Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label அனாச்சாரங்கள். Show all posts
Showing posts with label அனாச்சாரங்கள். Show all posts

உலக 2வது எயிட்ஸ் தினம் பெப்ரவரி – 14


HIV
மனித குலத்தின் ஈருல வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திருமறைக் குர்ஆன் ஜாஹிலியாக்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை ஏற்படுத்திய மாற்றங்களையும், சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்று விடும். நாங்கள் வாழுகின்ற சமகால தேசிய, சர்வதேச சமூக அமைப்புக்கள் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான ஜாஹிலிய்யத்தின் அடிப்டை அடித்தளத்தில் அமைந்திருப்பதை அவதானிக்கிறோம்.
ஓவ்வொரு கணப்பொழுதும் நமது முஸ்லிம் சமூக அமைப்பில் அரங்கேற்றப்படும் அரக்கத்தனமான ஆபாச அலை மாபெரும் புயலாக ஆர்த்தெழுந்து நம்மை மூழ்கடிக்க முனைகிறது. நாகரீகம் என்ற பெயரில் அநாகரீகம் முஸ்லீம் சமூகத்தின் மீது முடுக்கி விடப்படுகின்ற தனித்துவத்தை தகர்த்து எறியக்கூடியவாறு அபாயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக முஸ்லீம்கள் அதன் நண்மைகளை விட தீமைகளுக்கே அதிகம் ஆளாகின்ற ஒரு மோஸமான சூழல் உருவாகியுள்ளது. நவீன நாகரீகம் என்ற பெயரில் இளைஞர் யுவதிகளிடத்தில் கட்டுப்பாடற்ற உறவைத் தோற்றுவிக்கும் அபாயமும், ஆடைக் குறைப்பும், ஒழுக்கச் சீர் கேடுகளும் இன்று பரந்து காணப்படுகின்றது. முஸ்லீம்களைப் பாதுகாக்க வேண்டுமெனின், இன்றைய முஸ்லீம் பாடசாலைகள் இஸ்லாமிய மயப்படுத்தப்பட வேண்டும்.
இன்று பல் வேறுபட்ட சமூக தீமைகளுக்கு வழிகோலுவது கட்டுப்பாடற்ற ஆண்- பெண் உறவாகும். இன்று கல்வி கற்க பாடசாலை செல்லும் அதிகமான மாணவர்களின் புத்தகப்பையில் சினிமா நட்சத்திர காவாலிகளின் வண்ணப் புகைப்படங்கள், கிரிகெட் ஹீரோக்களின் ஸ்டிக்கர்கள், அழகு இராணிகளின் ஆபாசமான அசிங்கமான போட்டோக்கள், விரசமான ஆபாச நூல்கள், மஞ்சல் பத்திரிகைகள், புத்தகங்கள், நீலப் பட வீடியோ சீடிக்கள். காதல் கடிதங்கள், கையடக்க ரேடியோ, கையடக்க வீடியோ கெமரா போன், போன்ற பொருட்களைக் கானமுடிகின்றது. இவ்வாரு மாணவர்கள் பயம் எதுவுமின்றி இவைகளை பாடசாலைக்கு கொண்டு செல்லுகின்றனர். அது அதிபர் ஆசிரியர்களின் கட்டுப்பாடும் கண்டிப்பின்மையும், இஸ்லாமிய முதிர்ச்சியான அறிவு வழங்கப் படாமையும், மாணவர்களுக்கு சரியான வழிகாட்டல்கள், பண்பாடு, ஒழுக்கம் போன்றவை, போதிக்கப்படாமையுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
மொத்தத்தில் முஸ்லிம் பாடசாலைகள் இஸ்லாமிய மயப்படுத்தப்படாமையே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. அதே போன்றுதான் அதிகமான வாழிபர்கள் அந்நிய மத கலாசாரத்தை இஸ்லாமிய மத கலாச்சாரத்தைப் போன்று பின்பற்றி வருகின்றனர். அவர்களின் உடையைப் போன்று தமது உடையை அணிவதற்கு முயற்சிக்கின்றனர்
அல்லாஹ் குர்ஆனில்: நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறிஸ்த்தவர்களையும், உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்கள் மற்றவர்களுக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொருப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சார்ந்தவரே! அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல் மாயிதா-51)
இன்னும் அதிகமான வாலிபர்களைப் பார்த்தால் நரகத்திற்கு கூட்டம் சேர்க்கின்ற சினிமா வேடர்களை பின்பற்றும் முகமாக அவர்கள் முடி வெட்டுவது போல தனது அழகான தலை மயிரை பாதிப் பகுதியை சிரைத்தும் மீதிப்பகுதியை விட்டும் விடுகின்றனர். இது பார்ப்பதற்கு ‘எலி கடித்த தேங்காய்ப் பாதியைப் போன்று” மிக அசிங்கியமாக இருக்கின்றது.
அதே போன்றுதான் தலை மயிருக்கு வித விதமான நிறங்களைப் போட்டு தங்களை அந்நியர் என்று காட்டாமல் காட்டிக்கொள்கின்றனர். “ஹீரோ” யாராவது தனது “ட்ரவுசரில்” ஒரு சிறிய ஓட்டை ஒன்றிட்கு பொத்தல் போட்டிருந்தால் தனது புதிதாக தைக்கக் கூடிய ஆடையிலும் அந்த போத்தனைக் காணலாம்.
இன்னும் தாடியுடைய விடயத்தைப் பொருத்த மட்டில் நமது வாழிபர்கள், வயோதிபர்கள் அனைவரும் காபீர்களையே பின்பற்றுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தாடியை வளருங்கள் மீசையைக் கத்தரியுங்கள். என்று சொன்னார்கள் இன்று பார்த்தோமேயானால் சில வயோதிபர்கள் மாத்திரம் தாடியை வளர்க்கின்றனர். ஆனால் இளைஞர்களின் பலர் வழிக்கின்றனர். வாழிபர்களைப் பார்த்தால் “’ஏன்டா தாடி வளர்த்து கேடி மாதிறித் திரிகின்றாய்” நீ என்ன காதலில் தோற்று விட்டாயா? என்று நண்பர்கள் கேலி பன்னுவார்கள்
என் இஸ்லாமிய வாழிபர் சமுதாயமே! நபி மொழியைப் பயந்து தாடியை வளருங்கள். காதலென்ற இம்சையை கலற்றி எறியுங்கள். இல்லறம் இனிக்க இஸ்லாத்தைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையுங்கள்.
மதுவில் மூழ்கிய இளைஞர்கள்.
அல்லாஹ் குர்ஆனில் ‘நீங்களே உங்கள் ஆத்மாக்களை அழிவின் பக்கம் போட்டுக்கொல்ல வேண்டாம். என்று சொல்லிக்காட்டுகிறான்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக்கொண்டேயிருப்பார்.( முஸ்லிம் – 175).
நாகரீகம் என்ற போர்வையில் பல தீமைகளை நாமே தேடிக்கொள்கிறோம். இன்று எம் இளைஞர்களில் அதிகமானோர் புகை பிடித்தல் போதைப் பொருட்கள் தூல், கன்ஞா, அபின், போன்ற ஆற்கொள்ளி நோய்கலைப் பறப்பக்கூடிய தீய பொருட்களையெல்லாம் உபயோகிக்கின்றனர். மற்றும் இது போன்ற பல தீமைகளை நாகரீகம் என்று பறைசாற்றிக் கொண்டு தவறான பாதைக்கு தாமாகவே இழுத்துச் செல்லப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இதே போன்று அதிகமான பெண்களும் புகைப்பிடிக்கின்றனர்.
இந்த நூற்றான்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர்பான நோயால் இறக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் (றூழ) தன்னுடைய ஆய்வில் கூறுகின்றது.
அலை மோதும் நிர்வாணிகள்.
அல்லாஹ் குர்ஆனில் ‘ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறையச்சம்) எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
(அல் குர்ஆன் – 07:26)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்லுவார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒரு சாரார் மாட்டு வால்கழைப் போன்ற சாட்டைகலை கையில் வைத்திருப்பார்கள். (தம் கையில் ஆட்சியை வைத்துக்கொண்டு).அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொறு சாரார் பெண்கள் அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள், அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள், மற்றவர்களை தன் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை (மயிர்கள்) ஒட்டகத்தின் திமில்களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள்.                                                                       அப+ ஹ_றைரா (ரலி). (நூல் முஸ்லிம் – 4316)
இன்று நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் அறை குரை ஆடை அணிந்து கொண்டு வீதியில் ஆண்களை உசுப்பேத்தி விடுகின்றனர். இன்னும் தங்களின் ஆடைகள் மிகவும் இருக்கமாகவும், கட்டையாகவும், குட்டையாகவும், மெல்லியதாகவும், அணிந்து கொண்டு வீதி, வீதியாக பவணி வருகின்றனர். இதனைப் பார்க்கின்ற வாலிபர்கள் இவளை எப்படியாவது அடைய வேண்டும். என்று திரிகின்றனர் இதனால் பாலியல் துஷ்ப்பிரயோகம், கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம், பெண்கள் கடத்தப் படுதல், போன்றவை நம் நாட்டில் அதிகரிக்கின்றதற்கு காரணமாக அமைகின்றது.
என் இஸ்லாமிய சகோதரிகளே, தாய்மார்களே, இந்த நபிமொழியைப் படித்த பிறகும் இப்படி நடக்க உங்களுக்கெளுக்கு மணம் வருகின்றதா.? இறைவனைப் பயந்து முன்னையவர்களான அவ்வன்னையர்களைப் பின்பற்றி சுவனம் நுழைய முயற்சியுங்கள்.
சீரியலிள் சீரழியும் சமுதாயம்;.
அன்றோர் காலம் இருந்தது எல்லா வீடுகளும் குர்ஆன் சத்தத்தில் மூழ்கிய காலம் இன்றைய காலம் இருக்கின்றது எல்லா வீடுகளும் (வுஎ) ஷைத்தான் பெட்டி” இல் மூழ்கி அனைத்து அனாச்சாரத்தையும் வெட்கம், கூச்சமின்றி தாய், தந்தை, அண்ணன், தம்பி, தங்கை அனைவறும் சேர்ந்து வயது வந்த ஆண் – பெண்களும், சேர்ந்து கட்டிப்பிடித்து கொஞ்சுகின்ற காட்சியைப் பார்க்கின்றன.
காதலர் தினம் இஸ்லாத்தில் ஏற்புடையதா?
அறிவும் ஆராய்ச்சியும் அமோகமாய் முன்னேறிய இன்றய கால கட்டத்தில் மனிதர்களில் ஒரு சாரார் மௌட்டீகத்திற்கும். பிற்போக்கு சிந்தனைகளுக்கும் கூஜா தூக்குகின்ற அவல நிலையை இன்று கண்கூடாகக் கானுகிறோம். கற்காலத்திலிருந்து பொற்காலத்திற்குத் தாவிய மனிதன் மீண்டும் கற்காலத்திற்கே செல்கிறானோ என அவதானிகள் சிந்திக்குமளவிற்கு மனித குலம் இன்று பாழ்பட்டுப் போயுள்ளது.
கொள்கையற்ற மனிதர்களை கவனிப்பாரற்று விட்டாலும் அங்கீகரிக்கப்பட்ட உயர்ந்த மார்க்கமாகிய இஸ்லாமியக் கொள்கையில் வாழுகின்றோம். எனக்கூறும் முஸ்லிம்களின் நிலையோ மேற்கத்தயக் கலாசாரத்தை விட ஒரு படி முன்னேறிக் காணப்படுகின்றமை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த மட்டில் போலிகளையும் சடங்குகளையும் அடியோடு நிராகரிக்கும் ஓர் இறைக்கொள்கையது. மனிதனின் பகுத்தறிவுக்கு வேட்டு வைக்கும் அத்தனை மூடக் கொள்கைகளையும் தூக்கி வீசுமாறு அறிவுருத்தும் இம்மார்க்கத்தில் ஒரு முஸ்லிம் எப்படி காதலர் தினத்தை கொன்டாட முடியும்.
நமது சமுதாயத்தில் பெப்ரவரி – 14. ம் திகதி உலகம் பூராகவும் இக் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். எந்த அளவுக்கெனில் கிட்டத்தட்ட ஐந்து, பத்து வருடம் காதலித்தவர்களையும் இத்தினம் இன்னும் பல தப்பான செயல்களைச் செய்வதற்காகத் தூண்டுகின்றது.இன்னும் பலருடைய கற்புகளைக் கொல்லை கொள்ளும் துர்நாளாக அத்தினம் அமைந்திருக்கின்றது.
இன்னும் எம் சமூகத்தினர் சிலர். ‘பசி வந்தால் பத்தும் பறக்கும். காதல் வந்தால் வசந்தம் பிறக்கும்” என்ற முதுமொழிகளையெல்லாம் கூறி காதலை ஆதரிக்கின்றனர். காதல் புதிய வசந்தம் பிறக்கும் என்று கருதிக் கொண்டு வசந்தத்தை நாடும் வாளிபர் சமூகம் வசந்தத்தையும் இழந்து, வாழ்வையும் இழந்து நடு வீதியில் பைத்தியக்காரர்களை விடவும் மிக மோசமான நிலையில் திரிகின்ற சகோதர, சகோதரிகளையும் காணலாம்.
உடற் கூறுகள் ஆண்களையும் பெண்களையும் வேறுபடுத்திக் காட்டும். உணர்வுகள் ஒன்றுபடுத்திக் காட்டும். இந்த உணர்வளைகள் காதலர்களை சும்மா விட்டு விடாது. எனவே இவ்வாரான செயற்பாடுகளில் மூழ்கி கற்பையும், மானத்தையும் பறி கொடுக்கும் இப்பாதால செயற்பாட்டிற்கு நாம் ஒரு போதும் சென்று விடக்கூடாது.
சுதந்திர தினம். பெற்றோர் தினம். முதியவர் தினம். எய்ட்ஸ் ஒழிப்பு தினம். தொலிழாளர் தினம். மே தினம். அந்தத் தொடரில் காதலர் தினத்தையும் மக்கள் மதிப்பதனைக் கானலாம். காதல் ஒரு நோய்தான் அதன் ஆரம்ப நாட்கள் கொஞ்சம் வலிதான். காதலிப்பவர்கள் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் மற்றவருடன் பேசுவதற்குக்கூட வெட்கப்படுவார்கள் காலம் செல்லச்செல்ல கட்டியனைப்பது முதல் முத்தம் கொடுத்தல் வரையும் அதனைத் தாண்டியும் படுக்கை வரைக்கும் அவர்கள் வெட்கமின்றி மிக வேகமாகச் செல்வதனையும் நாம் அறியலாம்.
இன்னும் பாடசாலையில் ஆரம்பிக்கின்ற காதல் கலாச்சாரம் பாடசாலையின் வாழ்க்கையை நாசப்படுத்துவது மட்டுமன்றி பரீட்சையில் நல்ல சிறந்த பெருபேறுகளைக்கூட எடுக்காமல் தனது மானத்தையும், பெற்றோர் தன் மகன் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக இரவு பகல், வெப்பம் குளிர், இது போன்ற இன்னும் பல கஷ்ட்டங்களையும் சுமந்து பிள்ளைகளைப் படிக்கவைப்பதற்காக அதிகமான சிரமத்தையும் சுமந்து கொள்கிறார்கள்.
இவர்கள் பரீட்சை முடிவில் பெற்றோர் வீதியில் நடமாட முடியாத அளவிற்கு மிகவும் கேவலமான பெருபேற்டை எடுக்கின்றனர். இதனால் சில மாணவர்கள் மானம் போய்விட்டது என்பதற்காக தனது உயிரைக்கூட போக்கிக் கொள்கின்றனர். இதன் பின்னனியில் பெற்றோர்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இன்னும் சில மாணவிகள் இக் கொல்லி நோயில் மூழ்கி தனது கற்பை திருமனத்திற்கு முன்பதாகவே இழந்துவிடுகின்றனர். பின்னர் கற்பை இழப்பதற்கு காரணமானவனை தேடித்திரிகின்றனர். அவனோ இன்னொரு பெண்ணுடன் தன் திருமனத்தை முடித்து சந்தோசமாக வாழ்க்கையை நடாத்துகின்றான். இவளோ கற்பையும் இழந்து வாழ்க்கையையும் நாசப்படுத்தி தன்மானத்தையும், குடும்ப மானத்தையும் நடுத்தெருவிற்கு கொண்டுவந்துவிட்டு கவலையில் மூழ்கி இருப்பதும் அன்றாடம் செவிகளில் வீழ்கின்றது.
ஆண்களைப் பார்த்தால். காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன். பொம்பலங்க காதலத்தான் நம்பிவிடாதே. காதலில் தோற்றவன் தாடி வளர்ப்பான். இது போன்ற இன்னும் ஏராலமான கதைகளையும், பாடல்களையும் பாடிக்கொண்டு வீதியில் பவனி வருவதனையும், போதையிலும் மதுவிலும் மாதுவிலும் மூழ்கி தனது உயிரையே மாய்த்துக்கொள்கின்ற வாழிபர் சமுதாயத்தையும் ஆங்காங்கே பார்ப்பீர்கள்.
சில ஆண்களைப் பார்த்தால் பெண்களுக்கு ஏசுகிறான். பலாத்காரமாக கூட்டு பலாத்காரம் செய்து பெண்களைக் கெடுத்து கொலையும் செய்கிறான். காதலித்தவள் தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக அவளின் முகத்தில் ‘எசீட்” அடித்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இப்படிப்பட்ட மாபாதகச் செயல்களைச் செய்யத் தூண்டியது எது? அதுதான் காதல் என்கின்ற பைத்தியம்.
இன்னும் காதல் முற்றிப்போய் உடம்பில் வெட்டுக் காயங்களை போட்டுக்கொள்ளுதல். அவளின் பெயரை உடம்பில் ஆங்காங்கே சுட்டுக்கொள்ளுதல், வெட்டிக்கொள்ளுதல் இவைகளும் இக்காதலினால்தான் ஏற்படுகின்றது.
எனவே இக்காதல் கலாச்சாரத்தை விட்டு விலகிவிட வேண்டும். இன்னும் ஒருவருக்கு சரியான காதல் (அன்பு) யார் மீது வரவேண்டுமென்றால். படைத்த இறைவன் மீதும், பெற்றெடுத்த தன் தாய்மீதும், தந்தை மீதும், வாழ்க்கைத் துனைவியான அன்பு மனைவி மீதும் தான். வரவேண்டுமே தவிர திருமணம் முடிப்பதற்கு முன்பான காதலை அன்பு என்று சொல்வது தவறானது.
எனவே இக்காதலர் தினத்தை பெப்ரவரி – 14. ம் திகதியைப் புறக்கனிப்பதன் மூலம்தான். டிசம்பர் – 01 ம் திகதி எய்ட்ஸ் நோயின் பாதிப்பில் ஆலாகாமல் எம் சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நபிவழிக்கு மாற்றமாக நடப்பது நரகவழியல்லவா?
அன்புக்குரியவர்களே! சிந்தித்துப் பாருங்கள்!
காதலர் தின விழாக்களோ பிறந்ததின விழாக்களோ இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டவையல்ல. மாறாக மாற்றுமத இதிகாசங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் இஸ்லாமியப் போர்வையில் தருவிக்கப்பட்டவையே! இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்துவமும் அதன் உயர்வும் தெரியாத அறிவிலிகளால்தான் இச்சடங்குகள் எமது மார்க்கத்தினுல் புகுத்தப்பட்டன. இதனைத் தான் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். எங்களது இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும். (புஹாரி – 2697)
காதலர் தினத்தை அனுஷ்டிப்பதால் என்ன வந்துவிடப் போகின்றது. போன்ற அற்பத்தனமான கேள்விகளை அடுக்கி அல்லாஹ்வின் தூதரின் முன்மாதிரியில்லாத இம்மடமைத் தனங்கலுக்கு இரகசிய அங்கீகாரத்தை எடுப்பதற்கு சில இளைஞர்கள் விரும்புகின்றனர். எனவே தூய இஸ்லாமிய மார்க்கத்தில் தீய இத்தினங்களைப் புறக்கனித்து சுவனம் செல்லக்கூடிய நன்மக்களாக எம்மனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக.
ம.அ. ஜவாஹிர் ஜமாலி.
நன்றி - sltj 
0 comments

சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும்! அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்தும்!!



கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன்திருமறையில்...

நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும்,அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்' (அல்குர்ஆன் 33:45,46)

அல்லாஹ்வின் இறுதித்தூதரான முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைந்திட முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்கக் கோடானகோடி மக்கள் காத்திருக்கின்றனர்.ஆன்மீகத்தை வாழ்வின் சரியான அம்சமாக வாழ்ந்து காட்டியும்,அதை மனிதகுலத்துக்கு உணர்த்தியும் காட்டிய அழகான மாமனிதர் அண்ணலார் நபி(ஸல்) அவர்கள்! 
மானிட இனம் செல்லவேண்டிய சரியான திசையை இனங்காட்டியதில் அண்ணல் நபி(ஸல்) அவர்களைப்போன்று உலக வரலாற்றில் எவருமில்லை என்று அடித்துச் சொல்லலாம். 

இதுபோல் இன்னும் எத்தனையோ சீர்மிகு சிறப்புகளையும் மேன்மைகளையும் பெற்றிருக்கும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் வந்துவிட்டால் அதில் குறிப்பிட்ட சில தினங்களில் பெருமானார்(ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அவர்களை கண்ணியப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் காட்டித்தராத, கட்டளையிடாத காரியங்களையெல்லாம் வணக்கமாக நினைத்துச் செயல்படும் அவலநிலை முஸ்லிம் சமுதாயத்தில் நிலவிவருவதை நாம் பார்க்கின்றோம்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலைப் பாடுவதும், அதிலிருக்கும் வரம்புமீறிய கருத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் ராகமாகப் பாடி மகிழ்வதும், அண்ணலாரின் பிறந்தநாள்விழா என்று குறிப்பிட்ட பன்னிரெண்டு நாட்களிலும் மக்களிடம் காசு வசூலித்து பல பெரிய தேக்சா சட்டிகளில் சோறாக்கி கந்தூரி என்ற பெயரில் உணவு விழா கொண்டாடுவதையும் பார்க்கின்றோம்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத்துகள் உள்ள பல ஊர்களில் போட்டி மனப்பான்மையுடன் இரண்டு,மூன்று தேக்சாக்ளை அதிகப்படுத்தி சோறாக்கி வீண் பெருமையடிப்பதை காண்கின்றோம்.இதற்காக பல இலட்சம் ரூபாய்களில் பட்ஜெட் போட்டு செலவழித்து ஆக்கப்படும் சோறு போன்றவைகள் அறைகுறையாக சமைக்கப்பட்டு, அதை சரியான முறையில் மக்களுக்கு வினியோகிக்காமல் வீணாகக் கொட்டப்படுவதையும் பார்க்கின்றோம். இவற்றுக்காக செலவிடப்பட்டிருக்கும் பொருளாதாரமும், உழைப்பும் கணக்கில் அதிகமானவையே! இப்படித்தான் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிவிட்டு சென்றார்களா?! அல்லது வாழும்படிதான் கட்டளையிட்டார்களா?!

அதே அந்த முஸ்லிம் ஊர்களில் சுற்றுப்புற சுகாதாரம் மருந்துக்குக்கூட இருக்காது.சாக்கடை-சகதிகள், கொசுத்தொல்லைகள் என்று மக்கள் ஒருவித திணறலுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருவார்கள் இப்படிப்பட்ட சூழலை சீரமைக்க முஸ்லிம் ஜமாஅத்துகள் பொருளாதாரம் திரட்டவும்,உழைக்கவும் எந்தவொரு முயற்சியும் செய்திருக்க மாட்டார்கள்.

இப்படி வாழச்சொல்லித்தான் பெருமானார்(ஸல்) அவர்கள் போதித்துள்ளார்களா?!சத்தியத்தைப் பற்றிய தெளிவு, அசத்தியத்தைப் பற்றிய எச்சரிக்கை,ஆரோக்கியம் பற்றிய 

விழிப்புணர்வு, கல்வியின் முக்கியத்துவம் இவைகளெல்லாம் மக்களுக்கு சுவாசம் போன்ற தேவைகளாகும்.அதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட அக்கறையில்லாத முஸ்லிம் ஜமாஅத்துகள் அட்ரஸ் இல்லாத மவ்லிதுகளுக்கும், கந்தூரிகளுக்கும் விழா எடுத்து அதற்கு இஸ்லாம் என்ற பெயரும் கொடுத்து தங்களின் பொன்னான உழைப்பையும், பொருளையும் வீணடிக்கின்றனர். இதுபோன்ற காரியங்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு பெருமை சேர்க்குமா?! எண்ணிப்பார்க்க வேண்டும் முஸ்லிம் சமுதாயமே!

வல்ல அல்லாஹ் தன் திருமறையில்...

வீண் விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன் பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)

மேலும், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்... 

 நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.  அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம் 3243

இவ்வுலகில் மனிதன் ஒருவர்மீது அன்பு கொண்டுவிட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரை வரம்புமீறி புகழ்வதும்,அதேபோல் புகழப்படும் மனிதர் சில நல்ல செயல்கள் செய்துவிட்டால் அவரை கடவுளின் அந்தஸ்திற்கு உயர்த்துவதும் நடைமுறையில் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. இது எப்படிப்பட்ட விபரீதமான-அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை மனிதர்கள் அவ்வளவாக உணர்வதில்லை.உண்மையான கடவுளின் அந்தஸ்தை உணராத காரணத்தினால்தான் கண்டதெல்லாம் கடவுள் என்ற அவலம் நிலவுவதைக் காணமுடிகிறது.

இறைவன் எப்போதும் இறைவன்தான். அவன் ஒருபோதும் மனித அந்தஸ்துக்கு இறங்குவது கிடையாது. மனிதன் எப்போதும் மனிதன்தான்.அவன் எவ்வளவு பெரிய காரியங்கள் செய்தாலும்,எத்தகைய சாதனைகள் புரிந்தாலும் ஒருபோதும் இறைவனின் அந்தஸ்துக்கு உயர்வது என்ன? நெருங்கக்கூட முடியாது.வேண்டுமானால் நல்லறங்கள் செய்து இறைவனின் அன்பைப் பெற்றவனாக ஆகலாமே தவிர மனிதன் ஒருபோதும் இறைவனாக முடியாது. இதை வலியுறுத்தும் விதமாகவே மாநபி(ஸல்) அவர்கள், மனிதர்கள் தங்களுக்குள் வரம்புமீறி புகழ்ந்துகொள்ளும் வாசலை அடைக்கின்றார்கள்.

''கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 3445

நபி (ஸல்) அவர்கள் என்ன காரணத்திற்காக அஞ்சி, தம்மைப் புகழக் கூடாது என்றார்களோ அந்தக் காரணத்தை,புகழ்ச்சியில் வரம்பு மீறுதலை இந்தச் சமுதாயம் அப்படியே நிறைவேற்றுவதை நாம் பார்க்கின்றோம். 

தற்போது தமிழ்பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப்பெற்ற மவ்லித் புத்தகங்கள் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கும், நபி(ஸல்) அவர்களின் சொல்-செயல்களுக்கும் நேர்மாறானவை மற்றும் நேரடியாக மோதக்கூடியவையாகும். 

உதாரணமாக 'யாநபி பைத்' என்ற பாடல் தமிழகமெங்கும் பிரசித்திபெற்றது. 

அந்த பாடலின் துவக்கமே, ''யா நபி ஸலாம் அலைக்கும், யாரஸுல் ஸலாம் அலைக்கும்'' என்று மொட்டையாகவே வருகிறது.அந்த பாடலுக்குப் பெயரே யாநபி பாடல் என்றே கூறப்படும்.இந்த வரியைக் கவனியுங்கள்.  

அதில் ''யா நபியல்லாஹ்,யா ரஸுலுல்லாஹ்'' என்று  முறையாக இல்லாமல் குறையாக மரியாதை இல்லாமல், நபி(ஸல்) அவர்களுக்குச் சமமான அந்தஸ்து உடையவர்கள்  அவர்களை அழைப்பது போன்று உள்ளது.அத்தோடு மட்டுமல்லாமல் அதில் வரும் ஏழாவது அடியில் ''யாமுஹம்மத்''என்று நபியவர்களின் பெயரைச்  சொல்லி மிகவும் விகாரமாகவே மரியாதையில்லாமல்அழைக்கப்படுகிறது. அல்லாஹ் தன்னுடைய திருக்குர்ஆனில் நபி (ஸல்) அழைத்துக் கூப்பிடும் ஒழுங்கைப் பற்றிக் கூறுகையில், 

உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்.  (அல்குர்ஆன் 24:63)

இந்த வசனம் இறங்கியதற்கான காரணத்தை அப்பாஸ்(ரலீ) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள். ''அரபு மக்கள் 'யா முஹம்மத், யாஅபல் காசிம்' என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். அப்போது தான் நபியவர்களைக் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் அவ்வாறு கூறக் கூடாது என  அல்லாஹ் அவர்களைத் தடுக்கிறான்'' என கூறுகிறார்கள். இதை இமாம் இப்னு கஸீர் அவர்கள் தமது தப்ஸீரில் கூறுகிறார்கள்.

பகிரங்க இணை வைப்பு!

அல்லாஹ்விடம் மட்டுமே எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். வேறு யாரிமும் கேட்கக் கூடாது. அந்த ஏக வல்ல நாயன் அல்லாஹ்விடம் ஒரு நாள் ஒன்றுக்கு 100 தடவை நான் இஸ்திக்ஃபார் தேடுகிறேன்'' என்று கூறிய அந்த இறைத்தூதரிடத்திலேயே, ''கஃப்பிரூ அன்னீ துனூபீ வஃபு லீ அன் சய்யிஆ(த்)தீ'' (நீர் என் பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்திடுவீர். நீங்கள் நாசத்தை ஏற்படுத்தும் பாவங்களை மன்னிப்பவர்) என்று கூறும் வரிகளும் இந்தப் பாடலில் தான் இருக்கிறது

இது மட்டுமல்ல!இதுபோன்று ஏராளமான குப்பைகள் இந்த மவ்லித் புத்தகங்களில் மலிந்து காணப்படுகின்றன. இப்படிப்பட்ட பாடல்களை பாடுவதால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கும்,நபி(ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் மாறு செய்வதாக ஆகிவிடும். இதை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அனைத்தும் இஸ்லாத்தை கேலி செய்வதாக ஆகிவிடும். அதைத்தான் இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்வதாகக் கூறி இயற்றப்பட்ட மவ்லிதுகள் புகழ் மாலைகளல்ல, பொய் மாலைகள் தான் என்பதையும் இவற்றை ஓதினால் சுவனம் கிடைக்காது, நரகம் தான் பரிசாகக் கிடைக்கும்.
அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்!

அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா?என்றால் நிச்சயமாக இருக்கின்றது. திருமறைக் குர்ஆனில்...

'நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன்:  3:31)

இந்த வசனத்தில், அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக்கூடிய ஸலவாத்தை ஓதவேண்டும். 

அல்லாஹ் தன் திருமறைக் குர்ஆனில்...

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது.இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத,கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித்தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி(ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்''என்று சொல்லுங்கள், என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல் : புகாரி 4797

ஒன்றுக்கு பத்து!.

யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்'' என்று அல்லாஹ்வின்    தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 577

நிச்சயமாக பூமியில் சுற்றித்திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) நூல்: நஸயீ 1265

ஆகவே அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத்தரும் மவ்லிதுகளை விட்டுவிட்டு அவனது அருளை அள்ளித்தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.

நன்றி - துபாய் tntj 

0 comments

நாகூர் கந்தூரியும் நாசமாகும் அமல்கள்


தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர். ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது. இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது தான்.

ரசூலுல்லாஹ் மவ்லிது (ரபிய்யுல் அவ்வல்), முஹ்யித்தீன் மவ்லிது (ரபிய்யுல் ஆகிர்), பஷீரப்பா கந்தூரி (ஜமாதில் அவ்வல்), ஷாகுல் ஹமீது மவ்லிது (ஜமாதில் ஆகிர்), காஜா நாயகம் மவ்லிது (ரஜப் மாதம்) என அவ்லியாக்களின் பெயரிலேயே மாதப் பிறையைக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு அவ்லியாக்களின் கந்தூரிகள் அவர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன.
ஜமாதில் ஆகிர் மாதம் பிறக்கவிருக்கின்றது. பெண்கள் கணக்குப்படி ஷாகுல் ஹமீது மவ்லிதுப் பிறை, நாகூர் கந்தூரிப் பிறை பிறக்கவிருக்கின்றது.
பிறை 1 முதல் 14 நாட்கள் நடக்கும் இந்தக் கந்தூரி நாகூரில் படு விமரிசையாக நடைபெறும்.
நாகூர் செல்ல முடியாதவர்களுக்காக ஷாகுல் ஹமீது தர்காவின் கிளைகளும் சில ஊர்களில் உண்டு. அந்தக் கிளைகளில் அவர்கள் கந்தூரிகளைக் கொண்டாடி தங்கள் பக்திகளை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
இக்கந்தூரியில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து நாகூர் சன்னதியில் குழுமுவார்கள்.
இப்படி இவர்கள் வந்து நாகூரில் குழுமுவதன், கூடுவதன் நோக்கம் என்ன? “இவையெல்லாம் அவ்லியாக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தரும். இவை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் காரியங்கள்” இது தான் இவர்களது எண்ணம். அதற்காகத் தான் இத்தனை பெரிய பயணம், செலவுகள், 14 நாட்களுக்கு மேற்கொள்ளும் சிரமங்கள்.
நாம் இங்கே பார்க்கப் போவது இவர்கள் செய்கின்ற இந்தக் காரியங்கள் இவர்களுக்கு எள் அளவாவது, எள் முனையளவாவது பயனளிக்குமா? என்பதைத் தான்.
இந்தக் கேள்விக்கு, நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்ட வந்த அல்குர்ஆன் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.
என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.
அல்குர்ஆன் 18:102
இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று அழைப்பதுடன் இவர்களின் இந்தக் காரியங்களுக்குத் தண்டனையாக நரகம் தான் பரிசு என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.
(ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும் போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத் தான் காண்பான். அப்போது அவனது கணக்கை நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
அல்குர்ஆன் 24:39
இவர்கள் செய்கின்ற இந்த வணக்கங்களை கானல் நீர் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.
இந்தக் கானல் நீரை தண்ணீராகக் காண்பவர்கள் மாபெரும் நஷ்டவாளிகள்!
இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகின்றான்.
“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!
இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104
1. மாபெரும் நஷ்டவாளிகள்
2. இவர்களது முயற்சி இவ்வுலகிலேயே வீணாகி விடுகின்றது.
3. தீமையைச் செய்து விட்டு அதை நன்மை என்று நம்பி ஏமாறுகின்ற கொடுமை!
ஒருவன் ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்து மாட்டிக் கொண்டு தண்டனை பெறுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு தண்டனை பெறுகின்ற அவன், தனக்கு அந்தத் தண்டனை நியாயமானது தான் என்று உணர்ந்தே ஏற்றுக் கொள்கிறான். இதில் அவனுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. ஆனால் அதே சமயம், டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்த ஒருவன், தான் வாங்கிய டிக்கெட் போலியானது என்றாகி, அதற்காகத் தண்டனை பெறும் போது அவன் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாகி விடுகின்றான். அதை அவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதன் மூலம் அவன் அடைகின்ற ஏமாற்றத்திற்கு ஓர் அளவே இல்லை.
அவ்லியா பக்தர்களின் நிலை இதைப் போன்றது தான்.
கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள ஒருவன் அல்லாஹ்வை நம்பப் போவதில்லை; மறுமையையும் நம்பப் போவதில்லை. நாளை மறுமையில் அவன் தண்டனை பெறுகின்ற போது அது அவனுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தரப் போவதில்லை. காரணம், தான் செய்த தப்புக்கு அந்தத் தண்டனை என்று அவன் ஏற்றுக் கொள்ளப் போகின்றான்.
ஆனால் அவ்லியா பக்தர்களின் நிலை அவ்வாறல்ல! அவர்கள் தாங்கள் செய்த காரியங்களை நன்மை என்று நம்பியவர்கள்! அதனால் அவர்களது ஏமாற்றம் அளவிட முடியாதது.
ஷாகுல் ஹமீது மீது பக்தி கொண்டு மவ்லிது ஓதுவது, சந்தனக்கூடு எடுப்பது, கொடி ஏற்றுவது, பீரோட்டம் ஓடுவது, நாகூருக்குப் பயணம் மேற்கொள்வது, அங்கு 14 நாட்கள் தங்குவது போன்ற எல்லாமே மார்க்கத்தின் பெயரால் நன்மை என்று கருதிச் செய்யப்படும் வீணான காரியங்கள்.
வீணான காரியங்களை நன்மை என்று செய்பவர்கள் அல்லாஹ்விடம் மாபெரும் நஷ்டத்திற்குரியவர்கள். நரகத்தைத் தங்குமிடமாக ஆக்கிக் கொள்பவர்கள்.
எனவே ஷாகுல் ஹமீது கந்தூரி மட்டுமல்ல! ஒவ்வொரு அவ்லியா கந்தூரி கொண்டாடும் முஸ்லிமும் இந்தப் பட்டியலில் தான் இடம் பெறுவார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தப் பட்டியலில் ஈடுபடுவோர் தாங்கள் நல்லமல்களைச் செய்திருக்கிறோம் என்று நம்புகிறார்கள். அந்த அமல்கள் அனைத்தையும் காற்றில் பறக்கும் புழுதிகளாக, கரைந்து போகும் சாம்பல்களாக இறைவன் ஆக்கி விடுகின்றான். இதனால் இவர்களது அமல்களை நிறுப்பதற்குத் தராசைக் கூட வைப்பதில்லை.
அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.
அல்குர்ஆன் 18:105, 106
இத்தனைக்குப் பிறகும் ஒருவர் நாகூர் செல்வாரானால் அவர் அல்லாஹ்வின் இந்த வசனங்களைக் கேலிப் பொருளாக்கியவர் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
ஷாகுல் ஹமீது மவ்லிது தொடர்பான கதை கப்ஸாக்களையும், கவிதை வரிகளையும், கந்தூரி என்ற பெயரில் நடக்கும் மடைமைத்தனங்களையும் மவ்ட்டீகங்களையும் இந்த இதழ் உங்களுக்கு அடையாளம் காட்டுகின்றது.
நேர்வழி காட்டுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
நன்றி - tntj.net 
0 comments

புத்தாண்டு கொண்டாட்டம்: ஜனவரி 1 – ஈஸா அலை அவர்களுக்கு விருத்தசேதனம் செய்த நாள்?


கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஈசா (அலை) அவர்களுக்கு விருத்த சேதனம் செய்த நாளை அதாவது ஜனவரி 1 ஐ ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.
பிற மத கலாச்சாரத்தை பின் பற்றக் கூடாது என்று நபிகள் நாயகம் பல இடங்களில் கூறியுள்ளார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத் (3512)
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான்,  முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.
புகாரி-3456
மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? . உண்மையில் நமது வாழ்நாளில்  365 நாட்கள் சென்று விட்டதே என்று  என்று வருத்தம் தான் பட வேண்டும்.
புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?. கிரீட்டிங்க கார்ட் விற்பனையாளர்களுக்கும் இந்த நாளில் ஓட்டலில் கூத்தாடுவதற்கு கோடிக் கணக்கில் பணம் வாங்கு கூத்தாடிகளுக்கும், புத்தாண்டு என்ற பெயரில் பார்ட்டி நடத்துபவர்களுக்கும் தான் பணம் கிடைப்பதன் மூலம் நன்மை ஏற்படுகின்றுது. பொதுமக்களுக்கு இதில் எந்த நன்மையும் இல்லை மாறாக பண விரையம் தான் ஏற்படுகின்றது.
ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.
இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.
மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபி (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்” என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)
கலாச்சார சீர்கேட்டுடன் ஆரம்பிக்கப்படும் ஜனவரி 1
புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இரவு நேரங்களில் உறங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தொந்தரவை ஏற்படுதுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.
ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு இதுவும் தவறாகும்.
நன்றி - tntj.net 
0 comments

ஸஃபர் மாத பீடை கழிக்கும் ஒடுக்கத்துப் புதன்(?)

இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர்  மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.
இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர்.இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் பித்அத்துகளை தோற்றுவிக்காத அந்த நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான்,  முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.
(புகாரி 3456)
இவ்வாறு புதிதாக ஒரு பித்அத்தைச் செய்தால் அதைச் செய்தவருக்கு அதன் தீமை கிடைக்கும். இத்துடன் அல்லாமல் இவரைப் பார்த்து யார் யாரெல்லாம் செய்வாரோ அவரின் தீமையும் கிடைக்கும் என்றும்  நபி (ஸல்) அவர்கள் பித்அத்தைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள். இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது,  இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.
மாற்றுமதத்தினர் தேரிழுப்பதையும் விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப்பதையும், கந்தூரி கொண்டாடு வதையும் வழமையாக்கிக் கொண்டனர். இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.
இதைப் பார்த்து முஸ்லிம்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக  எண்ணி பல கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.
இன்னும் சிலர் மாவிலைகளில் சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம் என்ற  திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்து குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.
இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.
சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.
தொற்று நோயும் பறவைச் சகுனமும் பீடை மாதமும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி 5717)
குறிப்பு: இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள லா ஸபர – “ஸபர் என்பது கிடையாது” எனும் தொடருக்கு ஹதீஸ் கலை அறிஞர்கள் நான்கு விதமான விளக்கங்களைத் தந்துள்ளார்கள்.
முதலாவதாக, வயிற்றிலுள்ள ஓரு புழுவால் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும் நோயே ஸபர் என்று கூறியுள்ளார்கள். சொரி சிரங்கை விட வேகமாகப் பரவும் ஓரு நோயே ஸபர் என்று அரபுகள் கருதி வந்தனர். இக்கருத்தை மறுக்கும் முகமாக ஸபர் கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரண்டாவது, வயிற்றில் ஸபர் என்னும் புழு இருப்பதாகவும் மனிதனுக்குப் பசி ஏற்படும் போது வயிற்றைக் கடித்துத் தொல்லை தருவதாகவும் அரபுகள் நம்பி வந்தனர். அப்படி ஒரு புழுவே கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் கிடையாது என்று கூறினார்கள்.
மூன்றாவது, போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கு ஆகும். அவை துல்கஅதா துல்ஹஜ் முஹர்ரம் மற்றும் ரஜப் ஆகும். அன்றய அரபுகள் முஹர்ரம் மாதத்தைப் போர் அனுமதிக்கப் பட்ட மாதமாகவும் அதற்கு பதிலாக ஸபர் மாதத்தைப் புனித மாதமாகவும் மாற்றிக் கொண்டனர். இதை நபி (ஸல்) அவர்கள் நிராகரிக்கும் முகமாக ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.
நான்காவது, ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும் குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதை பீடை பிடித்த மாதமாக அன்றய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.
இம்மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களை தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப் படுவதைப் போன்று அன்று அரபியர் களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.
பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)
காலத்தை நல்ல காலம் என்றும் கெட்ட காலம் என்றும் பிரிப்பது தவறாகும்.
தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம்.
(அல்குர்ஆன் 54:19)
பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.
இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)
ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.
மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப் பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.
உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.
எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.
இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.
உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவருமே தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்லநாள் கெட்டநாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.
ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.
பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107
நன்றி - sltjweb.com 
0 comments

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்


இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.
குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.
இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.
இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக  எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.
ஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.
இன்னும் சிலர் மாவிலைகளில் "சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்'' என்ற  திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.
மேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.
பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)
சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.
தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் பீடை என்பதும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5707, 5717
ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.
கெட்ட நாள் உண்டா?
காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.
தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம்.  (அல்குர்ஆன் 54:19)
பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.
இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)
ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.
மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.
உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.
எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.
இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.
உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும் தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.
"ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா
நூல்: புகாரி 4826
எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.
பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)
மாற்று மதக் கலாச்சாரம்
இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர்  மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.
இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான்,  முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.
(புகாரி 3456)
இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது,  இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.
மாற்று மதத்தினர் தேரிழுப்பதையும். விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப் பதையும், கந்தூரி கொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர்.
இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.
இதைப் பார்த்துத் தான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதி, அந்த மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடித்து செய்து வருகின்றனர்.
இது போன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றார்கள்.
இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத்து அன்வாத்'' என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு "தாத்து அன்வாத்து'' என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்'' என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி)
நூல்:திர்மிதி
தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:  செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 1560
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்ட நாளாகக் கருதாமல், மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!
பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ
நன்றி -  முகவை கான் 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger