தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகப் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30-க்குள் அனுப்ப வேண்டும். 2013-14ம்ஆண்டுக்கான மருத்துவ ஆய்வக பட்டயப்படிப்பு, செவிலியர் உதவியாளர் பயிற்சிகள்தொடங்கப்பட உள்ளன.
மாநகராட்சி மாணவ மாணவியருக்கும் மற்றும் மாநகராட்சியில் பணிபுரியும்பணியாளர்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசுசார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சியும்,இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் (அல்லது) இயற்பியல், வேதியியல்,விலங்கியல் மற்றும் தாவரவியல் (அல்லது) வாழ்க்கை தொழிற்கல்விப் பிரிவில்மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் தொழில் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் பிற்பட்டவர்கள், மிகவும் பிற்பட்டவர்கள் 50 சதவீதமும்,தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் 45 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். 2013 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் 17 வயதுக்கு மேல் 32 வயதுக்குள் இருக்கவேண்டும். இரண்டு ஆண்டுகள் வழங்கப்படும் இந்தப் பயிற்சிக்கு மாதக் கல்விக்கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.
செவிலியர் உதவியாளர்களுக்கான (பெண்களுக்கு மட்டும்) கல்வித் தகுதி 10-ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓராண்டு அளிக்கப்படும் இந்தப் பயிற்சிக்கு மாதக் கல்விக் கட்டணமாக ரூ. 75செலுத்த வேண்டும். 187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை,சென்னை-81-ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் ரூ. 50 செலுத்திவிண்ணப்பப் படிவத்தை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை4 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட்30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தொகுப்பு - ராஜா முகம்மது
|
Post a Comment