2012 டிசெம்பர் 21 உலகம் அழியாது - முஸ்லிம்கள் தெளிவாகவே உள்ளனர்

டிசெம்பர் 21ஆம் திகதியில் உலகம் அழிந்துவிடும் என்று மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள செய்தியை ஆர்தர் சி. கிளார்க் நிலையம் நிராகரித்துள்ளது.

அமெரிக்காவின் நாஸாவும் உலக அழிவு எதிர்வுகூறலை மறுத்துள்ளது டிசெம்பர் 21ஆம் திகதி, உலகம் இருளில் மூடிவிடும் என கூறப்படுவது அர்த்தமற்றது என மேற்படி நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அடிப்படைவாத மத அமைப்பொன்று டிசெம்பர் 21இல் உலக அழிவுபற்றிய இறுவட்டொன்றை வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

சூரியனிலிருந்து சில சமயம் தீப்பிளம்புகள் மற்றும் சூரிய புயல் என்பன ஏற்படுவதுண்டு. இவற்றை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னரே அறிந்துகொள்ள முடியும் என ஆர்தர் சி. கிளார்க் நிலைய பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த உலகம் 2012இல் அழிய மாட்டாது. எமது கிரகம் 4 பில்லியன் வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருப்பதாக உண்மையான விஞ்ஞானிகள் எவரும் கூறவில்லை என நாஸா கூறியுள்ளது.

குப்ரகங்கள் சில சமயம் பூமிக்கு அருகில் வருவதுண்டு. அவ்வாறு நடந்தாலும் பூமி மீது எந்தவித தாக்கமும் ஏற்படாது என நாஸா குறிப்பிட்டுள்ளது.

2012 – 2014 இடைப்பட்ட காலப்பகுதியில் சூரியனிலிருந்து தீப்பிளம்புகள் உண்டாக வாய்ப்புண்டு. இவற்றாலும் பூமி பாதிக்கப்பட மாட்டாது. சூரிய தீப்பிளம்புகள் சிலவேளை செய்மதி தொடர்பாடல்களைக் குழப்பலாம் என நாஸா கூறியுள்ளது.

இலங்கை வானில் பறக்கும் தட்டு காணப்பட்டதால் விமானப்படையை எச்சரிக்கையாக இருக்கும்படி ஆர்தர் சி. கிளார்க் நிலையம் கூறியதாக வெளியான செய்திகளையும் இந்நிலையம் மறுத்தமை குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு: முஸ்லிம்கள் தெளிவாகவே உள்ளனர்.ஏன் என்றால் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை பிரகாரம் அடையாளங்கள் பல நிகழாமல் இவ்வுலகம் அழியாது. எனவே இது போன்ற கருத்துக்கள் எத்தனை தான்வெளிவந்தாலும் அவை அறியாமையின் வெளிப்பாடே.

நன்றி - safwanlanka.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger