இணையத்தில் இலவசமாக கிடைக்கும் எழுத்து வகைககள் (Fonts)




சிலருக்கு விதவிதமான Fonts -ஐ தன்னுடைய கம்பியூட்டரில் வைத்திருப்பது ரொம்ப பிடிக்கும். நம் எதிர்பார்ப்பிற்கும் மேலாக, பலவகையான Fonts  வகைகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. அந்த தளங்களை இங்கு பார்க்கலாம்.



1.http://www.fawnt.com/ : டிசைனர்கள், டெவலப்பர்கள், இணைய தள வடிவமைப்பாளர்களின் கற்பனைக்குத் தீனி போடும் வகையில் இங்கு பாண்ட் வகைகள் கிடைக்கின்றன.விண்டோஸ் சிஸ்டம் மற்றுமின்றி மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தவும் எழுத்து வகைகள் கிடைக்கின்றன. 9,348 எழுத்துவகைகள் இலவசமாய் இங்கு உள்ளன.

2. http://www.abstractfonts.com/: இங்கு 11,849 வகை எழுத்துவகைகள் உள்ளன. இவை வகைப்படுத்தப் பட்டு, பயன்படுத்த விரும்புவோர் எளிதாகக் கண்டறியும் வண்ணம் தரப்பட்டுள்ளன.

3. http://freefonts.co.in/: விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான 12,000 பாண்ட் வகைகள் இங்கு கிடைக்கின்றன. மிக எளிதாகத் தேடிப் பார்த்து, தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வகையில் இவை அடுக்கப்பட்டுள்ளன.

4. http://www.dafont.com/: பத்தாயிரத்திற்கு மேற்பட்ட எழுத்து வகைகள் இருக்கின்றன. இவற்றை சொந்த பயன்பாட்டிற்கு, வர்த்தக ரீதியாக இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் பயன்படுத்த இவை கிடைக்கின்றன.

5. http://www.urbanfonts.com/:: அகரவரிசைப்படி அடுக்கப்பட்ட வகையிலும் இதில் எழுத்து வகைகள் உள்ளன. 8,000க்கும் மேற்பட்ட வகைகள் கிடைக்கின்றன.

6. http://www.dailyfreefonts.com : இங்கு 4,500 வகை களுக்கும் மேலாக எழுத்துவகைகள் கிடைக்கின்றன. இவற்றை எதற்காக, என்ன காரணங்களுக்காக, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வரையறைகளும் தரப்பட்டுள்ளன.

7. http://simplythebest.net/fonts/: ஆயிரக்கணக்கில் எழுத்து வகைகள் இருந்தாலும், எவை எவை இலவசம் என்று காட்டப்பட்டுள்ளது. மற்றவற்றிற்கான வரையறைகள் தரப்பட்டுள்ளன.

8. http://www.freefonts.com/: எழுத்து வகைகளுக்கான சர்ச் இஞ்சின் போல இது செயல்படுகிறது. 55,000 எழுத்து வகைகளுக்கு மேல் இதில் கிடைக்கின்றன. ஆனால் இவற்றின் பெயர்கள் தரப்படவில்லை. எந்த பாண்ட் நமக்குத் தேவைப்படுகிறதோ, அவற்றின் பெயரை நினைவில் கொண்டு நாம் தேட வேண்டும்.
மேலே கூறப்பட்ட தளங்களில் இருந்து பாண்ட் பைல்களை டவுண்லோட் செய்த பின் என்ன செய்திட வேண்டும்? அவை ஸிப் பைலா இருந்தால், அவற்றை அன்ஸிப் செய்து பாண்ட் பைலாக மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் சிஸ்டம் விஸ்டா எனில் அதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் "Install" என்பதில் அழுத்தவும். பாண்ட் இன்ஸ்டால் செய்யப்பட்டு பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.

எக்ஸ் பி சிஸ்டம் என்றால், பாண்ட் பைலை, விண்டோஸ் டைரக்டரியில் உள்ள பாண்ட்ஸ் என்னும் போல்டரில் காப்பி செய்துவிடவும். மேக் சிஸ்டம் எனில் பாண்ட் பைலில் டபுள் கிளிக் செய்திடவும். பின் "Install font" என்னும் பட்டனை அழுத்தவும்.


நன்றி: தகவல் தொழில்நுட்பம் -
வலைத்தளம் 
நன்றி -  அபூவஸ்மீ
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger