மண்ணறையில் நடப்பது குறித்து அல்லாஹ்வின் தூதர் சொல்லிச் சென்றதைத் தவிர வேறு எதனையும் எவரும் அறிய முடியாது. மண்ணறையில் உள்ள ஒருவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை எந்த மனிதனும் அறிந்து கொள்ள முடியாது. மண்ணறையில் சிலர் எவ்வாறு நட்த்தப்படுகிறார்கள் என்பது போல் சிலருக்கு கனவுகள் ஏற்படலாம். ஆனால் அது உண்மையில்லை. ஷைத்தானின் ஊசலாட்டமாகும். ஏனெனில் மண்ணறையில் நடப்பதை எந்த மனிதனும் அறிந்து கொள்ள முடியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
நன்றி - onlinepj
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(திருக்குர்ஆன் 23:100)
இறந்தவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் திரை போடப்படுவதால் மண்ணறை வாழ்வில் நடக்கும் எதையும் இவ்வுலகில் உள்ள மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது.
இதை பின்வரும் நபிமொழியும் விளக்குகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து "முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?'' எனக் கேட்பர். அதற்கு "இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்'' என்பார். பிறகு "(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், “"எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக்கொண்டிருந்தேன்'' என்பான். அப்போது அவனிடம் " நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.”
அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)
புகாரி 1338
வேதனையில் அலறினால் கூட மனிதனுக்கும் ஜின்னுக்கும் அது கேட்காது என்றால் மற்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி .நன்றி - onlinepj
Post a Comment