தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வீரியமாக வளர்ச்சியடைந்து வருவதும், அதன் மார்க்க – சமுதாயப் பணிகளால் ஈர்க்கப்பட்டு ஏராளமானோர் அதன் கொள்கைச் சகோதரர்களாக மாறி வருவதும் அறிந்ததே. டிஎன்டிஜேயின் சமுதாயப்பணிகளை சிறப்புடன் செய்வதற்கு ஆங்காங்கே மர்கஸ்களும் பெருமளவில் அமைந்து வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறான மர்கஸ் ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது. தங்களது கிளையின் சொந்தப்பணத்தில் 40 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்றை வாங்கி அதில் மர்கஸ் கட்ட ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளும்போது, எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் தவ்ஹீத் ஜமாஅத்தை அழிக்கு நினைக்கும் உள்ளூர் எதிரிகள் ஒன்று சேர்ந்து வன்முறைக்கு வித்திட்டுள்ளனர்.
உள்ளூர் ஹனபி பிரிவினர், SDPI, TMMK, மற்றும் நமது அமைப்பினால் நீக்கப்பட்டவர்கள் ஆகியோர் கொண்ட இக்குழுவினர் முதற்கட்டமாக பின் வரும் பிரிவினர்களுக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர்.
வருவாய்த்துறை, காவல்துறை, மற்றும் நகராட்சி ஆகியவைகளுக்கு அனுப்பப்டட அம்மனுவில் சம்பந்தபப்ட்ட இடம் புறம்போக்கு நிலம் என்றும் எனவே இங்கு கட்டிடப் பணிகள் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் கதையளந்திருந்தனர். ஆயினும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடத்தையும் நமது தரப்பு ஆவணங்களையும் ஆய்வு செய்துவிட்டு, தங்களது சொந்த இடத்தில் மர்கஸ் அலுவலகம் அமைப்பதில் தலையிட முடியாது என்று கூறி அவர்கள் முகத்தில் கரி பூசினர்.
இதன்பின்னரும் இந்தப் போலிகளின் செயல்பாடுகள் நிற்கவில்லை. அடுத்தகட்டமாக கட்டிடப்பணிகள் செய்து வந்த உள்ளூர்க்காரர்களை மிரட்டித் தடுத்துள்ளனர். இதையும் செங்கோட்டை மற்றும் அச்சன்புதூர் பகுதிகளைச் சேர்ந்த கட்டிடப்பணியாளர்களை வைத்து பணிகளை முடுக்கிவிட்டு நமது சகோதரர்கள் எதிர் கொண்டனர்.
ஒரு வழியாக கட்டிடப்பணிகள் நிறைவு அடைந்துவிட்டதால், கடந்த 18.04.2013 அன்று தங்களது பழைய அலுவலகத்திலிருந்து இந்தப் புதிய இடத்திற்கு இடமாற்றும் பணிகளைத் துவக்கினார்கள். இப்போது போலிகள் உச்சகட்டமாக அடுத்த “மூவ்’ வை நகர்த்தினார்கள்.
பாங்கிற்காகப் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியில், “ நஜாத்துக்காரர்கள் நமக்கு எதிராக போட்டி பள்ளியைத் துவக்கிவிட்டார்கள். ஒன்றிணைந்து ஆயுதங்களுடன் வாருங்கள் – நாரே தக்பீர்” என்று பீதியைக் கிளப்பி காட்டுக் கூச்சலிட்டனர். இதைக் கேட்ட கொள்கைச் சகோதரர்கள் காவல்துறையின் உதவியை நாட, அவர்களோ வெறும் இருவரை மட்டும் ஒப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவ்வாறு வந்த துணை ஆய்வாளரையும் போலிகளில் ஒருவன் கல்வீசித் தாக்க நிலைமை விபரீதமானது.
அதனைத் தொடர்ந்து உருட்டுக்கட்டை சகிதமாக தவ்ஹீத் சகோரர்கள் தாக்கப்பட்டனர். இவ்வாறு தாக்குதலுக்கு ஆளான ஆறுபேர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க்பபட்டுள்ளனர். இதன்பின்னரே மாவட்ட காவல்துறையினரின் சார்பாக காவலர்கள் குவிக்கப்பட்டனர். வழக்கம்போல் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டன. இதில் காவலரை கல்வீசித் தாக்கியதாகவும் நம்மீது (பொய்) வழக்கு உள்ளது.
மேலும் டிஎன்டிஜே நிர்வாகிகளை நள்ளிரவில் வீடுபுகுந்தும் காவல் துறை வேட்டையாடியது. எதிர் தரப்பினருக்கு சாதகமாகவும் டிஎன்டிஜேக்கு எதிராகவும் காவல்துறை செயல்பட்டதை நடுநிலையாளர்கள் சொல்லிக் காட்டினர். காவல்துறையின் இந்த அநியாயப் போக்கைக் கண்டித்து கடந்த 19.04.2013 அன்று காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டு, ஏராளமானோர் களமிறங்கினர். இவர்கள் அனைவரும் கைதாகி அன்று இரவு விடுதலை ஆயினர். ஏராளமான பெண்களும் கைக் குழந்தைகளுடன் களம் கண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் டிஎன்டிஜே நிர்வாகிகளை நள்ளிரவில் வீடுபுகுந்தும் காவல் துறை வேட்டையாடியது. எதிர் தரப்பினருக்கு சாதகமாகவும் டிஎன்டிஜேக்கு எதிராகவும் காவல்துறை செயல்பட்டதை நடுநிலையாளர்கள் சொல்லிக் காட்டினர். காவல்துறையின் இந்த அநியாயப் போக்கைக் கண்டித்து கடந்த 19.04.2013 அன்று காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டு, ஏராளமானோர் களமிறங்கினர். இவர்கள் அனைவரும் கைதாகி அன்று இரவு விடுதலை ஆயினர். ஏராளமான பெண்களும் கைக் குழந்தைகளுடன் களம் கண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நன்றி - tntjnet
Post a Comment