பாஜகவின் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் உமாபாரதி கூறியிருக்கும் இக்கருத்து பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - இந்நேரம்
Post a Comment