கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த போலி என்கவுண்டர்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் நடக்கவில்லை, தீவிரவாத தாக்குதல்கள் நடக்கவில்லை அப்படி இருக்க வேலியே (போலீஸ்) பயிரை (மக்களை) மேய்ந்திருக்கிறது. மனசாட்சியே இல்லாத மிருகங்கள் நிறைந்த துறைதான் போலீஸ் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் (2002 to 2007) ஐந்து ஆண்டுகளில் மட்டும் 440 போலி என்கவுண்டர்கள் இந்திய பயங்கரவாத போலீசாரால் நிகழ்த்தப்பட்டுள்ளது இதில் உத்திரபிரதேசத்தில் மட்டும் 231 போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை அமைப்பான NHRC ரிகார்டுகள் படி 2008 to 2009 வரை ஒரு ஆண்டுகளில் மட்டும் 369 போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன .
இப்படி போலீசாரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட என்கவுண்டர்களில் ஒன்றுதான் 1982 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள மாதோபூர் கிராமத்தில் நடந்தது. இதில் 12 அப்பாவிகளும் ஒரு போலீஸ் அதிக்காரியும் கொல்லப்பட்டனர். இந்த போலி என்கவுண்டர் குறித்து சந்தேகம் வராமல் இருக்க சக போலிஸ் அதிகாரியான ஆர்.பி. சிங் என்பவரையும் கொன்றனர் போலீஸ் பயங்கரவாதிகள். ரவுடிகளோடு நடந்த சண்டையில் போலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதாக வழக்கை மூடினார்கள்.
கொல்லப்பட்ட ஆர்.பி. சிங்கின் மனைவி தனது கணவரின் கொலையில் மர்மம் இருப்பதாக சொல்லி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரது வழக்கை ஏற்று உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டதில் 10 பேர் இறந்து விட்டனர்.
இந்நிலையில், 31 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்தவாரம் தீர்ப்புக் கூறப்பட்டது. அதில் கவ்டியா காவல்நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த ஆர்.பி.சரோஜ், தலைமைக் காவலர் ராம் நாயக், காவலர் ராம் கரண் ஆகியோருக்கு இச்சதிச் செயலில் தொடர்புள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 5 காவலர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பு: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக மும்பையை சேர்ந்த இர்ஷாத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உள்பட 4 பேரை 2004ம் ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத் போலீசார் பதவி உயர்வுக்காக போலி என்கவுன்டர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*இந்திய வரலாற்றில் போலி என்கவுன்டர்களுக்கு எதிரான வழங்கப்பட்ட முதல் தண்டனை இதுதான்*
நன்றி - சிந்திக்கவும்
Post a Comment