பாட்னா- பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது.
இதனை அடுத்து பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் முதல் மந்திரி நிதிஷ் குமார், கவர்னரை சந்தித்து தனது கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கோரிக்கை விடுத்தார்.
அதன்படி இன்று பீகார் சட்டசபை கூட்டப்பட்டது. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், சட்டப்பேரவையில் இருந்து வெளியேறுவதாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நாத் கிஷோர் யாதவ் கூறினார்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நிதிஷ் முறைகேடு செய்ததாகக் கூறி, பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். பாரதீய ஜனதாவிற்கு 91 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
2005ம் ஆண்டில் மாநிலத்தில் காங்கிரஸ்--ராஷ்டீரிய ஜனதா தளம் ஆட்சியை துரத்தியதை அடுத்து தற்போது பாரதீய ஜனதா எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது.
பா.ஜனதா வெளிநடப்பு செய்ததால், நிதிஷ்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது உறுதி ஆனது. இதனை அடுத்து 126 ஓட்டுகள் பெற்று நிதிஷ்குமார் வெற்றி பெற்றார்.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு காங்கிரஸ், சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்
Post a Comment