உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை) - பீ.ஜே

அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)

வல்ல இறைவன் தன்னுடைய திருமறையில் பல நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றை தெளிவு பட கூறியுள்ளான்.ஆனால் மார்க்கத்தை அதன் தூய வடிவில் முஸ்லிம் மக்களுக்கு தெரிவிக்காமல் அதன் உண்மை சம்பவத்துடன் பல மார்க்கத்திற்கு முரணான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளனர் ..அதை உண்மை படுத்தும் விதமாக மார்க்கத்தின்  உண்மையான செய்திகளை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி  வரும் தமிழகத்தின் முது பெரும் இஸ்லாமிய  மார்க்க அறிஞரும் ,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவருமான சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் 1986 ம் ஆண்டு அந்நஜாத் இதழில் பீஜே எழுதிய கட்டுரையை கிளியனூர் முஹம்மது பாசில் தட்டச்சு செய்து ஆன்லைன்  பீஜே இணையதளத் திற்கு அனுப்பிய கட்டுரையை எமது இணையதளத்திலும் பதிகின்றேன்.நேயர்கள் படித்து உண்மை செய்தியை அறிந்து கொள்ளவும் ..ஏக இறைவன் நம் அனைவரையும் நேரான வழியில் பயணிக்கச் செய்வானாக.....
இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 'மலக்குல் மவ்த்துக்கு நண்பராக இருந்தார்களாம். "மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விருப்புவதாக " மலக்குல் மவ்திடம் கேட்டுக்கொண்டார்களாம் ! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த்இத்ரீஸ் நபியைமரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம்! "தான் நரகத்தைக் கண்கூடாகக் காணவேண்டும் "என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம் ! தமது இறக்கையில்இத்ரீஸ் நபியைச் சுமந்து சென்று நரகத்தை மலக்குல் மவ்த் சுற்றிக் காண்பித்தார்களாம்தாம்சுவர்க்கத்தைக் காண விரும்புவதாக மூன்றாவது கோரிக்கையை மலக்குல் மவ்த் முன்னே வைக்க,அதையும் மலக்குல் மவ்த் நிறைவேற்றினார்களாம். சுவர்க்கத்தை சுற்றி பார்த்தபின்சுவனத்திலிருந்துவெளியே வர மறுத்துவிட்டு இன்று வரை சுவர்க்கத்திலேயே இருக்கிறார்களாம்:
இப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது இந்தக் கதை உண்மையானது தானாஎன்று நாம்ஆராய்வோம்.
இந்தக் கதையில் சொல்லப்படுகின்ற மலக்குல் மவ்த் சுவர்க்கம் நரகம் போன்றவைசம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன . இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால்அல்லாஹ்வும்அவனது திருத் தூதரும் தான் நமக்கு சொல்லித் தரமுடியும்நம்முடைய அறிவுஅனுமானம் கொண்டோ,சரித்திர நூல்களின் ஆதாரம் கொண்டோ இவைகளை நாம் அறியமுடியாது.
அல்லாஹ் இது போல் நடந்ததாக திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. "அல்லாஹ்வின் தூதராவது இதைச் சொல்லி இருக்கிறார்களா என்று ஆராய்ந்தால்இப்படிஅல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை,
நபி (ஸல்அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு காலித் என்பவர்மூலமாக இமாம் தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர்மேற்கூறிய இப்ராஹீமைப் பற்றி : "பெரும்பொய்யன்என்று ஹாபிழ் ஹைஸமீ (ரஹ்அவர்கள் குறிப்பிடுகிறார்கள்இமாம் ஹாகிம் அவர்கள் "இவரது எல்லா ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவையே" என்று கூறுகிறார்கள்நபி (ஸல்பெயரால்இட்டுக்கட்டப்பட்ட பொய்யைத் தவிர இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.
"அல்லாஹ்வும்அவனது திருத்தூதரும் இதைச் சொல்லவில்லை " என்பதே இந்தக் கதைபொய்யானது என்பதற்கு போதிய ஆதாரம்என்றாலும்திருக்குர்ஆன் வசனங்களுக்க்கும் எவ்வாறுஇந்தக் கதை முரண்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.
"இத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்தை ஏமாற்றினார்கள் " என்ற கருத்தை இந்தக் கதைவெளிப்படுத்துகின்றது. "சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் " கூறிவிட்டு . சுவர்க்கத்திலிருந்துவெளியேற மறுத்ததன் மூலம் . ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்களின் பண்பாகஇருக்க முடியுமா ?
 " அவர் மிகமிக உண்மை பேசுபவராக இருந்தர்" என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறிஇருக்கும் போது, (அல்குர் ஆன் 19 : 56) உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படிப் பேசி இருக்கமுடியும்அதுவும் அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா?
நபிமார்களின் பண்புகளையும்மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மைஎன்று நம்ப முடியும் ?
"நல்லடியார்கள் சுவர்க்கத்தில் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் " என்றகருத்தைத் திருக்குர்ஆனின் 39 : 73 வசனம் சொல்கின்றது.
இந்தக் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சுவர்க்கத்துக்குஅழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள் அவர்களுக்கு மட்டும் இந்தப் பொது விதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோஅவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும் !
"நரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான்அவர்கள் கடினசித்தமுடையவர்கள்எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள் . அல்லாஹ் அவர்களுக்குஉத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்யமாட்டார்கள் ! தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையேசெய்து வருவார்கள் " என்ற கருத்தைக் திருக்குர் ஆனின் 66 :6  வசனம் நமக்குச் சொல்கிறது.
நரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி மலக்குல் மவ்த் அவர்கள் எப்படி நரகத்திற்கு அழைத்துச்சொன்றிருக்க இயலும் உயிரை வாங்குவதற்காக நியமனம் செய்யப்பட்ட மலக்குகள் தங்களுக்குகட்டளை இடப்படாதவைகளைச் செய்யமாட்டார்கள் . இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள் என்றகருத்தைக் குர் ஆனின் 21 : 27 வசனம் சொல்லும் போது மலக்குல் மவ்து இதை செய்திருக்கமாட்டார்கள் என்று தெளிவாக உணரலாம்.
நரகத்தின் காவலர்களாக உள்ள மலக்குகளின் அதிகாரத்தில் மலக்கு மவ்த் தலையிட்டிருக்கமாட்டார்கள் என்று எவரும் உணர முடியும்.
நாம் எடுத்துக் காட்டிய திருக்குர் ஆனின் வசனங்களுடன் மூரண்படுவதாலும் இந்தக் கதை பொய்யானதுஎன்று தெளிவாகிறது.
சுவன வாழ்வை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தித் தரவில்லைநல்அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சுவன வாழ்வைத் தரும்படி பிரார்த்தனை செய்வதுதான் ஒருமுஸ்லிம் செய்ய வேண்டும்நபிமார்கள் இப்படித்தான் செய்துள்ளனர்குர் ஆனின் 26 : 35 வசனம்இதை நமக்கு நன்றாக தெளிவுபடுத்துகின்றது.
குறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்துவிடாமல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டியவழியில் நாம் நடப்போமாகஅல்லாஹ் அதற்குத் துணை செய்வானாகவும்.
நன்றி - onlinepj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger