Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label முக்கிய செய்திகள். Show all posts
Showing posts with label முக்கிய செய்திகள். Show all posts

அனைத்து ஊர்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை எப்படி அறிந்து கொள்வது ?

தங்களது ஊர்களுக்குரிய சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் பின் வரும் இணையதளத்தின் மூலம் அதற்குரிய நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.
sc1
இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

மேற்கண்ட இணையதளத்தில் எப்படி அவரவர் தங்களது ஊர்களுக்குரிய அட்டவனையை பெறுவது என்பதை பார்ப்போம்.
Prayer times by city என்ற பகுதியில் தங்கள் ஊரின் ஆங்கில பெயரின் ஆரம்ப 3 அல்லது 4 எழுத்துக்களை கொடுத்து அதற்கு கீழ் உள்ள பெட்டியில் இந்தியாவை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இந்தியாவில் உள்ளவர்கள்)
முழு பெயரையும் ஆங்கிலத்தில் எழுதினால் நமக்கு தேவையான ஊர் கிடைப்பதில் சில நேரங்களி்ல் சிக்கல் ஏற்படும். காரணம், தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு spelling ஐ பயன்படுத்துவார்கள்.சில நேரங்களில் நமக்கு அவர்கள் எப்படி எழுதியுள்ளார்கள் என்பது தெரியாது.
இது போன்று நேரத்தில் ஆரம்பத்தில் இடம் பெறும் 3 அல்லது 4 வார்த்தைகளை கொடுத்தால் எளிதில் நமக்கு தேவையான ஊர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
சென்னை போன்ற மிகவும் பிரபல்யமான ஊர்களுக்கு முழு பெயரைம் கொடுக்கலாம்
உதாரணமாக தென்காசிக்கு எடுக்க வேண்டும் எனில்:
tenkasi

மேற்கண்டவாறு ten , India என கொடுத்து find கொடுத்தால் ten என ஆரம்பிக்கும் அனைத்து ஊர்களையும் காண்பிக்கும் .அதில் நமக்கு தேவையான தென்காசியை தேர்வு செய்து கொள்ளலாம்

tenkasi2

தென்காசியை தேர்வு செய்தவுடன் பின் வரும் பக்கம் இடம் பெறும்.

tenkasi3

இதில் நமக்கு தேவையான வருடம் அல்லது மாதத்தை தேர்வு செய்து கொண்டு அதற்கு பிறகு வரும் அட்டவனையை காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
அட்டவனையில் இடம் பெறும் சுப்ஹு நேரத்தை , சஹர் நேரமாகவும்  , மக்ரிப் நேரத்தை , இஃப்தார் நேரகமாகவும் கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
இதே வழி முறைகளை பயன்படுத்தி அனைத்து ஊர்களுக்கான தொழுகை நேரங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
சில நேரங்களில் ஒரே பெயரில் பல ஊர்கள் இடம் பெறும். அது போன்ற நேரத்தில் map city என்ற வசதியை பயன்படுத்தி நமது ஊரை எளிதில் தேர்வு செய்யலாம்.
உதாரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் என்ற ஊருக்கு அட்டவனை தேவை எனில் tir என கொடுத்தால்
same-name

மேற்கண்ட படத்தில் இரண்டு திருப்பத்தூர் இடம் பெற்றிருப்பதை நீங்கள் காணலாம். இதில் நமது ஊர் எது என்பதை அறிய map city ஐ தேர்வு செய்து மேப்பில் இடம்  பெற்றிருக்கும் அருகில் உள்ள ஊர்களை வைத்து எது நமது ஊர் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
சிறிய ஊர்களின் பெயர் சில நேரங்களில் இந்த இணையதளத்தில் இடம் பெற்றிருக்காது. அது போன்ற நேரங்களில் அருகில் உள்ள பெரிய ஊர்களின் பெயரைகளை கொடுத்து அட்டவனையை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இணையதளத்தை பயன்படுத்தி சென்ற ஆண்டுகளுக்குரிய மற்றும் வரப்போகும் ஆண்டுகளுக்குரிய தொழுகை , சஹர் மற்றும்  இஃப்தார் நேரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு: இந்த இணையதளத்தை நேரங்களை அறிந்து கொள்வதற்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளோம் இதில் இடம் பெற்றுள்ள மற்ற செய்திகளுக்கும் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
நன்றி - TNTJ.NET
0 comments

நாட்டை கட்டியமைக்கும் சிற்பிகள் யார்?


கார்பரேட் முதலாளி பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி யோகபீடத்தில் நிகழ்ச்சியை ஒன்றை தொடங்கி வைத்துப் பேசினார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. 
மோடியின் அருள் வாக்கு 1: 6 கோடி குஜராத்தியர்கள் குஜராத் மாநிலத்தை நம் நாட்டில் ஒரு வெற்றிகரமான மாநிலமாக மாற்றியதைப் பார்த்து விட்டேன். 
பதில் 1: குஜராத் மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் படும் அவஸ்தையும், தினமும் நிகழும்விவசாயிகளின் தற்கொலையும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும் இவைகள்தான் இந்த கொடுங்கோல் ஆட்சியாளரின் சாதனைகள். இவர் செய்தஅவலங்களை மக்கள் தலையில் போடுவதை பாருங்கள்.
மோடியின் அருள் வாக்கு 2: அதனால் 125 கோடி இந்தியர்களும் தங்கள் நாட்டை உலகில் ஒரு வெற்றிகரமான நாடாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பதில் 2: இவர் குஜராத்தில் செய்த அவலங்கள் போதாது என்று மொத்த இந்தியாவையும் சுடுகாடாக்க திட்டமிடுகிறார் போலும். குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக மத வெறியும், தலித் மற்றும் ஒடுக்கபட்ட மக்களுக்கு எதிராக ஜாதிய வெறியும் உரமிட்டு வளர்க்கப்படுகிறது. மீண்டும் நாடு வர்ணாசிரம கொள்கையை நோக்கி நகர்த்தப்படுகிறது.
மோடியின் அருள் வாக்கு 3: இந்த நாட்டைக் கட்டமைத்துப் பாதுகாப்பதில் சந்நியாசிகள், சாதுக்களின் பங்கு மிக அதிகம். நாம் குறைந்தது அவர்களைச் சந்தித்து, அவர்களின் பணியை அங்கீகரிக்க வேண்டும்.
பதில் 2: இவர்கள் நாட்டை கட்டியமைப்பதற்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்று மோடி ஒரு வெள்ளை அறிக்கை சமர்பிப்பாரா?விஞ்சானிகளையும், பொருளாதார மேதைகளையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு நாட்டை கட்டியமைக்கும் பணிக்கு இவர்களை நியமிக்கலாம்.
மோடியின் அருள் வாக்கு 3: பாபா ராம்தேவுக்கு அரசியல் ரீதியான கருத்தோட்டம் இருக்கும் என்று கூறப்படுவதை நான் நம்பவில்லை. அவர் மக்களுக்கான ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுகிறார். அவருடைய இந்தப் பயணத்தில் நிச்சயமாக நாட்டின் ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது. 
பதில் 2: இதைமாதிரி பெரிய ஜோக் எதுவும் இருக்க முடியாது. பாபா ராம்தேவ் மக்களின் ஆரோக்கியத்திற்கு வழி காட்டுகிறாராம். அப்படி என்றால் அதை இலவசமாவல்லவா காட்ட வேண்டும். வெறும் சைக்களில் வலம் வந்த இந்த சாமியார் இன்று வெளிநாட்டு காரிலும், சொந்த ஹெலி ஹாப்டர் விமானத்திலும் வலம் வருவதின் மர்மம் என்ன? வெளிநாட்டில் சொந்தமாக ஒருதீவும், உல்லாசா பங்களாவும் இருப்பதேன்? இதுதான் சந்நியாசத்திற்கு அளவுகோலா? 
முன்னர் காடுகளில் சிந்த்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் உண்மையிலேயே மக்களுக்கு தொண்டு புரிந்தார்கள். மருத்துவத்தை இலவசமா செய்தார்கள். பாபா ராம்தேவ், பிரமானந்தா, நித்தியானந்தா, ஸ்ரீ ரவிசங்கர், இவர்கள் எல்லாம் கார்பரேட் கொள்ளையர்களே அன்றி மக்களுக்கு சேவை புரியும் மகான்கள் இல்லை. 
 *ஒரு நாட்டை கட்டியமைக்கும் சிற்பிகள் உழைக்கும் வர்க்கமே*

நன்றி - சிந்திக்கவும் 
0 comments

டெல்லியை அச்சுறுத்தும் காமகொடூரர்கள்!


இந்திய தலைநகரான டெல்லி காமகொடூரர்களின் புகலிடமாக மாறிப்போனது. பொதுமக்கள் இவர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியும்  இந்த காமகொடூரர்களை அடக்க அரசு இயந்திரங்கள் தவறிவிட்டன.
டெல்லியில் பெண்களுக்கு எதிராக பலாத்காரம் நாளொன்றுக்கு சராசரி 3 என்கிற விகிதத்தில் நடக்கிறது. 2013 ஜனவரி to மார்ச் 31 வரை மட்டும் 393 பாலியல்  பலாத்காரங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவங்கள்: 1) இம்மாதம் 14-ம் தேதி மேற்கு டெல்லி சுல்தான்புரியில் பேருந்துக்குள் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக ராஜேஷ் கபல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2) 17-ம் தேதி கிழக்கு டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3) ஏப்ரல் 17-ம் தேதி கிழக்கு டெல்லி ஜகத்புரி பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி ஆசிரியர் பிரமோத் (32) கைது செய்யப்பட்டார்.
4) 18-ம் தேதி மேற்கு டெல்லி நஜஃப்கர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
5) டெல்லி காந்தி நகர் ஏரியாவில் 4 நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமி காணாமல் போனாள். இது தொடர்பாக அவளது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியின் வீட்டை ஒட்டிய மற்றொரு வீட்டின் அறையில் இருந்து அழுகுரல் கேட்டது. 
பூட்டியிருந்த அந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடந்தாள். உடனடியாக அவளை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவளது மர்ம உறுப்பில் காயம் பலமாக இருந்தது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
மக்கள் போராட்டம்: இச்சம்பவங்களை கண்டித்து, டெல்லியின் முக்கிய இடங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  டெல்லி போலீஸ் தலைமையகத்தையும், சோனியா காந்தி வீட்டையும், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் வீட்டையும் அவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  
மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் மதி கெட்டவர்கள்: போராட்டத்தின் எதிரொலியாக இந்தியா கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்தியா கேட்டை இணைக்கும் முக்கிய சாலை சந்திப்புகளில், மற்றும் பல்வேறு இடங்களிலும் போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை முன்பும் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
காமகொடூரன் கைது: 15-ம் தேதி 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மனோஜ்குமார் (22) என்பவனை வெள்ளிக்கிழமை அவனது செல்போன் நம்பரை வைத்து அவன் பீகாரில் ஒளிந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். 
என்ன தண்டனை கொடுக்க போகிறார்கள்: டெல்லியில், கடந்தவருடம் 2012 ஜனவரி முதல் டிசம்பர் வரை 661 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார்கள் என்பதே இப்பொழுது நம்முன் எழும் கேள்வி. 
மக்களை பாதுக்காக் நேரம் இல்லை: இந்திய அரசுக்கு வரி பணம் செலுத்தும் மக்களை பாதுக்காக் நேரம் இல்லை. ராஜபக்சே அரசின் ராணுவத்துக்கு ஆயுத பயிற்சி கொடுக்கவும், ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போரில் தலையிடுவதற்கும் அதிகமாக நேரம் இருக்கிறது. எங்கே இருந்து நாடு உருப்பட போகிறது.
நன்றி - சிந்திக்கவும் 
0 comments

இனியும் கேவலப்பட என்ன இருக்கிறது!


அவமானம் 1: கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த எம்.பி.க்கள், தொழிலதிபர்கள் என்று 18 பேர் கொண்ட குழு குஜராத் வந்தது. அவர்கள்  முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியதோடு அவருடைய நிர்வாக திறமையை பாராட்டினர். இதானால் அமெரிக்காவுக்கு மோடிக்கு விசா கிடைக்கும் என்று நம்பப்பட்டது.

இதானால் மீண்டும் நம்பிக்கையோடு அமெரிக்கா விசா  கேட்டு விண்ணப்பித்தார் மோடி. ஆனால் அமெரிக்க மோடியின் முகத்தில் கரியை  பூசியது. குஜராத் இனப்படுகொலை குற்றவாளியான மோடிக்கு விசா  வழங்கும் நடைமுறையில் எந்த மாற்றத்துக்கும் இடமில்லை என்று மீண்டும் அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது. மீண்டும்அவமானப்பட்டார் மோடி. 

அவமானம் 2: இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சில தினங்களுக்கு முன் டெல்லி வருகை தந்தார். இவரது தந்தை குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அதனால் சுனிதா குஜராத்தில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.

இவர் குஜராத் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இவரை அழைக்க முதல்வர் மோடி சார்பாக அரசு வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோடியின் அரசு மரியாதையை ஏற்க மறுத்து புறக்கணித்தார். மேலும் இவரை எப்படியாவது மோடியை சந்திக்க வைக்க அரசு துறையால் பல்வேறு முயற்ச்சிகள் செய்யப்பட்டன ஆனால் அனைத்தையும் புறக்கணித்து  மோடியின் முகத்தில் கரியை  பூசினார். 

 குறுக்கு வழியில் பிழைப்பு நடத்தும் திருட்டு உலகமடா தம்பி புரிந்து நடந்து கொள்ளடா என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. மோடியும் தான் செய்த இனப்படுகொலை குற்றங்களை மறைத்து பிரதமர் வேடம் போடலாம் என்ற கனவில் குறுக்கு வழியில் பல்வேறு காரியங்களை நிகழ்த்தி பார்கிறார். ஒன்றும் நடக்க மாட்டேன்கிறதே! 

குறிப்பு: அமெரிக்கா விசாவுக்கு பல்வேறு முறை விண்ணப்பித்தும் கிடைக்க வில்லை. பிறகு அமெரிக்க குழு ஒன்றை வரவழைத்து அவர்கள் மூலம் ஏதாது செய்ய முடியுமா என்று முயற்சித்தார். அதுவும் முடியவில்லை.

பிறகு அமெரிக்க விண்வெளி வீராங்கனையை தனது அரசு விருந்தினராக்கி உபசரித்து அமெரிக்காவிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்று பார்த்தார் அதுவும் முடியவில்லை. அமெரிக்க விசாவுக்கு ஏன்தான் இவர் ஆளாய் பறக்கிறாரோ தெரியவில்லை. 

ஏன்தான் இவருக்கு இந்த அமெரிக்க மோகமோ. ஆமா எங்கே பேனது இவரது தன்மானம், சுதேசி கொள்கை எல்லாம், பாரத் மாதாகி ஜெ என்று காத்தோடு கலந்து விட்டதோ. அமெரிக்க விசாவில் என்ன தேன் வடிகிறதா? வந்தால்  மகாதேவி (அமெரிக்கா விசா) இல்லையேல் மரண தேவி என்று அடம் பிடிக்கிறாரே மோடி. 
நன்றி - சிந்திக்கவும் 
0 comments

தில்சுக் நகர் குண்டு வெடிப்பு - முஸ்லிம்களை வேட்டையாடும் ஹைதராபாத் போலீஸ்!


ஹைதராபாத் தில்சுக் நகர் இரட்டை வெடி குண்டு சம்பவத்தை விசாரணை செய்து வரும் புலனாய்வு அமைப்புகள், ஹைதராபாத் முஸ்லிம்களை குறி வைத்து இயங்கி வருகின் றன. அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைப் பிடித்து தில்சுக் நகர் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள்  இவர் கள்தான் என அவர்களைக் காட்ட முயற்சிகள் மேற் கொண்டு வருகின்றன.

கடந்த காலங்களில் மேற் கொண்ட அதே முயற்சியை புல னாய்வு அமைப்புகள் இப்போதும் மேற்கொண்டு வருவது கவலைய ளிப்பதாக உள்ளது. கடந்த காலங்களில் பயங்கரவாதச் சம்பவங்க ளில் பொய்யாக தொடர்புபடுத் தப்பட்டு, கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளை ஞர்கள் பலரை, நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றங்கள் விடு தலை செய்திருக்கின்றன. அதோடு பொய் வழக்குகளில் கைது செய்த காவல்துறைக்கும் நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், முஸ்லிம் இளை ஞர்கள் தொடர்புபடுத்தப்பட்ட பயங்கரவாதச் சம்பவங்கள் தொடர்பாக உண்மை அறியும் குழுவாக செயல்பட்டு, "அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ஜோடிக் கப்பட்ட வழக்குகளில் விசாரணை அமைப்புகள் கைது செய்யும் போக்கை தடுத்து நிறுத்த வேண் டும் என மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பரிந்துரை களை அளித்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி பாராளுமன்றத்தில் கேள்வி நேரத் தின்போது, சமாஜ்வாதி கட்சி, ஜனதா தள் (யு) உள்ளிட்ட பல் வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமாஜ்வாதி கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பின ரான நரேஷ் அகர்வால் தலைமை யில் திரண்டு, பயங்கரவாத குற்றச் சாட்டுகளின் கீழ் கைது செய்யப் பட்டு, அவை நிரூபிக்கப்படாத நிலையிலும் கூட நாடு முழுவதிலு முள்ள பல்வேறு சிறைச்சாலைக ளில் அடைக்கப்பட்டுள்ள அப் பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினர்.
சபாநாயகரின் இருக்கையை நெருங்கி அவர்கள் குரலெழுப்பிய தால் அவர்களை அமைதிபடுத்த முயற்சித்தும் தோற்றுப் போன துணை ஜனாதிபதி ஹமீது அன் சாரி, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்கும் அளவிற்கு இந்த எம்.பி.க் கள் அப்பாவி முஸ்லிம்களை விடு தலை செய்ய வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலித்தனர்.
இந்த எம்.பி.க்கள், உத்திரப் பிர தேசம், பீகார் போன்ற மாநிலங்க ளைச் சேர்ந்தவர்கள். இந்த மாநி லங்களிலிருந்துதான் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அதிகள வில் பயங்கரவாதச் சம்பவங்களில் பொய்யாக காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவி முஸ்லிம் இளைஞர் களை பொய் வழக்குகளில் கைது செய்வதற்கும், சிறைப்படுத்துவ தற்கும் எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழும் நிலையிலும், தனது தவறான போக்கை விசா ரணை அமைப்புகள் மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை.
ஹைதராபாத் தில்சுக் நகர் குண்டு வெடிப்புச் சம்பவத்திலும் முஸ்லிம் இளைஞர்களை வேட் டையாடி வருகின்றன விசா ரணை அமைப்புகளும், காவல்து றையும்.
கடந்த 27ம் தேதி இரண்டு முஸ்லிம் இளைஞர்களை சீருடை அணியாத ஹைதராபாத் போலீ ஸôர் கைது செய்து ரகசிய இடத் தில் வைத்து விசாரித்து வருகின்ற னர். கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் மாணவர்கள். அவர் களை விதிமுறைகளை மீறி வன் முறையாக கைது செய்திருக்கி றது காவல்துறை.
ஹைதராபாத் எம்.இ.எம்.ஜே. கல்லூரியைச் சேர்ந்த சையத் ஷஃ பியுத்தீன் என்ற மாணவர் மாலை நேரத் தொழுகையை முடித்து விட்டு நண்பர்களுடன் கல்லூரிக் குத் திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலர் (சீருடை அணியாத போலீ சார்) ஷஃபியுத்தீனை கடத்திக் கொண்டு போய் ரகசிய இடத்தில் வைத்திருக்கின்றனர் என தெரி வித்துள்ளனர் அவரது நண்பர் கள்.
ஷஃபியுத்தீன் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அங்குள்ள காவல் நிலையத்தில் ஷஃபியுத்தீன் கடத் தப்பட்டிருப்பதாக புகார் பதிவா கியுள்ளது.
ஷஃபியுத்தீனை கடத்திச் சென்ற பின்னர் கல்லூரிக்கு வந்த இருவர், உள்ளே நுழையமுற்பட் டுள்ளனர். அவர்களை உள்ளே விட காவலாளி மறுத்துள்ளார். அவரை தள்ளி விட்டு சுவர் ஏறி உள்ளே குதித்த அவர்கள், ஷஃபி யுத்தீனின் நண்பர்களிடத்தில் ஷஃபியுத்தீன் பயன்படுத்திய லேப்டாப்பை கேட்டுள்ளனர்.
நண்பர்களோ நீங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தி னால்தான் நாங்கள் லேப் டாப்பை ஒப்படைப்போம் என மறுத்துள்ளனர். உடனே ஷஃபி யுத்தீனுடன் நண்பர்களை பேச வைத்துள்ளனர் அந்த இருவரும்! வந்திருப்பவர்களிடம் லேப் டாப்பை கொடுக்குமாறு போனில் கூறியுள்ளார் மாணவர் ஷஃபியுத்தீன் நடுக்கம் நிறைந்த குரலில்.
இதேபோல இன்னொரு சம்ப வம் ஹைதராபாத்தின் சைதா பாத் அமீன் காலனி பகுதியைச் சேர்ந்த அத்னான் என்ற மாண வர் அங்குள்ள அன்வாருல் உலூம் கல்லூரிக்கு இறுதிப் பரீட்சைக்கு முந்தைய தினம் காலை இவரை கைது செய்த சாதாரண உடையில் வந்த போலீஸ், சைபராபாத் காவல்து றையின் சிறப்பு நடவடிக்கை குழு வின் அம்பர்டேட் அலுவலகத் தில் அத்னானை விசாரணைக் காக வைத்திருப்பதாக அத்னா னின் குடும்பத்திற்கு நள்ளிரவில் தகவல் கொடுத்துள்ளது.
கைது செய்யும் நபருக்கு அவர் எந்த குற்றத்திற்காக கைது செய் யப்படுகிறார் என்பதும், கைது செய்யும் போலீஸ் கைதுக்கு சாட்சியாக அவரது குடும்பத்தி னரிடமோ, அண்டை வீட்டாரி டமோ கையெழுத்து பெற வேண் டும் என்பதும், கைது செய்யப் போகும் அதிகாரி சீருடையுட னும் அதில் தனது பெயர், பொறுப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் அடையாளங்க ளுடன் செல்ல வேண்டும் என்ப துமான நடைமுறைகளை பின் பற்ற வேண்டும் என்கிறது சட் டம்.
இதேபோல கைது செய்யப் பட்டவர் குறித்த தகவல்கள் அவ ரது குடும்பத்தினருக்கு உடனடி யாக தெரிவிக்க வேண்டும் என்ப தும், கைதானவரை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்திய பின்னர்தான் நீதிமன்ற அனுமதியுடன் அவரை தனது கஸ்டடியில் போலீஸ் எடு க்க வேண்டும் என்பதும் காவல் துறை மேற்கொள்ள வேண்டிய சட்ட நெறிமுறைகள்.
இந்த விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றி னால் அப்பாவிகளை பிடித்து சென்று அச்சுறுத்தி, துன்புறுத்தி அவர்கள் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கை போட முடியாது என் பதால் கடத்தல் கும்பல்களாக ஹைதராபாத் காவல்துறை செயல்பட்டிருக்கிறது.
எப்படியிருப்பினும், தில்சுக் நகர் குண்டு வெடிப்பு வழக்கில் எத்தனை முஸ்லிம்களைக் கைது செய்தாலும் காவல்துறையால் நீதி மன்றங்களில் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது. கைது செய்யப்படும் முஸ்லிம்கள் நிரப ராதிகள் என்று நீதிமன்றம் விடு தலை செய்யும் கடந்த காலங்க ளைப்போல! அப்போது இரண் டாவது முறையாக ஹைதராபாத் காவல்துறை கண்டனத்திற்குள் ளாகும்.
முதல் முறை மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அப்பாவிகளை கைது செய்து ஹைதராபாத் போலீஸ் கண்ட னத்திற்குள்ளானது எல்லோருக் கும் தெரிந்த விஷயம்தானே!
குண்டு வெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் - அசத்துத்தீன் உவைசி
தில்சுக் நகர் இரட்டை குண்டு வெடிப்பு விசா ரணையை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஆந்திர மாநில அரசு ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் மஜ்லிஸ் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் (எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவர் அசத்துத்தீன் உவைசி.
எம்.ஐ.எம். கட்சியின் 55வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கடந்த 2ம் தேதி ஹைதராபாத் தாருஸ் ஸலாம் அரங்கத்தில் பேசிய உவைசி,
“குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் கடுமை யாக தண்டிக்கப்பட வேண்டும். குண்டு வெடிப்பில் மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்கள் ஏழ்மை நிலையிலுள்ளவை. அத னால் அரசாங்கம் அவர்களுக்கு அனைத்துவித உதவி களையும் செய்ய முன் வர வேண்டும்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாரபட்சமற்ற முறையில் நேர்மையான விசாரணைநடிபேறு உறுதிப்படுத்த வேண்டும். குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு வகுப்புவாத வர்ணம் பூச மீடியாக்கள் முயற்சிக்கின்றன. குண்டு வெடிப்பு நடந்த ஒரு மணி நேரத்திற்குள் முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து பல்வேறு கதைகளை செய்தி ஊடகங்கள் அவிழ்த்து விட்டன.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரால் தொல்லைக் குட்படுத்தப்படுகின்றனர். மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்ப வத்தில் தவறுதலாக கைது செய்யப்பட்டு, அரசாங்கத்தால் நன்ந டத்தை சான்றிதழ் வழங்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களையும் விசாரணைக்காக தூக்கிச் சென்றுள்ளனர் காவல்துறையினர்.
காவல்துறையும், ஒரு பிரிவு மீடியாக்களும் மக்களுக்கு தவ றான செய்திகளைத் தருகின்றன. குண்டு வெடிப்பை நிகழ்த்தி யிருப்பவர்கள் இந்திய குடிமக்களை கொல்ல வேண்டும் என்றநோக்கத்தோடு செயல்பட்டிருக்கிறார்களே தவிர மத நோக்கத்தோடு அல்ல. எனவே பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
மத ரீதியாக மீடியாக்கள் மக்களை கூறுபோட வேண்டாம். செய்தி ஊடகங்களும், பத்திரிகைகளும் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து இயங்கினால் அவற்றின் மீது அவதூறு வழக்கு தொடருவேன்.
தில்சுக் நகர் குண்டு வெடிப்பு அப்சல் குருவின் தூக்கு தண்டனையின் எதிர் வினையாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியிருப் பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற அறிக்கைகளின் மூலம் ஒரே கோணத்தில் விசா ரணையை மேற்கொள்ள வேண்டும் என தனது அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணை அமைப்புகளை கட்டா யப்படுத்தியுள்ளார் சுஷில் குமார் ஷிண்டே...'' என பேசியுள்ளார் அசத்துத்தீன் உவைசி.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்ச கம், குண்டு வெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படை க்கக்கோரி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தற் போது ஆந்திர மாநில காவல்துறை 15 (விசார ணைக்) குழுக்களை நியமித்து இந்த விசாரணை யில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை குற்றவாளி களை கண்டுபிடிக்க முடியவில்லை.
தேசிய புலனாய்வு நிறுவனமும் நேர்மையாக விசாரிக்குமா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. ஏனெனில், இந் தியன் முஜாஹித்தீன் என்கிற (இல்லாத) அமைப்பு பெரும் சதித் திட்டம் தீட்டியி ருபதாக கடந்த செப்டம்பர் மாதம் இல்லாத அமைப்பிற்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தது புல னாய்வு நிறுவனம்.
இச்சூழலில், தில்சுக் நகர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக, ஏற்கெனவே வேறு வழக்கில் விசாரணைக் கைதிகளாக திகார் சிறையில் இருக்கும் சையது மக்பூல் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரை கஸ்டடியில் எடுத்து வைத்திருக்கும் புல னாய்வு நிறுவனம், அவர்களை ஹைதரபாத்திற்கு விசாரணைக் காக கொண்டு சென்று விசாரித்து வருகிறது.
இதன் அடிப்படையில் பார்த்தால் தேசிய புலனாய்வு நிறுவனமும் - அப்பாவி முஸ்லிம்களை குண்டு வெடிப்பில் சம்மந்தப்படுத்தி அவர்களை இரையாக் குமோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.
ஏற்கெனவே இந்துத்துவா பயங்கரவாதிகளை மக்கா மஸ்ஜித், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், அஜ்மீர் தர்கா உள்ளிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் துரத்தி துரத்தி கைது செய்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தது புலனாய்வு நிறுவனம். தில்சுக் நகர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அது புல னாய்வு நிறுவனமாக செயல்படுகிறதா புடலங்காய் நிறுவனமாக செயல்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தாடி வைத்த முஸ்லிம்களை...
ஹைதராபாத் தில்சுக் நகர் இரட்டை குண்டு வெடிப்புக்கு பின்னர் காவல்துறை மேற்கொண்டு வரும் விசாரணையும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மற்றும் காவல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் விதமும் முற்றிலும் ஒரு சார்பு மனப்போக்கை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.
ஹைதராபாத் நகரில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்றபெயரில் சாலைகளில் குவிக்கப்பட்டிருக்கும் பெரும் எண்ணிக்கையி லான காவல் படை ஹைதராபாத்வாசிகளுக்கு மத்தியில் ஒரு பீதியை, பய உணர்வை ஏற்படுத்து வதற்காகத்தான் என்றே காவல்துறையின் நடவ டிக்கைகளின் மூலம் உணர முடிகிறது.
தீவிரவாதிகள் வேட்டை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தொல்லைப்படுத்தியும் இலக்காக்கியும் வருகிறது ஹைதராபாத் போலீஸ். கடந்த 2ம் தேதி சனிக்கிழமை காலை ஹைதரா பாத் பேகம் பஜார் பகுதியில் தாடி வைத்த முஸ்லிம் இளைஞர்களை புகைப்படம் எடுத்தும், அதை தங்களின் மொபைல் போன்களில் பத்திரப்படுத் துவதுமான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பாவி முஸ்லிம்கள் தங்களை சந்தேகத்திற்குள்ளாக்கும் போலீஸின் இத்த கைய தாக்குதல் ரீதியான நடவடிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்தபடி நடந்து கொண்டனர் என்கிறது ஹைதராபாத்திலிருந்து வெளிவரும் சியாசத் உருது நாளேடு.
இதுபோன்ற செயல்கள் சட்ட மற்றும் மனித உரிமை மீறல் என்பது தெரிந்த நிலையிலும் ஒரு சமுதாயத்தை குறி வைத்து இத்தகைய காரியங்களில் பாதுகாப்பு போலீசார் ஈடுபடுகிறார்கள் என்றால் அது அதிகார வர்க்கங்கள் இடுகின்ற கட்டளை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
மேலதிகாரிகளின் வழிகாட்டுதல்படி பாதுகாப்பு போலீசார் இப்படி வரம்பு மீறி நடந்து கொள்ளும் நிலையில், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டால் மாட்டிக் கொள்வதும், பணி இடை நீக்கம் செய்யப்படுவதும் பாதுகாப்பு காவலர்கள்தான்.
இவர்களுக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள் தங்கள் பெயர் கூட வெளிவராத வகையில் தப்பித்துக் கொள்கிறார்கள்.
நன்றி - கீற்று 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger