பள்ளி மாணவர்களிடையே ஜாதிகள் தொடர்பான மூட நம்பிக்கைகளை அகற்றும் வகையில் ஆறாம் வகுப்புதமிழ்ப் பாடப்புத்தகத்தில் ஜாதிகளற்ற சமுதாயம் தொடர்பான பாடம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப் பட்டன. இன்றே +1 தவிர்த்து அனைத்துப் பள்ளிகளுக்கும் 4.5 கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், " பள்ளி மாணவர்களிடையே ஜாதிகள் தொடர்பான மூட நம்பிக்கைகளை அகற்றும் வகையில் பாடப்புத்தகங்களில் புதிய பகுதிகள் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதனடிப்படையில் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் ஜாதிகளற்ற சமுதாயம் தொடர்பான பாடம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல் இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு புதியப் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளன." என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், "இந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்புக்கும் முப்பருவ முறை அமல்படுத்தப்படுகிறது. எனவே, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முதல் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிட்டு அனுப்பப்பட்டுள்ளன. இரண்டாம் பருவத்துக்கு செப்டம்பர் மாதத்தில் புத்தகங்கள் அனுப்பப்படும்.
பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்காக மொத்தம் ஒரு கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இதுவரை 20 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. வழக்கமாக பிளஸ்-1 வகுப்புகள் ஜூன் கடைசி வாரத்தில்தான் தொடங்கும். வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கான புத்தகங்களும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும்." என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment