Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

மருத்துவ பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்‏...

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகப் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30-க்குள் அனுப்ப வேண்டும். 2013-14ம்ஆண்டுக்கான மருத்துவ ஆய்வக பட்டயப்படிப்பு, செவிலியர் உதவியாளர் பயிற்சிகள்தொடங்கப்பட உள்ளன.



மாநகராட்சி மாணவ மாணவியருக்கும் மற்றும் மாநகராட்சியில் பணிபுரியும்பணியாளர்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசுசார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சியும்,இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் (அல்லது) இயற்பியல், வேதியியல்,விலங்கியல் மற்றும் தாவரவியல் (அல்லது) வாழ்க்கை தொழிற்கல்விப் பிரிவில்மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் தொழில் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் பிற்பட்டவர்கள், மிகவும் பிற்பட்டவர்கள் 50 சதவீதமும்,தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் 45 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். 2013 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் 17 வயதுக்கு மேல் 32 வயதுக்குள் இருக்கவேண்டும். இரண்டு ஆண்டுகள் வழங்கப்படும் இந்தப் பயிற்சிக்கு மாதக் கல்விக்கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.


செவிலியர் உதவியாளர்களுக்கான (பெண்களுக்கு மட்டும்) கல்வித் தகுதி 10-ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓராண்டு அளிக்கப்படும் இந்தப் பயிற்சிக்கு மாதக் கல்விக் கட்டணமாக ரூ. 75செலுத்த வேண்டும். 187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை,சென்னை-81-ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் ரூ. 50 செலுத்திவிண்ணப்பப் படிவத்தை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை4 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட்30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
 
  தொகுப்பு  - ராஜா முகம்மது
0 comments

நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா? அப்படியானால்...

நிறைய மக்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை சந்திக்கின்றனர். இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு, உடலில் உள்ள சில பிரச்சனைகளே காரணமாகும். 
0 comments

சோதனை வெற்றி: நீரிழிவு நோயாளிகளுக்கு செயற்கை கணையம் தயார்

உலகம் முழுவதும் நீரிழிவு நோய் அதிக அளவில் உள்ளது. இதனால் மனிதர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, அதை கட்டுப்படுத்த தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிப்பின் காரணமாக நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் குளுகான் என்ற 2 சுரப்பிகள் சரிவர இயங்காததால்தான் இந்த நோய் உருவாகிறது. இவற்றை கணையம் உற்பத்தி செய்கிறது.

இன்சுலின் 'பீட்டா செல்'கள் மூலமும், குளுகான் ஆல்பா 'செல்'கள் மூலமும் உற்பத்தியாகிறது. கணையம் பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. எனவே, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரோமன் ஹோவோர்கா தலைமையிலான நிபுணர் குழுவினர் கடந்த 5 1/2 ஆண்டு காலமாக தீவிர முயற்சி செய்து செயற்கை கணையத்தை உருவாக்கியுள்ளனர்.

இதன் பரிசோதனை இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்தது. அதில் கேம்பரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். நீரிழிவு நோய் பாதித்தவர்களிடம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கணையம் பரிசோதிக்கப்பட்டது இதில் 5 பேருக்கு ரத்தத்தில் குளுகோஸ் அளவு மிகவும் குறைந்தது. அதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கம் மிகவும் குறைவாக காணப்பட்டது.

எனவே, பரிசோதனை வெற்றி பெற்றதன் மூலம் அடுத்து 24 பேரிடம் இந்த செயற்கை கணையம் பரிசோதிக்கப்படுகிறது. ஆகவே, இனி நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஊசி மூலம் உடலில் இன்சுலின் செலுத்த வேண்டியதில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments

மினரல் வாட்டர் நன்மையா? தீமையா?

குடி தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்படும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.
அந்த காலங்களில் ஊர் தோறும் நல்ல தண்ணீர் கிணறுகள். குளங்கள், நீர் தேக்கங்கள் இப்படியாக சுத்தமான குடி நீரை மக்கள் அருந்தி வந்தனர். 
இன்றோ, வீடுகள் தோறும் மினரல் வாட்டர் கேன்கள், பாக்கெட் வாட்டர், பாட்டால் வாட்டர், என்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை.
தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ இதை பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் பொருளாக்கி விட்டனர் இந்த கார்பரேட் கொள்ளையர்கள். உலகம் முழுவதும் தண்ணீர் இன்று ஒரு தலை சிறந்த பிசினெஸ்.
1992ல் நடைபெற்ற சர்வதேச நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு நீருக்குப் பொருளாதார மதிப்பு உள்ளது. எனவே  இதை ஒரு வணிகப்பண்டமாகப் பாவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது என்றால் பார்த்து கொள்ளுங்களேன் 
உலகின் பல பகுதிகளில் நல்ல தண்ணீர் அதாவது குடி தண்ணீர் பற்றாக்குறை, காணப்படுகிறது. இதற்க்கு காரணம் குடிதண்ணீர் வேகமாக மாசு அடைந்து வருவதே. தொழிற்சாலைக் கழிவுகள், காடுகள் அழிப்பு, சுற்று சூழல் மாசுபடுதல் இவற்றால் நல்ல தண்ணீர் வளங்கள் அழிந்து குடி தண்ணீருக்கு பெரும் தட்டுபாடு நிலவி வருகிறது.
கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பது போல் தண்ணீரை சுத்திகரிக்க தேவையில்லை. லைப் வாட்டர், அக்வாஃபினா, பிஸ்லரி, பெய்லி, நெஸ்ட்வேயின் பவர் லைஃப், பார்லே, கேரிகோ போன்ற நிறுவனங்களின் தண்ணீரில் ஆர்கட்னா குளோரின், ஆர்கட்னா பாஸ்பரஸ் என்ற நச்சு பூச்சிக் கொல்லி  மருந்து கலக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது மினரல் வாட்டர் என்கிற பெயரில் விற்கப்படும் தண்ணீர்கள் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டதும்  அல்ல. 
மேலும் இந்த தண்ணீரை அருந்துவதன் மூலம் கேன்சர் போன்ற ஆள் கொல்லி நோய்கள் ஏற்ப்படுகின்றன. இதனால் மக்கள் இந்த மினரல் வாட்டரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்க்கு பதிலாக தரம் வாய்ந்த பில்ட்டர்களை வாங்கி நமது கார்பரேசன் வாட்டரை பில்ட்டர் செய்து குடித்தல் அதுவே போதுமானது. அல்லது தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சீரகம் அல்லது பெரும் சீரகம் இட்டு அருந்தலாம். சுருங்க சொன்னால் மண்பானையில் துளசி இலைகளை போட்டு தண்ணீரை தேக்கி அருந்தி வருவது மிகவும் நன்மைபயக்க கூடியது.

சிந்திக்கவும் 
0 comments

 மருந்து மாத்திரைகளின் பரிசோதனை முன்னோட்டம் – ஒரு அதிர்ச்சி தகவல் (clinical trail)


Clinical Trial –ஒரு இளம் கிரிக்கெட் வீரர் விளம்பரத்தில் தோன்றி சூப்பர் பைக் என்று ஒரு புது வகை இருசக்கர வாகனத்தை கடைதெருவில் விற்க போகும் முன்னால் அது பல்வேறு ஆய்வுகளை கடந்து அதாவது தேர்ந்த பொறியாளர்கள் பரிசோதனை செய்து விற்கலாம் என்று சொன்ன பிறகே நம் கைகளில் வந்து தார்ச்சாலையில் உருளும். ஒரு பைக்கே இதனை தாண்டி வரும் போது நம் நோய்வாய்ப்படும் போது உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் எப்படி.. சில தெரிந்த தெரியாத உண்மைகள் நம்மை சுற்றி மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் விடுகின்றன. மக்கள் தொகை வளர வளர இன்று நோய்களும் அதன் எண்ணிக்கையும், தாக்கமும் அதிகரித்து விட்டன. செயல் வீரியம் மிக்க மருந்துகளை மார்க்கெட்டில் மருந்து கடைகளில் யார் அதிகம் விற்கிறார்களோ அவர்களுக்கு பணம் வரவும் அதிகம்.
சாமுராய், ஈ போன்ற சில படங்களை நாம் கடந்து வந்து விட்டோம். சில படங்களை நாம் நிழல் படமாகவோ அல்லது பொழுது போக்கு சித்திரமாக கண்டு கழித்து விட்டு அடுத்த படத்திற்க்கு தயாராகி விடுகிறோம். அல்லது இது எங்கோ நடந்து கொண்டு இருக்கலாம் இயக்குனர் அழகா சொல்லிருக்கிறார் என்று ஒரு கைதட்டலை பரிசளித்து மகிழ்வதில் நம் உட்சபட்ச உதாசீனம் வெளிப்படுகிறது. அந்த படங்களை பார்த்து நம் சமூகம் விழிப்படைந்து இருந்தால் சமீபத்திய ஒரு அறிவிக்கை நம் நாட்டுக்கு எல்லையில் விரிந்த மாறுப்பட்ட நிலையை இன்று நம் நாடு அறிந்து இருக்காது. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு சீனா, இந்தியாவில் உள்ளதாக சமீபத்திய தகவல் கூறுகிறது. அதாவது ஆட்டு சந்தையை போன்று மனித சந்தையாய் உள்ளது நம் இந்திய. மருந்துகளை விற்பதற்கும் அதை வணிகம் செய்வதற்கும் மட்டும் அல்லாமல் அதை நம் மீதே சோதித்து பார்க்கும் சந்தையாகவே நம் மக்களை பாவித்து கொள்ளும் ஒரு அடிமாட்டு சந்தையர்களாக மாற்றி போட்டு விட்டது இந்த மருத்துவ பரிசோதனைகள்.
ஒரு புதிய மூலக்கூறுகளை கொண்ட மருந்தை சந்தைக்கு கொண்டு வந்து விற்பதற்கு முன்னால் எலிகள், guniea pig, பறவைகள், குரங்குகள்(தசாவதாரம்) போன்ற விலங்குகளுக்கு வலுக்கட்டயமாக கொடுக்கப்பட்டு அதன் சாதகம் பாதங்களை கண்டறிந்த பின்பே மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு பின் அதனை விற்பதற்கு தகுந்த அனுமதி பெற்று மருந்தை மருந்து கடைகளில் விற்கவோ அல்லது மருத்துவர்களால் பிறருக்கு பரிந்துரை செய்வோ முடியும். இவ்வளவு தேர்வுகளை கடந்தே நம் வாய்க்குல்லோ அல்லது ஊசி மருந்தாகவோ உட்புக முடியும். இந்த புதிய மருந்து கண்டுபிடிப்பின் ஆய்வுகளுக்கு உள்ளாகும் விலங்குகள் மருந்துகளின் அளவு, வேதியல் இயக்க மாறுபாடுகள், வீரியம் இது போன்ற பல மாறுபாடுகளால் அது இறந்தோ அல்லது உறுப்புக்கள் வேலை செய்யாமலோ மூளை, கல்லீரல், சிறுநீரகம் இயக்கம் நின்றோ அல்லது குழம்பியோ போவதால் மரண நிலையை எட்டலாம்.
மனிதர்கள் மீது நேரடியாக பரிசோதனை செய்யும் பொழுது மனிதனுக்கும் இதே போன்ற நிலைமை ஏற்படுத்தலாம். அதாவது மனிதர்களை நேரிடியாக மேல் சொன்ன எதுவும் செய்யாமல் விலங்குகளாக உட்படுத்தி (நோவேல் ஸ்டடி) மருந்தை நமக்கு தெரியாமல் நம் மீதே திணித்து ஆய்வுகளின் கால அளவை குறைத்து மருந்துகளை துரிதாமாக சந்தையில் கொண்டு வந்து வணிகமாக்கி விற்பதே இவரகளின் மிக முக்கிய நோக்கம். இவர்களை லாப கணக்கை அடைய நாம் பலிக்கடா என்பது சரியே. அதாவது நம்மையே விலங்காக பாவிப்பதே நடந்தது கொண்டு இருந்தது.
ஆனால் சில மருந்து நிறுவனங்கள் ஒரு புதிய மூலக்கூறு நிரம்பிய மருந்தை முதல் கட்டமாக விலங்குகளின் மீது ஆய்வுகளை செய்யாமல் மனிதர்களை நேரடியாக பரிசோதித்து சில பல மனித உயிர்களை காவல் வாங்கிய கதைகள் பல. இவ்வளவு மனிதர்கள் இறந்து இருக்காலாம் என்று ஒரு எண்ணிக்கை இங்கே தட்டச்சு செய்ய விரும்பவில்லை. “பல உயிர்கள்” என்பதின் இருட்டு வாரத்தையில் நிறைய வெளிச்ச எண்ணிக்கை அடங்கியுள்ளது. மருந்துகளை நேரடியாக மனிதர்கள் மீது பரிசோதிக்க உண்பவரிடம் கூட அனுமதி பெறாமல் அவர்களை கொன்று குவித்து இருக்கிறார்கள். இப்படி அனுமதி பெறாமல் நடந்து கொண்டிருந்த பல்வேறு மருந்து முன்னோட்ட ஆய்வுகளையும், எதிர்காலத்தில் நடக்க போக விருந்த ஆய்வுகளையும் தடுத்த நிறுத்தியும், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நேராமல் இருக்க தண்டனைகளும், அதற்கான சட்டமும் கடுமையாக்கபட்டுள்ளன என்பது ஒரு மகிழ்வான செய்தி. நம் மருந்து நிறுவனங்களை நம் நாட்டில் கட்டுபடுத்தா விட்டால் இது போன்ற இன்னும் நிறைய ஆய்வுகளை தொடர்ச்சியாய் செய்து கொண்டே பல மனிதர்களை கொன்று குவித்து கொண்டே இருக்கும். இந்த மருந்து ஆய்வுகளின் விளைவால் இறந்த, சுகாதார வாழ்வு பறிபோன பலரை கண்டு விளித்து கொண்டுள்ளது நம் நாட்டின் சட்ட திட்டங்கள். அமெரிக்க ஐரோப்பிய மருந்து நிறுவனங்கள் நம் நாட்டில் இதற்காக விரித்திரிந்த கூடாரங்கள் இன்று பெரும்பாலும் மூடப்பட்டு இருக்காலம் நீங்கள் இதை படிக்கும் நேரம்.
உங்கள் மருத்துவர்கள் உங்களுக்கு தரும் மருந்துகளில் (sample not for sale) முத்திரை இருந்தால் உசார் உசார். இதுவும் ஒரு பரிசோதனையே. உங்களின் நோய்க்கு அதை உபயோகித்து பார்த்து சந்தை படுத்த எவனோ லாபம் அடைய நம் கோவணம் உருவப்படுகிறது என்ற அர்த்தத்தை உணரலாம். உலகமயமாக்கல், வணிகம், வளர்ச்சி, மக்கள் தொகை போன்ற பல்வேறு வார்த்தை ஜாலங்கள் இது போன்று நடைபெற நம் நாட்டு மக்கள் பலியிடப்படுவது ஏமாற்றமே. மூலிகைகளை தொலைத்து, சத்தான உணவு முறைகளை தொலைத்து, உடற்பயற்சியின் மகத்துவம், உழைப்பின் தேவையை மறந்த நமக்கு இது தேவையே என்று சொன்னால் அது பொய்யாகாது. உணருவோம் நம் மகத்துவத்தை நம் உதிரம் நாம் சிறப்பதற்கே.
நன்றி - கீற்று
0 comments

எய்ட்ஸ்சினை விட கொடிய நோய் கொணோரியா... ஓர் எச்சரிக்கை!!!

மனிதர்களை மிரட்டும் எய்ட்ஸ் நோய்க்கே இன்னும் சரியான அளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் மற்றொரு பால்வினை நோய் மக்களை அதிகபட்சமாக அச்சுறுத்தி வருகிறது.



 பீதியை கிளப்பும் கொணோரியா 
தமிழில் வெட்டை நோய் என்றும் ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்றும் அழைக்கப்படும் இந்த நோய்தான் இப்போது பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது.


10 கோடி பேர் பாதிப்பு 

உலக அளவில் பார்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐநா தெரிவித்துள்ளது. இது பாக்டீரியாவால் பரவும் நோயாகும்.



நோய் எதிர்ப்பு மருந்து இல்லை 
இந்த வெட்டை நோய் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லையாம். இந்தநோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும் என இங்கிலாந்தில் நடக்கின்ற ஒரு மைக்ரோ பயாலஜிஸ்டு மாநாட்டில் எச்சரிக்க உள்ளனர் நிபுணர்கள்

.


காலம் தாழ்த்தும் நிபுணர்கள் 
வெட்டை நோயை எதிர்க்கவல்ல புதிய அண்டிபயாடிக் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நோயாளிகளுக்கு மற்ற சிகிச்சைகளைத் தந்து காலம் தாழ்த்துவதைத் தவிர சுகாதாரத்துறை நிர்வாகிக்களுக்கு வேறு வழியில்லாமல் போகலாம் என இந்த மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.



ஆண்களுக்கு அறிகுறிகள் 
இந்த நோய் தொற்று ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஆண் உறுப்புக்களில் இருந்து மஞ்சள் நிற திரவம் வெளிப்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உணர்வு ஏற்படும்.



பெண்களுக்கு அறிகுறிகள் 
பெண்களின் கருப்பைக் கழுத்துப் பிரதேசம் தொற்று ஏற்படும். அதனால்தான் நோய் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. அடிவயிற்றில் வலி ஏற்படும், ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். பெண் உறுப்பில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய மஞ்சள் நிற திரவம் சுரக்கும்.



உறவு கொள்ளலாமா? 
இந்த நோய் தாக்குதல் இருக்கும் போது வாய் வழி உறவில் ஈடுபட்டால் தொண்டையில் கரகரப்பு, தொண்டையில் தொற்றுநோயும் ஏற்படும். அதேசமயம் மற்ற முறையிலான உறவின் மூலம் நோய் தொற்று அதிகமாக சீல் வடியவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.



மருந்து தேவை 
இம்மாநாட்டில் பாலுறவு நோய்கள் சம்பந்தப்பட்ட இங்கிலாந்தின் முன்னணி நிபுணரான பேராசிரியை கேத்தி ஐசன் குரலெழுப்பவுள்ளார். அதே சமயம் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கங்கள், மேம்பட்ட நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் போன்றவை அவசியம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.


கர்ப்பிணிகள் ஜாக்கிரதை 

கர்ப்பகாலத்தில் தாய்க்கு கொணோரியா தொற்று இருக்கும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இல்லையென்றால் பிரசவத்தின் பொழுது குழந்தையின் கண்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி - ஒன் இந்தியா 


0 comments

மே 5 எம்.பி.பி.எஸ் விண்ணப்பம்

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுபடிப்பில் மாணவர்களச் சேர்க்க வரும் மே 5 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.இ. கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த வசதியாக வரும் மே 4 முதல் பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. அதேபோன்று எம்.பி.பி. எஸ். 
படிப்பிலும் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம்,கலந்தாய்வு ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க மருத்துவக்கல்வியை நிர்வகிக்கும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மே15ஆம் தேதி எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு எப்போது?
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில்தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. பி.இ.கலந்தாய்வு ஜூன் 21இல் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக ஜூன் 15அல்லது ஜூன் 17ஆம் தேதி எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வை நடத்த அரசுதிட்டமிட்டுள்ளது.

25,000 விண்ணப்பங்கள்: பிளஸ் 2 பாடத் திட்டத்தில் இயற்பியல்- வேதியியல்-உயிரியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்பில் சேர அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது? பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு மே 22ஆம்தேதி வெளியானது. எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்-கலந்தாய்வு, பி.இ.விண்ணப்ப விநியோகம்-கலந்தாய்வு ஆகியவை இந்த ஆண்டு முன்கூட்டியேதொடங்க உள்ளதால், பிளஸ் 2 தேர்வு முடிவு மே 10ஆம் தேதிக்குள் வெளியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கம்போல் எம்.பி.பி.எஸ்.-பி.டிஎஸ். (பல் மருத்துவம்) ஆகிய இரண்டுபடிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் விநியோகிக்கப்படும். விண்ணப்பக்கட்டணம் ரூ.500. கடந்த ஆண்டு முதல்கட்டமாக 25 ஆயிரம் விண்ணப்பங்களும்பின்னர் கூடுதலாக 5,000 விண்ணப்பங்களும் அச்சடிக்கப்பட்டன. அதேஎண்ணிக்கையில் இந்த ஆண்டும் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படும் என்று தெரிகிறது.

10 மற்றும் +2 ஆம் வகுப்புக்கு பிறகு உள்ள படிப்புகள் குறித்து அறிந்து கொள்ளமாணவரணி பக்கத்தோடு இணைந்திருங்கள்


www.tntjsw.net &  www.fb.com/tntjsw
0 comments

போலியோ மருந்து கண்டுபிடித்து ஊனத்தை ஒழித்த விஞ்ஞானி ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி மரணம்

பிலடெல்பியா: போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி 15-04-2014 இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 96. பிறக்கும் போது ஊனமாக பிறந்துவிட்டால் விதியே என்று விட்டுவிடலாம். ஆனால் சுகமாக பிறந்து நன்றாக ஓடி ஆடி விளையாடிய பிள்ளைகள் திடீரென நோய் தாக்கி நடக்க முடியாமல் ஊனமடைவது என்பது தாங்க இயலாத துயரம். இந்த துயரத்திற்கு முடிவு கட்டும் வகையில் சொட்டு மருந்து ஒன்றினை கண்டுபிடித்தார் ஹிலாரி கோப்ரோவ்க்ஸ்கி..




போலியோவிற்கு முடிவு... இவரது இந்த அரிய கண்டுபிடிப்பு உலக நாடுகளை உலுக்கி வந்த போலியோவிற்கு முடிவினை ஏற்படுத்தியது. இன்றைக்கும் லட்சக்கணக்கான இளம் தலைமுறையினர் ஹிலாரி கோப்ரோவ்ஸ்கியை வாழ்த்துகின்றனர். வைரஸ் நோய் தொற்றினால் போலியோ ஏற்படுகிறது மனிதனின் மலம் மற்றும் கழிவுகளில் போலியோ வைரஸ் காணப்படும். இவ்வைரஸினால் மாசுபட்ட உணவுகளை உட்கொள்ளும் போது போலியோ பரவுகிறது. பெரும்பாலான நேரங்களில், இவ்வகை வைரஸ் மலத்திலிருந்து வாய் வழியாகவே ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது. சிறுபிள்ளைகளுக்கு போலியோ ஏற்படும் அதிக ஆபத்து உள்ளது. அவர்களின் வாழ்க்கையை முடக்கிவிடும்.




சொட்டு மருந்து போலியோ ஏற்படாமல் தடுக்க இன்றைக்கு இந்தியாவில் சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியினால் போலியோ இல்லாத சமுதாயம் உருவாகியுள்ளது. இதற்கு காரணமாக விஞ்ஞானி ஹிலாரி கோப்ரோவ்ஸ்க்கியை இந்த நேரத்தில் நாம் நினைவு கூறவேண்டும்.





திறமையான வைராலஜிஸ்ட் மிகச்சிறந்த வைராலஜிஸ்ட் என்று போற்றப்படும் ஹிலாரி கோப்ரோவ்ஸ்க்கி பிலடெல்பியாவில் உள்ள விஸ்ட்டர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் இயக்குநராக 1957ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டுவரை பணிபுரிந்தார்.






எதிர்கால தலைமுறை பிறக்கும் போது நன்கு இருக்கும் குழந்தைகள் போலியோவால் தாக்கப்பட்டு ஊனமாவது அதிகரித்து வந்தனர். இந்த நோயில் இருந்து எதிர்கால தலைமுறை பாதுகாக்கும் வகையில் ஹிலாரி போலியோ மருந்தினை கண்டுபிடித்தார். இதனால் பல குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டது. இதனால் தற்போது பல உலக நாடுகள் போலியோ அற்ற நாடுகளாக உருவாக காரணமாகியுள்ளது.




சொந்த வீட்டிலேயே மரணம் பிலடெல்பியாவில் வசித்து வந்த ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி, கடந்த பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவர் வாழ்ந்த வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது என்று அவரது மகன் தெரிவித்துள்ளார்


.

விஞ்ஞானி மட்டுமல்ல அறிவாளி போலியோ சொட்டு மருந்தினை கண்டுபிடித்து, உலகுக்கு மிகப்பெரிய நன்மையைச் செய்துள்ள கோப்ரோவ்ஸ்கி, மிகச் சிறந்த மனிதராகவும், உலகிலேயே மிகச் சிறந்த அறிவாளியாகவும் வாழ்ந்ததாக அவரது மகன் குறிப்பிட்டுள்ளார்.



நன்றி - oneindia 

0 comments

கேன்சரைத் தடுக்கும் 8 மூலிகைகள்... உங்க அடுப்பாங்கரையில தாங்க இருக்கு!

நம் நாட்டு சமையலின் பாரம்பரிய தாரக மந்திரமே, ‘உணவே மருந்து என்பது தான்'. அஞ்சரைப்பெட்டியில் உள்ள அனைத்தும் மூலிகைப்பொருட்கள் என்பது நம்மில் பலருக்கு மறந்தே போய் விட்டது. சுவிஸ் நாட்டின் நோவர்ட்டிஸ் நிறுவனம் இந்தியாவில் கேன்சர் நோய் குணப்படுத்தும் மருந்துக்கு காப்புரிமை கேட்டு தொடரப்பட்ட அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ள நிலையில், கேன்சர் வராமல் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். வருமுன் தற்பாதுக்காத்துக் கொள்வது தானே புத்திசாலித்தனம். காயங்களுக்கு மஞ்சளைக் கட்டும் நமது பாட்டிமார் வைத்தியத்தை விட்டு நாம் ரொம்பவே விலகி வந்து விட்டோம். மஞ்சளிலும், குக்குமப்பூவிலும் இல்லாத மருத்துவக்குணங்களா?. 



மஞ்சளின் மகிமை: கேன்சர் செல்களை அழிப்பதில் மசாலாக்களின் ராணி மஞ்சளின் மகிமை முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.




பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல் எனும் மூலப்பொருள் கேன்சர் செல்களின் புற்றுநோய் பிசின் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைக்கிறது. வறுக்கப்பட்ட பெருஞ்சீரகத்தூள் சேர்க்கப்பட்ட தக்காளி சூப் கேன்சர் நோயாளிகளுக்கான விரிவான நிச்சயமாக உணவு ஆகும்.



குங்குமப்பூ: இயற்கையான காரடெனாய்டு டை கார்போசிலிக் அமிலம் எனப்படும் குரோசிடின் குங்குமப்பூவில் அதிகமாக காணப்படுகிறது. கேன்சருக்கு குட்பை சொல்லும் சக்தி குங்குமப்பூவிற்கு உண்டாம்.






 சீரகம்: அடுத்ததா சீரகம். ஜீரண சக்திக்கு உதவுற சீரகம்ல, ‘ தைமோகுயினோன்' இருக்கற மூலப்பொருள் கேன்சருக்கு மருந்தா மாறுதாம்.


இலவங்கப்பட்டை: தினமும் அரைகரண்டி லவங்கத்தூளை எடுத்துக்கொண்டால், கேன்சர் அபாயங்கலில் இருந்து நம்மை நிச்சயம் தற்காத்துக் கொள்ளலாமாம். இயர்கையாகவே உணவை கெட்டுப் போகவிடாமல் காக்கும் இதில் கூடுதலாக அயர்ன்னும், கால்சியமும் உள்ளது.



மிளகாய் விதைகள்: இரண்டு கப் திராட்சைகளை சாப்பிடுவதற்கான பலனை, ஒரு ஸ்பூன் மிளகாய் விதைகல் தந்து விடுகின்றனவாம். இதில் உள்ள குவார்சிடின் எனும் மூலப்பொருள், புற்றுப்பண்பு உயிரணுக்களை அழிப்பதற்கான, மருத்துவப் பொருளாக பயன் படுகிறது.



மிளகு: லுகீமியாவின் செல்களை அழிப்பதிலும், குறைப்பதிலும் மிளகின் பங்கு இன்றியமையாதது. நோய்க்கிருமிகளுக்கு மிளகைப் பார்த்தால் கொஞ்சம் பயம் தான். எதிரி வீட்டுக்கு போனாலும் 3 மிளகை சாப்பிட்டால், விஷம் கூட முறிந்து விடும்னு சும்மாவா சொல்றாங்க.


இஞ்சி: கொழுப்பை குறைப்பதிலும், உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதிலும், கேன்சர் கிருமிகளை அழிப்பதிலும் வல்லவன் இஞ்சி.

நன்றி - தமிழ் onindia 


0 comments

மூளை வளர என்ன சாப்பிடலாம்?

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். 

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும். 

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். 

பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. 
இதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.
0 comments

புதினாக்கீ​ரையின் மக(ரு)த்துவம்

அடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக . . .
mintசிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது. புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.
கர்ப்பஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த
கருத்தரித்த இரண்டாவது மாதம் முதல் கருத்தரித்திருப்பதை மெய்ப்பிக்க, காலை வேளையில் வாந்தி உண்டாகும். சில சமயம் ஆகாரம் உண்டவுடன் வாந்தி வரும். தலைச் சுற்றல், சோம்பல், அரோசிகம் ஏற்படும். இதை மசக்கை வாந்தி என்று கூறுவார்கள். தினசரி இப்படி இருக்கும். 2, 3 வாரங்களுக்குப் பின் இது தானே மாறிவிடும். சில பெண்களுக்கு பிரசவிக்கும் வரை வாந்தி சாயந்திர வேளைகளில் ஏற்படும். இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன்படுகிறது.
புதினாக்கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்து, உரலில் போட்டு இடித்து அதை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். பிழிந்த சாறு இரண்டு ஆழாக்களவு எடுத்து அதைத் துணியில் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, களிம்பு ஏறாத ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் இந்தச் சாற்றைவிட்டு அதில், ஒரு சீசா அளவு அதாவது சின்னபடிக்கு ஒரு படியளவு சீமைக் காடியை விட்டு நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு அத்துடன் அரை கிலோ பழுப்புச் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து, இந்தச் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தின் மேல் துணி வேடு கட்டி அதன் மூலம் வடிகட்டி எடுத்து, முதல் பாத்திரத்தைக் கழுவி அதில் இதைவிட்டு, அடுப்பில் வைத்து, நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த சமயம் மருந்து சர்பத் போல பாகுபதமாகும். நன்றாக ஆறியபின் அதை ஒரு சுத்தமான சீசாவில் விட்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாந்தி வரும் சமயம் இந்தப் பாகில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து உள்ளங்கையில் விட்டு, நாவால் நக்கி அதை வாயில் வைத்துச் சுவைத்து விழுங்க வேண்டும். இந்த விதமாக ஒரு நாளைக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் சுவைக்கலாம். எந்த விதமான கெடுதலும் ஏற்படாது.
ரொட்டி, ஆப்பம், தோசை, இட்டிலி இவைகளை இந்தப் பாகில் தொட்டுத் தின்னலாம். ருசியாக இருக்கும். காலை வேளையில் இவ்விதம் சாப்பிடுவது நல்லது.
புதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும். இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயுவு கோளாறுகள், வயிற்றுப் போக்கு, பொருமல் போன்ற நோய்கள் குணமாகும்.
புதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும். புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும். தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.
புதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம். இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும். கஷ்டத்தைப் பாராமல் ஒவ்வொருவரும் புதினா பற்பொடி தயாரித்து பல்துலக்கி வந்தால், பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். பல் சம்பந்தமாக எந்த வியாதியும் வராது. இதைத் தயாரிப்பதும் சுலபம் தான்.
புதினாக்கீரையை எடுத்து, சுத்தம் பார்த்து, அதை ஒரு பெரிய தட்டு அல்லது முறத்தில் போட்டு வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும். புதினா காய்ந்து சருகான பின் உரலில் போட்டு இடிக்கவேடும். இந்த சமயம் இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு கறி உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்துச் சல்லடையில் சலித்து, கண்ணாடி அல்லது மங்கு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வேண்டும். தகர டப்பா கூடாது.
- செங்கை நில‌வ‌ன் (எ) க‌திர்.செல்வ‌ம்
நன்றி - கீற்று 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger