மணிலா, -
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய போபா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்தது. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் விட்டனர்.
போபா புயல்
பிலிப்பைன்ஸ் நாட்டில் போபா என்ற புயல் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் அங்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியால் பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகள் சின்னாபின்னமாகி உள்ளது. மழை, வெள்ளத்தால் பல பகுதிகள் மிதக்கின்றன.
தெற்கு மின்டானவ் பகுதியில்தான் போபா புயல் கோரத்தாண்டவமாடி உள்ளது. கடலோரப்பகுதிகள், சாகுபடி செய்யப்பட்ட பகுதிகள், சுரங்கப் பகுதிகள் நிலைமை மிக மோசமாகி விட்டது. ஏராளமானோர் வீடுகளை இழந்து விட்டனர். புயலால் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
தெற்கு மின்டானவ் பகுதியில்தான் போபா புயல் கோரத்தாண்டவமாடி உள்ளது. கடலோரப்பகுதிகள், சாகுபடி செய்யப்பட்ட பகுதிகள், சுரங்கப் பகுதிகள் நிலைமை மிக மோசமாகி விட்டது. ஏராளமானோர் வீடுகளை இழந்து விட்டனர். புயலால் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
250 பேர் பலி
இதுதொடர்பான சம்பவங்களில் சுமார் 250 பேர் உயிரிழந்து விட்டதாக பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய்விட்டதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள மின்டானவ் பகுதியில் உள்ள கம்போஸ்டலா மாகாணத்தின் கவர்னர் ஆர்தர் உய் இது பற்றி கூறுகையில், ‘‘புயலால் பாதித்த ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளிக்கட்டிடங்கள், நீதிமன்றங்கள், நகர்மன்ற அரங்குகள், சுகாதார மையங்கள் என தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாகாணத்தில் மட்டுமே புயலால் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேத மதிப்பு
திடீரென வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. சூறாவளி காற்றின் தாக்கமும் மிகக் கொடூரமாக இருந்தது. விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நாசமாகி விட்டன. இடைவிடாத மழையினால் சகஜ வாழ்க்கை முடங்கிப்போய் விட்டது. கம்போஸ்டலா மாகாணத்தில் மட்டும் புயல் சேத மதிப்பு குறைந்தபட்சம் 98 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 540 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.நியூபட்டான் நகரில் போபா புயலுக்கு குறைந்தது 60 பேர் பலியாகி உள்ளனர். இந்த நகரில் மட்டும் 245 பேர் காணாமல் போய்விட்டனர். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.பிலிப்பைன்ஸ் நாட்டில் எப்படியும் ஆண்டுக்கு 20 புயல்களாவது தாக்கி விடுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மின்டானவ் பகுதியில் கோரத்தாண்டவமாடிய வாஷி புயலில் 1,500–க்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.
URL:
world news: Philippines
Post a Comment