ஒவ்வொரு ஜும்ஆ உரையிலும் கஃப் சூரா ஓத வேண்டுமா?

தற்காலத்தில் சிலர் ஜும்ஆ உரையின்போது காஃப் அத்தியாத்தை ஓதுவது நபிவழி என்றும் ஒவ்வொரு ஜும்ஆவிலும் இதை கட்டாயம் ஓத வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். இதற்கு இவர்கள் பின்வரும் செய்தியை ஆதாரமாகக்கொள்கின்றனர்.
நான் வெள்ளிக்கிழமை அன்று ‘காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிரி­ருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரரி­) நூல் : முஸ்­ம் (1580)
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் இந்த அத்தியாயத்தை ஓதினார்கள் என இந்த ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் இன்று நாம் ஒவ்வொரு ஜுமுஆவிலும் இந்த அத்தியாயத்தை ஓத வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
இது சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு இந்த ஒரு அறிவிப்பு மட்டும் இருந்தால் இவர்களின் இந்த வாதம் சரி என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் இது தொடர்பாக இன்னும் பல அறிவிப்புகள் கூடுதல் விளக்கங்களுடனும் வார்த்தை வேறுபாடுகளுடனும் வந்துள்ளன. இவற்றையும் கவனத்தில் கொண்டாலே சரியான முடிவுக்கு வர முடியும்.
நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரண்டு ஆண்டு அல்லது ஓராண்டும் சில மாதங்களும் ஒரே அடுப்பையே பயன் படுத்திவந்தோம். நான் ‘காஃப். வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நாவி­ருந்தே மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி மக்களுக்கு உரையாற்றும் போது அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஹிஷாம் (ர­ரி) அவர்கள்
நூல் : முஸ்­ம் (1582)
இந்த ஹதீஸை அறிவிக்கும் உம்மு ஹிஷாம் (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் நடத்திய அனைத்து ஜும்ஆக்களிலும் கலந்துகொள்ளவில்லை. மாறாக குறிப்பிட்ட காலம் மட்டுமே நபி (ஸல்) அவர்களுடன் ஜும்ஆவில் கலந்துகொண்டுள்ளார்கள்.
இரண்டு ஆண்டு அல்லது ஓராண்டும் சில மாதங்களும் ஒரே அடுப்பையே பயன்படுத்திவந்தோம் என்ற வாசகம் இதை தெளிவுபடுத்துகின்றது.
இந்தக் காலம் ஓரு ஆண்டா? அல்லது இரண்டு ஆண்டுகளா? அல்லது ஒரு மாதமா? என்பதில் அறிவிப்பாளர்கள் இடையே கருத்துவேறுபாடு நிலவுகின்றது.
தப்ரானியில் இடம்பெற்றுள்ள அறிவிப்பில் ஒரு மாத காலம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானதாகும்.
நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரும் ஒரு மாதகாலம் (சேர்ந்து) தங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் ரொட்டி சுடுவதற்கு ஒரே அடுப்பே இருந்தது. எனவே நான் ஜும்ஆ நாளன்று மிம்பரின் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதியவற்றில் காஃப் அத்தியாயத்தை அவர்களிடமிருந்து மனனம் செய்துகொண்டேன்.
நூல் : தப்ரானீ (21226)
வேறுபட்ட இந்த கால அளவுகளில் எதை ஏற்றாலும் நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய ஒட்டு மொத்த ஜும்ஆக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அது குறிப்பிட்ட குறுகிய காலமாகவே இருக்கும். இந்த குறுகிய காலத்துக்குள் நடத்தப்பட்ட ஜும்ஆக்களைப் பற்றித் தான் உம்மு ஹிஷாம் (ர­) குறிப்பிட முடியும்.
எனவே இந்த செய்தி நபியவர்கள் நடத்திய அனைத்து ஜும்ஆ உரைகளையும் குறிக்காது. மாறாக குறிப்பிட்ட காலத்தில் இந்த அத்தியாயத்தை நபியவர்கள் தொடர்ச்சியாக ஓதியுள்ளார்கள் என்ற கருத்தையே இது தருகின்றது.
நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையிலும் அதிகமான ஜும்ஆக்களிலும் ஜாபிர் பின் சமுரா (ர­) அவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். இதை பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) நின்றவாறே உரையாற்றுவார்கள். பிறகு உட்கார்ந்துவிட்டு (மீண்டும்) எழுந்து நின்றவாறே உரையாற்றுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்தவாறே உரை நிகழ்த்துவார்கள் என்று எவரேனும் உன்னிடம் கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ர­ரி)
நூல் : முஸ்­ம் (1565)
ஜாபிர் பின் சமுரா (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய ஜும்ஆ உரையைப் பற்றி பின்வருமாறு விவரிக்கின்றார்கள்.
ஜாபிர் பின் சமுரா (ர­ரி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) குர்ஆன் (வசனங்களை) ஓதி, மக்களுக்கு உபதேசம் செய்து இரு (குத்பா) உரைகள் நிகழ்த்துவார்கள். அவ்விரு உரைகளுக்கிடையே அமர்வார்கள்.
முஸ்­ம் (1564)
நபி (ஸல்) அவர்களின் ஜும்ஆ உரையைப் பற்றி நன்கு அறிந்துவைத்திருந்த இந்த நபித்தோழர் நபியவர்கள் குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள் என்று பொதுவாகத் தான் கூறுகிறார். எல்லா ஜும்ஆ உரைகளிலும் காஃப் அத்தியாயத்தை ஓதுவது நபிவழியாக இருந்தால் இதை கண்டிப்பாக ஜாபிர் (ர­) அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு குறிப்பிடவில்லை.
எனவே ஜும்ஆவில் குர்ஆனுடைய எந்த வசனங்களை வேண்டுமானாலும் ஓதலாம். நபி (ஸல்) அவர்கள் கஃப் சூராவை ஓதியதும் இந்த அடிப்படையில் தான்.
நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை தொடர்ச்சியாக ஓதியதற்கான காரணத்தை பின்வரும் அறிவிப்பு தெளிவுபடுத்துகின்றது.
நான் ‘காஃப். வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
நூல் : முஸ்னது இஸ்ஹாக் பின் ராஹவைஹி (1963)
மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை தொடர்ச்சியாக ஓதியுள்ளார்கள் என்பதை இந்த அறிவிப்பு தெளிவாக எடுத்துரைக்கின்றது. நான் கற்றுக்கொண்டேன் என்ற உம்மு ஹிஷாம் (ர­) அவர்களின் கூற்றும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
காஃப் அத்தியாயத்தை ஓதுவது ஒவ்வொரு ஜும்ஆ உரையிலும் பேணப்பட வேண்டிய ஒழுங்கு முறை என்று சிலர் கூறிவருகின்றனர். இவர்களின் இக்கூற்று தவறு என்பதை இந்த செய்தி உணர்த்துகின்றது.
நபியவர்கள் இதை ஓதியதற்கு மக்களுக்கு கற்றுக்கொடுப்பது தான் காரணமாகும். மக்கள் கற்றுக்கொண்டு விட்டால் இதை ஓதவேண்டிய தேவை இல்லாமல் போய்விடும்.
மேலும் மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக இந்த சூராமட்டுமல்ல. குர்ஆனில் எந்த சூராவையும் இவ்வாறு தொடர்ச்சியாக ஓதலாம். நபி (ஸல்) அவர்கள் கஃப் சூராவைப் போன்று அது அல்லாத சூராக்களையும் ஜும்ஆ உரையில் மக்களுக்கு ஓதிக்காட்டியுள்ளார்கள்.
நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரும் ஒரு மாதகாலம் (சேர்ந்து) தங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் ரொட்டி சுடுவதற்கு ஒரே அடுப்பே இருந்தது. எனவே நான் ஜும்ஆ நாளன்று மிம்பரின் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதியவற்றில் காஃப் அத்தியாயத்தை அவர்களிடமிருந்து மனனம் செய்துகொண்டேன்.
நூல் : தப்ரானீ (21226)
மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக ஒரு குறிப்பிட்ட காலம் நபியவர்கள் இந்த அத்தியாயத்தை தொடர்ச்சியாக ஓதியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று ஜும்ஆவில் நாமும் தொடர்ச்சியாக குர்ஆனில் ஏதாவது ஒரு சூராவை ஓதி மக்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
ஒவ்வொரு ஜும்ஆவிலும் குறிப்பிட்ட இந்த அத்தியாயத்தை ஓதவேண்டும் என்றால் அவ்வாறு செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு உத்தரவிட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு நமக்கு உத்தரவிடவில்லை.
நன்றி - தமில்தவ்ஹீத் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger