ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி கைது”என்று சொல்லி கடந்த மார்ச் 23ஆம் தேதி பத்திரிக்கைகள் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டன.
அந்த செய்தி இதோ :
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.அவனிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம்மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பின், நாட்டின் முக்கிய இடங்களில்தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறைக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் நேபாளம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றசையத் லியாகத் என்ற தீவிரவாதியை டெல்லி போலீசார் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்தனர்.அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
மத்திய டெல்லியில் ஜும்மா மஸ்ஜித் பகுதியில் உள்ள ஹாசி அராபத் என்ற விருந்தினர்இல்லத்தில், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக லியாகத்தெரிவித்தான். சோதனையில் ஏ.கே47 ரக துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள், 2 கிலோவுக்கும்அதிகமான வெடிமருந்து பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில், ஹோலி பண்டிகையின் போதுடெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெறும் பெரோஸாகோட்லா மைதானத்தில் குண்டு வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனரா என போலீசார் விசாரித்துவருகின்றனர்.
ஹிஸ்புல் தீவிரவாதி கைது சம்பவம் குறித்து டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸ்கமிஷனர் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:
லியாகத், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்தவன். கடந்த 1997ம் ஆண்டுபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு இவன் ஊடுருவி தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளான்.பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் இவன் கராச்சியிலிருந்து, காத்மாண்டு வந்துள்ளான். அங்கிருந்துநேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தான். லியாகத் டெல்லியில் தற்கொலைப் படைதீவிரவாதியாக செயல்பட வேண்டும் என ஹிஸ்புல் கமாண்டர்கள் காசி நஸ்ரூதீன், பரூக் குரேஷிஆகியோர் கூறியுள்ளனர். இதற்கான சதி திட்டங்களை காஷ்மீர் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள்,டெல்லியில் லியாகத்திடம் வழங்குவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் சரியான இடத்தை தேர்வு செய்து தாக்குதல் நடத்த வேண்டும் என லியாகத்திடம்ஹிஸ்புல் கமாண்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தாக்குதலுக்குப் பின், லியாகத் காஷ்மீர்செல்லும்படியும் தீவிரவாதிகள் கூறியுள்ளனர் என்றார் அவர்.
மேற்கண்டவாறு பரபரப்புடன் செய்தி வெளியிட்ட ஊடகங்களும், டெல்லி போலீசாரும் தற்போதுமுகம் குப்புற கீழே விழுந்து கேவலப்பட்டுள்ளனர். ஆம்! டெல்லி போலீஸ் பிடித்த லியாகத் என்ற நபர்சரணடைய வந்தவர் என்ற உண்மைத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை கூறிய தகவல்கள் பின்வருமாறு :
டெல்லி போலீஸ் கைது செய்துள்ளதாக சொல்லும் லியாகத் ஷா, எந்த பயங்கரவாத அமைப்பையும்சேர்ந்தவன் அல்ல. அவன் இப்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு, சரணடையும் பயங்கரவாதிகளுக்காக, மறுவாழ்வு கொள்கையைஅறிவித்துள்ளது. அதனடிப்படையில், காஷ்மீர் அரசிடம் சரண் அடைய வந்தவன் அவன். இந்தவிவரம் மத்திய உளவுத் துறைக்கும், எங்களுக்கும் தெரியும். அவனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும்எடுக்க வேண்டாம் என, டில்லி போலீசாருக்கு தெரிவித்துள்ளோம். லியாகத் ஷா, தன் இரண்டாவதுமனைவி மற்றும், 19 வயது மகளுடன் நேபாளம் வழியாக, இந்தியா வந்தபோது தான் கைதுசெய்யப்பட்டுள்ளான். இவ்வாறு, ஜம்மு - காஷ்மீர் போலீசார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட லியாகத்தின் முதல் மனைவி சொல்வது என்ன? :
கோரக்பூரில் கைது செய்யப்பட்ட லியாகத் ஷாவின் முதல் மனைவி அமீனா பேகம், செய்திநிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், அதாவது, எனக்கும், லியாகத் ஷாவுக்கும் திருமணம் முடிந்து,ஆறு ஆண்டுகளுக்குப் பின், துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர், ஒரு நாள் திடீரென என் கணவரைஅழைத்துச் சென்றனர். அதன்பின், அவர் என்ன ஆனார் எனத் தெரியாமல் இருந்தது.
சில ஆண்டுகள் கழித்து என் கணவரிடம் இருந்து, கடிதம் ஒன்று வந்தது. அதில், தான் பாகிஸ்தானில்இருப்பதாகவும், மான்செரா என்ற இடத்தில், கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருவதாகவும்குறிப்பிட்டிருந்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில், மொபைல் போன் சேவைகள் துவங்கியபின்,என் கணவர் எங்களை அடிக்கடி மொபைலில் தொடர்பு கொண்டு பேசுவார். நன்றாக இருப்பதாகவும்,வீடு திரும்ப ஆசைப்படுவதாகவும் கூறுவார்.
இதையடுத்து, காஷ்மீர் குப்வார மாவட்ட நிர்வாகத்தினரிடம், நாங்கள் மனு ஒன்றை சமர்ப்பித்தோம்.அதில், காஷ்மீர் மாநில அரசின், பயங்கரவாதிகளுக்கான மறுவாழ்வு கொள்கைப்படி, அவர் சரண்அடைய அனுமதிக்க வேண்டும் எனக் கோரினோம். மாவட்ட நிர்வாகத்தினர் எங்களின்வேண்டுகோளை ஏற்றனர். அதனால், எங்கள் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டபடி, என் கணவர்நேபாளம் வழியாக இந்தியா திரும்பியுள்ளார். விரைவில் அவர் குடும்பத்தினருடன் சேருவார் என,எதிர்பார்த்தோம். ஆனால், அதற்குள், டில்லி போலீசார் அவரை, ஆயுதங்களுடன் கைதுசெய்துள்ளதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநில அரசின் மறுவாழ்வு கொள்கைப்படியே, என் கணவர், இந்தியா திரும்பினார்.அதனால், அவர் ஆயுதங்களைக் கொண்டு வந்தார் என்ற கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு அமீனாபேகம் கூறியுள்ளார்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் கூறிய தகவல்கள் பின்வருமாறு :
முன்னாள் தீவிரவாதியான லியாகத் ஷா, சரணடையும் திட்டத்தின் கீழ் வரும்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் விளக்கம் அளித்துள்ளார். தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த காஷ்மீர் இளைஞர்கள் ராணுவப் போலீசில் சரண் அடைந்தால்அவர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் மாநில அரசுக்கும், உள்துறைஅமைச்சகத்திற்கும் இடையே நடைமுறையில் உள்ளது. இதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 270முன்னாள் தீவிரவாதிகள் காஷ்மீரில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே ஒப்பந்தத்தின்அடிப்படையில் லியாகத் ஷா, இந்தியாவிற்கு வந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல் துறைதெரிவித்துள்ளது. இதை டெல்லி காவல் துறை ஏற்க மறுப்பதால், விசாரணையை தேசிய புலனாய்வுக்கழகத்திடம் ஒப்படைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உமர் அப்துல்லாகோரிக்கை விடுத்துள்ளார். இந்த விசாரணையின் முடிவில் டெல்லி போலீசின் சதியும், காங்கிரஸ்கயவர்களின் சதியும் அம்பலத்திற்கு வரும்.
தன்னுடைய வாழ்வின் போக்கை மாற்றி, திருந்தி, சரணடைந்து மறுவாழ்வு வாழவேண்டும் என்றுமுடிவெடுத்து சரணடைவதற்காக வந்த ஒரு நபரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி, அவரிடத்தில்துப்பாக்கிகளும், வெடி குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக நாடகமாடி, அந்த அப்பாவியை ஹோலிபண்டிகையை சீர்குலைக்க வந்த கொலைகாரன் என்றும், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி என்றும்பட்டம் சூட்டி இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ண டெல்லி காவல்துறையும், டெல்லிகாங்கிரஸ் அரசும் படுபிரயத்தனம் எடுத்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸின் உண்மை முகம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான டெல்லி போலீஸ் மற்றும் காங்கிரஸ் கயவர்களின்சதி இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைக்கூட ஹோலி பண்டிகையோடு முடிச்சுப்போட்டு டெல்லியையும்குஜராத் போல மாற்ற இந்த கொடும்பாவிகள் திட்டம் தீட்டியுள்ளதையே இது வெளிச்சம்போட்டுக்காட்டுகின்றது.
இப்படிச் செய்வது காங்கிரஸ் கயவர்களுக்கும், டெல்லி காவல்துறையினருக்கும் முதல்முறையல்ல. இதற்கு முன்பாக இதுபோல, 1998 பிப்ரவரி மாதம் டெல்லியில் வசித்து வந்த முகமதுஅமீர் என்ற முஸ்லிம் இளைஞர் டெல்லி போலீஸாரால் திடீரென காவல் நிலையத்திற்க்கு அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது அவருக்கு 18 வயது. எதற்கு அழைத்துச் செல்கின்றார்கள் என்றேதெரியாமல் அமீர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார்.
அடுத்த நாள் பத்திரிக்கையில் பாகிஸ்தான் தீவிரவாதி முகமது அமீர் பயங்கர ஆயுதங்களுடன் கைது. 10-க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவன். பாகிஸ்தானில் பயிற்சிஎடுத்தவன் என டெல்லி காவல்துறை செய்தி வெளியிட்டது, கைது செய்யும்போது அமீர் கையில்அமெரிக்க டாலர்கள், குண்டு செய்வதற்கான குறிப்புகள் அடங்கிய 5 டைரிகள், குண்டுவெடிப்புகளுக்குப் பயன்படும் ரசாயனப் பொருட்கள், பாகிஸ்தானுக்கு ஒரு முறை சென்றதற்கானவிசா ஆகியவைகளை வைத்திருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
இவை அனைத்தும் போலியாக போலீசாரால் ஜோடிக்கப்பட்டவை என பின்னர் நீதி மன்றத்தில்நிரூபணமானது.
பின்னர் அமீர் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மீது 1996 முதல் 1997 வரை நடந்த 10குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அனைத்து இடங்களிலும் குண்டு வைத்து இயக்கச் செய்தவர் இவர்தான் என டெல்லி போலீஸார்குற்றம் சாட்டினர்.
உண்மையில் எந்த ஆதாரமும் அமீருக்கு எதிராக இல்லை, குண்டு வெடிப்பை நேரில் பார்த்தசாட்சிகளில் ஒருவர் கூட அமீரை ஒரு முறை கூடப் பார்த்ததில்லை என நீதி மன்றத்தில்தெரிவித்தனர். அமீர் குண்டு வைத்ததை நேரில் பார்த்தேன் என காவல் துறையால் முக்கியசாட்சியாகச் சேர்க்கப்பட்ட சந்திராபான் நீதி மன்றத்தில் காவல் துறையின் மோசடியைஅம்பலப்படுத்தினார். நீதிபதிகள் "அமீரைப் பார்த்தீர்களா?" என்று கேட்டதற்க்கு "அமீரைப் பார்த்ததேஇல்லை எனத் தெரிவித்தார்", நீங்கள் பார்த்ததாகக் காவல் துறை ஆவணம் தாக்கல் செய்துள்ளதேஎனக் கேட்டதற்க்கு "என்னை சாணக்கியாபுரி காவல் நிலையத்திற்க்கு போலீசார் அழைத்துச் சென்றனர்,அங்கு வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கினர், பின்னர் அனுப்பிவிட்டனர், அதில் என்னஎழுதினார்கள் என்று எனக்குத் தெரியாது" என்று உண்மையைப் போட்டு உடைத்தார். இப்படி பல்வேறுபொய்களைச் சொல்லி அப்பாவி முஸ்லிம் இளைஞர் ஒருவரின் வாழ்க்கையோடு ஏற்கனவேவிளையாடியது டெல்லி காவல் துறை.
14ஆண்டுகளுக்குப் பிறகு இது டெல்லி காவல்துறையின் திட்டமிட்ட சதி என்று கூறி நீதிமன்றம்அமீரை விடுதலை செய்தது. அதுபோலத்தான் தற்போதும் டெல்லி போலீசார் அழகான முறையில்இந்தப் பொய் வழக்கையும் ஜோடித்துள்ளார்கள்.
இதன் மூலம் சோனியாவும், நரேந்திர மோடியும் ஒரே கொள்கையுடையவர்கள்தான் என்பதுஅம்பலமாகியுள்ளது. இவர்களுக்கு முஸ்லிம்கள் தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றார்கள்.
(முஸ்லிம்களுக்கு எதிராக சதி வலை பின்னும் இந்த கேவலமான செயலில் ஊடகங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. அது குறித்த தனி செய்தியை 13 ஆம் பக்கத்தில் “முஸ்லிம்களை கருவறுப்பதில்ஊடகங்களும் கைகோர்க்கும் அவலம்” தனிக்கட்டுரையில் காண்க)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்!ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்டவேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வைஅஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
நன்றி - onlinepj
Post a Comment