பொதுவாகவே சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் முஸ்லிம்களைப் பற்றியும், புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றியும் பலவிதமான தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றமை நாம் அறிந்ததே!
இறைவனின் இந்த மார்கத்தை யாராளும் அழிக்க முடியாது என்பதை அதன் வேகமான வளர்ச்சியின் மூலம் இறைவன் நாளும் உணர்த்திக் கொண்டிருக்கிறான்.‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” என்ற பெயரில் நபியவர்களை கேவலப்படுத்தும் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டமையினால் முழு முஸ்லிம் உலகும் கொந்தளித்தமையை நாம் அறிவோம். இஸ்லாத்தை அதன் உள்ளார்ந்த கருத்துக்களை நேருக்கு நேர் சந்தித்து வாதிக்கத் திராணியற்றவர்கள் இஸ்லாத்தின் மீதும் இறைவனின் தூதரின் மீதும் அபாண்டத்தையும், அசிங்கத்தையும் பொய்யாகக் சித்தரித்து பரப்புவதின் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியை குறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவும், தருதலைகளும்.
ஹாலிவூட், பாலிவூட் என்று எந்த சினிமாவை எடுத்துக் கொண்டாளும் ஏதோ ஒரு விதத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு செய்தியை காட்சிப்படுத்துவதை ஒரு தொழிலாகவே வைத்துள்ளார்கள். டைட்டானிக் பட இயக்குனர் ஜான் கமரூன் தொடங்கி துப்பாக்கி பட இயக்குணர் ஏ.ஆர் முருகதாஸ் வரை அனைவரும் முஸ்லிம்களை சீண்டுவதில் சரிசமமான பங்கு வகிப்பவர்களாக இருக்கிறார்கள்.
ஆங்கிலப் படத் தயாரிப்பாளர்கள் தங்கள் சினிமாக்கள் மூலமாக தினமும் முஸ்லிம்களை சீண்டிக் கொண்டிருக்கும் அதே வேலை தமிழ் சினிமாக்காரர்களும் அதற்கு ஈடாக முஸ்லிம்களை சீண்டுகிறார்கள்.
1995 ல் மும்மை என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மணிரத்தினம் தனது திரைப்படத்தின் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது அபாண்டத்தை சுமத்த முனைந்தார். திரைப்படத்தின் வெளியீட்டு நேரமே அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதினால் தான் எடுத்த முயற்சியில் தோல்வி கண்டு மௌனமானார்.
இதே வழியில் தனது திரைப்படங்களின் வெற்றிக்கான ஒரு வாய்ப்பாக முஸ்லிம்களை பயன்படுத்தி தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் விஜயகாந்த். விஜயகாந்தின் அரசியில் நுழைவுக்கு வழிவகுத்துக் கொடுத்ததும் இஸ்லாமியர்கள் கேவலப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்ட ஏ.ஆர் முருகதாஸின் பேரரசு என்ற திரைப்படம் தான்.
பொதுவாகவே விஜயகாந்தின் பெரும்பாலான திரைப்படங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், இஸ்லாத்தை தீவிரவாதத்தை போதிக்கும் மார்க்கமாகவுமே சித்தரிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழ் சினிமாவின் வரலாறு முழுதும் இதே பாணி கையாளப்பட்டிருக்கின்றது.
குர்பானியைக் கொச்சைப் படுத்தி பாலா என்ற கூத்தாடி தயாரித்த ‘அவன் இவன்” அதே போல் கமல்ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவர்” ஜெயம் ராஜா என்பவன் இயக்கிய ‘வேலாயுதம்” ரஜனிகாந்தின் ‘சிவாஜி” போன்ற பல திரைப்படங்களில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவும் நாட்டுக்கு துரோகம் இழைக்கும் துரோகக் கும்பல்களாகவுமே உருவகப்படுத்தப்பட்டார்கள்.
ஆரம்ப காலத்தில் ஊதுபத்தி கொழுத்துபவர்களாகவும்,தர்காக்களில் மந்திரிப்பவர்களாகவும், பேய் ஓட்டுபவர்களாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று தெளிவாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நல்ல பண்புகள் எதுவும் இதுவரைக்கும் சினிமாக்களில் காட்டப்பட்டதில்லை. இதற்கு எதிராக யாராவது பேசினால் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள் என்ற பெயரில் அதே முஸ்லிம்கள் மீது பழி போடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது என்று எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சொன்ன கருத்துக்கள் இங்கு நினைவு கூறத்தக்கதாகும்.
சினிமா என்பது கலை இது போன்ற கலைகளை எதிர்பது ஆரோக்கியமற்ற செயல் என்று சிலர் கூச்சலிடுவதை நாம் அடிக்கடி காண்கின்றோம். முஸ்லிம்களைப் பற்றி அவதூரு சொல்வதும், இஸ்லாமிய மார்க்கத்தை கொச்சைப்படுத்துவதும் இவர்களின் பார்வையில் கலை(?) இதே நேரம் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் இவர்களில் யாரும் இதுவரைக்கும் அவர்கள் சார்ந்த மதத்தையோ அதனைப் பின்பற்றுபவர்களையோ இது போல் சித்தரித்தது கிடையாது.
பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஈராக்கில் கொல்லப்பட்டார்கள், ஆப்கானிஸ்தான் துவம்சம் செய்யப்பட்டது. ரஷ்யாவின் கொடூர அரசினால் செச்னிய முஸ்லிம்கள் நாளும் அழிக்கப்படுகின்றார்கள், பாலஸ்தீனம் பற்றியெறிகின்றது. மியன்மரில் இஸ்லாமியர்கள் அழிக்கப்படுகின்றார்கள். இலங்கையில் பல பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பற்றியெல்லாம் இவர்களின் கேமராக்கள் கருத்துப் பதியாது. இதற்கு மாற்றமாக இஸ்லாமியர்களை இம்சிப்பதற்காக மாத்திரம் தான் இவர்கள் அனைவரும் ஒன்று திரளுவார்கள் என்பது இவர்களின் வரலாற்றில் இருந்து தினமும் நாம் பெரும் படிப்பினையாகும்.
இந்தியாவை சீரழிக்கும் காவிப் பயங்கரவாதம் பற்றி இவர்கள் எப்போதாவது படம் எடுத்ததுண்டா? பாபர் மஸ்ஜித் உடைப்பைப் பற்றி இவர்கள் பேசியதுண்டா? சாமியார்களின் காம லீலைகளை வெளிச்சம் போட்டு காட்டியதுண்டா? இல்லை காரணம் இவர்கள் அனைவரும் உத்தமர்களாம்.
முஸ்லிம்களை குறிவைத்து எதைச் சொன்னாலும் திரைப்படம் வசூலை அள்ளிக் குவிக்கும் என்ற எதிர்மறை லாஜிக்கை இவர்கள் தெளிவாக விளங்கி வைத்துள்ளார்கள். அதன் காரணமாகத் தான் இதையே தொழிலாக வைத்துக் கொண்டிக்கிறார்கள்.
துப்பாக்கி விஜயும், விஸ்வரூபம் கமலும்.
இந்த வரிசையில் அண்மையில் பெரும் சர்சையைக் கிளப்பியிருக்கும் இரண்டு திரைப்படங்கள் தான் விஜயின் நடிப்பில் வெளியான துப்பாக்கி மற்றும் கமலின் விஸ்வரூபம் ஆகியவையாகும். இந்த இரண்டு திரைப்படங்களும் வெளிப்படையாகவே முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று தெளிவாக பேசியிருக்கின்றன.
துப்பாக்கி என்ற பெயரில் மும்பையை களமாகக் கொண்டு எடுக்கப்பட்டள்ள திரைப்படத்தில் மும்பையை பயமுறுத்தும் தீவிரவாதிகளாக முஸ்லிம்கள் காட்டப்பட்டுள்ளார்கள். இதற்குக் காரணம் முஸ்லிம்கள் மேல் கொண்ட வெரும்பும், இஸ்லாத்தின் வளர்ச்சியின் மேல் கொண்ட பொறாமையும் தவிர வேறு எதுவும் இல்லையென்பது திரைப்படத்தை இயக்கிய, தயாரித்த, நடித்த அனைவரையும் உற்று நோக்கும் போது தெளிவாக விளங்குகின்றது.
திரைப்படத்தை இயக்கி ஏ.ஆர் முருகதாஸ் ஏற்கனவே பல படங்களில் விஜயகாந்த் உள்ளிட்ட கூத்தாடிகளை வைத்து முஸ்லிம்களுக்கு எதிரான படங்களை தயாரித்துள்ளான். இதே பாணியில் தான் தற்போது விஜய் என்பவனை வைத்து இந்தப் படத்தை தயாரித்துள்ளான். விஜயைப் பொருத்தமட்டில் இவன் தெரியாமல் அல்லது சிலர் சொல்வதைப் போல் கலை என்பதற்காக இந்தப் படத்தை நடிக்கவில்லை மாறாக தெரிந்து கொண்டே வேண்டுமென்று முஸ்லிம்கள் மீது பலி சுமத்த வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப்படத்தில் நடித்துள்ளான் என்பது உள்ளங் கையில் நெல்லிக் கனி போல் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.
விஜய் உண்மையில் ஒரு கிருத்தவ மதத்தைச் சேர்த்தவன், இவனுடைய இயற் பெயர் ஜோசப் விஜய் என்பதாகும். இந்தப் படத்திற்கும் கிருத்தவ மத அமைப்புகளுக்கும் கண்டிப்பாக தொடர்பிருக்கிறது. காரணம் ‘முஸ்லிம்களின் அப்பாவித் தனம்” என்ற திரைப்படத்தை ஒட்டிய விஷமக் கருத்தைத் தான் இந்தத் திரைப்படமும் சுமந்திருக்கிறது.
விஜய் என்ற மாஸ் ஹீரோ மூலம் இது போன்ற ஒரு கதையை வெளியிடும் போது அதில் சொல்லப்படும் கருத்துக்கள் அவசரமாக மக்கள் மத்தியில் அங்கீகாரத்தைப் பெற்றுவிடும். அப்படி அங்கீகாரம் பெறும் பட்சத்தில் முஸ்லிம்கள் அனைவரும் மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களை தகர்த்து பாகிஸ்தானுக்கு காக்காய் பிடிக்கும் தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் பதிய வைப்பதே இவர்களின் நோக்கமாகும்.
இந்த அயோக்கியன் ஏற்கனவே வேலாயுதம் என்ற பெயரில் நடித்து வெளியிடப்பட்ட திரைப்படத்தில் கூட முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகளை உருவாக்கி திரைப்படம் எடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இப்படி வழமையாக முஸ்லிம்களை சீண்டுவதும்> இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அதே போல் நாத்தீகம் பேசும் கடவுள் மறுப்பாளனாக தன்னை இனங்காட்டிக் கொள்ளும் கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் முஸ்லிம்களை சீண்டுவதும் மண்ணிப்புக் கேட்பதுமாக தனது படலத்தை தொடந்து கொண்டிருக்கிறார்.
உன்னைப் போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் திரைப்படத்தின் ஹீரோவான கமல் தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை அழிப்பவராகவும் அதில் நடித்திருப்பான். இப்படி முஸ்லிம்கள் தான் இந்தியாவையும், இந்த உலகத்தையும் அழிக்க நினைப்பவர்கள் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் பரப்புவதுடன் கடவுள் மறுப்புக் கொள்கை என்றொன்றை தனக்குள் சொல்லிக் கொண்டு காவிப் பயங்கரவாதத்திற்கு தினமும் இவன் துணை போவதை யாரும் மறுக்க முடியாது.
காவிப் பயங்கரவாதத்திற்கு துணை போகும் விதமாகத்தான் தற்போது இயங்கப்பட்டு வரும் விஸ்வரூபம் என்ற திரைப்படமும் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் அலைவதைப் போலவும் சிறுவர்கள் பெரியவர்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைவரையும் கொள்ளும் கொலைகாரர்களாக இருப்பதைப் போலவும் விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு பதிவை உண்டாக்க முயல்கின்றான்.
தான் பெற்ற மகளையே அடுத்தவனுக்கு கூட்டிக் கொடுக்கும் கூத்தாடித் தொழில் செய்யும் கமல் போன்றவர்கள் இஸ்லாத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதியுள்ளது?
திரைப்படம் இதுவரை முழுமையாக வெளிவராவிட்டாலும் அதன் முன்னோட்டக் காட்சிகள் திரைப்படத்தில் உள்ளார்ந்த கருத்துக்களை தெளிவாக விபரிக்கின்றன.
இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் எதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இலங்கையிலும் தமிழ் நாட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் பலத்த எதிர்பை வெளியிட்டு வருகின்றன. விஜய், இயக்குணர் முருகதாஸ், தயாரிப்பாளர் தானு போன்றவர்கள் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளையும் முற்றுகையிடும்படியும், எந்தக் காரணம் கொண்டும் முஸ்லிம்களை அவமதிக்கும் விஸ்வரூபம் திரைப்படம் திரையிட அனுமதிக்கப்படமாட்டாது மீறி வெளியிடப்பட்டால் அனைத்து திரையரங்குகள் முன்பாகவும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.
இதே நேரம் இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்படுமானால் திரையறங்குகள் முன்பாக பாரிய முற்றுகை ஆர்ப்பாட்மொன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தும் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
இஸ்லாமிய சமுதாயமே!
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! விஜய் என்ற கூத்தாடி மேல் கொண்ட ரசிப்புத் தன்மையும், கமல் மேல் வைத்துள்ள சினிமாக் காதலும் நமது சமுதாயத்தவர்கள் மீது இவர்கள் சுமத்தியுள்ள குற்றச் சாட்டுக்களை உண்மைப்படுத்துவதைப் போல் நாமே இந்த திரைப்படங்களை பார்த்து அவர்களுக்குறிய வருமானத்தை உண்டாக்கிவிடக் கூடாது.
முஸ்லிம்கள் சினிமாவைப் புரக்கணிக்கும் போது தானாகவே இவர்களின் வருமானத்தில் ஒரு பகுதி கண்டிப்பாக இல்லாமலாகும். வருமானம் இல்லாமலாகும் போது தானாக இவர்கள் களத்தை விட்டும் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே சினிமாக்களை புரக்கணித்து தூய்மையான இஸ்லாத்தை பின்பற்றும் ஒழுக்கமான மக்களாக அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக!
நன்றி - rasminmisc.com
Post a Comment