ஈரானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்ப்பட்டுள்ள ஹஸன் ரூஹானி பற்றி பலரும் பல செய்திகளையும் எழுதி வருகின்றார்கள்.
வழமை போன்று ஈரானுக்கு கூஜா தூக்குபவர்கள் இவரை வல்லவர் நல்லவர் என்று வாயார புகழ்ந்து தள்ளுகின்றார்கள்.
பரவாயில்லை எது எப்படியோ ஈரானின் அரசியில் அரங்கத்தில் ஓர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இலங்கை அரசியலிலும் இந்த மாற்றம் செல்வாக்கு செலுத்தலாம்.
காரணம் ஹஸன் ரூஹானி நவீனத்துவ சிந்தனை கொண்டவர்களின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்ற ஒருவர். ஈரானின் முன்னால் ஜனாதிபதி அஹ்மத் நஜாதியினால் ஜனாதிபதி வேற்பாளராக நிறுத்தப்பட்ட “ரஹீம் மஷ்ஹதீ” என்பவரை போட்டியிட தகுதியற்றவர் எனக் கூறி போட்டியில் இருந்து நீக்கினார் ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயதுல்லாஹ் கொமைனி. அஹ்மத் நஜாதிக்கும் கொமைனிக்கும் இடையில் இருந்த பகையுணர்வு ரஹீமின் ஜனாதிபதி கணவில் மண்ணை அள்ளிப் போட்டது.
ஈரான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த 600 பேரில் வெறும் 08 பேரை மாத்திரமே போட்டிக்கு தகுதி என கொமைனி தெரிவு செய்திருந்தார். அதிலும் ரூஹானிக்கு தனது ஆதரவை வெளிக்காட்டியிருந்தார். நவீனத்துவ ஆதரவாளரான ரூஹானிக்கு கொமைனி ஆதரவு தெரிவித்தது ஏன்?
அமெரிக்க எதிர்ப்பு அரசியில் நடத்தும் ஈரானின் அரசியில் சதுரங்கத்தில் மாற்றம் நிகழும் வாய்ப்புகள் இருப்பதையே இது காட்டுகின்றது. காரணம் ரூஹானி ஓர் மேற்குலக ஆதரவாளர் என்பது பிற்குறிப்பு. ஆனால் ஈரானிய மக்களில் மனோநிலையில் இருந்து ஆய்வு செய்யும் போது இவர் பெரும் சவால்களுக்கு உள்ளாக நேரிடும் காரணம் ஈரான் மக்கள் அமெரிக்க எதிர்த்து அரசியலை ஆதரிப்பவர்கள் ரூஹானி மேற்குலக ஆதரவாளர் இப்படியான ஒரு இடியப்ப சிக்களில் ஈரானிய அரசியல் தற்போது சிக்கியுள்ளது. இதன் தாக்கம் எப்படியாக இருந்தாலும் இலங்கையும் இந்த அரசியல் மாற்றத்தில் சில இக்கட்டு அரசியல் நிலைக்கு தள்ளப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
எவ்வாறாயினும் முன்னால் ஈரானிய ஜனாதிபதி அஹ்மத் நஜாதியை விடவும் பல விதங்களில் அடிமட்ட அயோக்கிய ஷீயா சிந்தனை கொண்டவர் இந்த ரூஹானி இவரின் அரசியல் பிரவேசம் கண்டிப்பாக இலங்கை தர்கா வணங்கிகளிடம் பெரும் வரவேற்புக்குறியதாக இருக்கும் எண்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் வட கிழக்கில் வாழும் ஏழை முஸ்லிம்களை குறி வைத்து ஈரானின் புதிய வீடமைப்புத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டாலும் சந்தேகிப்பதற்கில்லை.
வழிகெட்ட ஷீயா சிந்தனையை வளர்ப்பதற்கு பாடுபடும் இந்த வழிகேடர்களை அழிக்க அல்லாஹ்வே போதுமானவன்.
(இன்ஷா அல்லாஹ் இன்னும் இரு தினங்களில் ஈரானின் புதிய ஜனாதிபதி பற்றிய மேலதிக தகவல்களை தொகுத்து வளங்க எண்ணியுள்ளேன். அல்லாஹ் போதுமானவன்.
-RASMIN MISc
Post a Comment