அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் - பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்


இந்த நூற்றாண்டில் தமிழ் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக ஆளுமை நிறைந்த அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய வரலாற்று ஆய்வு பற்றிய தொடர் இது. கடல் கடந்த அண்மை நாட்டிலுள்ள ஒருவனால் இம்முயற்சி முழமையான சாத்தியமா என்ற அச்ச உணர்வோடு, எனக்குக் கிட்டிய தகவல்களை மையமாக வைத்து எழுத ஆரம்பிக்கின்றேன். இதில் உங்கள் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. குறிப்புக்கள் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தொடருக்குள் நுழைவதற்கு முன்னர் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். ஏனெனில், நான் அழைப்புப் பத்திரிகை ஆசிரியராக இருக்கும் போது, பல அறிஞர்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன்.எனினும், சிலரைப் பற்றித்தான் எழுத முடிந்தது.

உமர் பின் அப்துல் அஸீஸ்,இமாம் இப்னுத் தைமிய்யா,முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போன்றோர் பற்றி எழுதினேன். அப்போது எந்த விமர்சினத்தையும் முன்வைக்காத சிலர், அறிஞர் பீஜே பற்றி நான் எழுத முனையும் போது மடடும் என்மீது தக்லீத் சாயம் பூசுவதுண்டு. இது இவர்களின் நுணிப்புல் மேதாவித்தனத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிக்காட்டுகிறது.

அறிஞர் பீஜே பற்றிய இத்தொடரின் நோக்கம் தக்லீத் பண்ணுவதற்கோ,தனிமனித வழிபாட்டை ஆதரிப்பதற்கோ அல்ல.குறுட்டு தக்லீதைத் தகர்த்து, தனிமனித வழிபாட்டை ஒழிப்பதில் அவரது பணி மகத்தானது. இந்த நுற்றாண்டில் சுதந்திரமாக சிந்திக்கும் ஒரு பெரும் சமூகத்தை அல்குர்ஆன் – சுன்னாவின் நிழலில் உருவாக்கிய அன்னவரின் மகத்தான பணியை மதிப்பீடு செய்வதோடு, தமிழ் உலகில அவர் ஏற்படுத்திய ஏகத்துவப் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவத்தை எதிர்கால தலைமுறைக்கு ஆவணமாக வழங்க வேண்டும் என்பதுமாகும்.
எம்.ஏ.ஹபீழ் ஸலபி,  இலங்கை. 

நன்றி - கடையநல்லூர் அக்ஸா 
நன்றி - சப்வான் லங்கா 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger