இந்திய அமைச்சரவையில் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கமுன்னதாக நடந்துள்ள இறுதி அமைச்சரவை மாற்றம் இதுவென்று கருதப்படுகிறது.
மல்லிக்கா அர்ஜூன் கார்கே ரயில்வே துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ் நெடுஞ்சாலை துறையையும் சிஸ் ராம் ஓலா தொழிலாளர் நலன்களுக்கான துறையையும் பொறுப்பேற்றுள்ளனர்.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னாக காங்கிரஸ் தலைமையிலான ஆளுங்கூட்டணிக்கு உத்வேகம் அளிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் கிரிஜா வியாஸுக்கு வீடமைப்பு, நகர அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்புத் துறைகள் கிடைத்துள்ளன.
புதிய நியமனங்களோடு சேர்த்து இந்திய அமைச்சரவையின் அளவு 77 அமைச்சர்களாக அதிகரித்துள்ளது.
சிபி ஜோஷி மற்றும் அஜய் மாக்கன் ஆகிய இருவரும் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பதவிகளை இராஜினாமா செய்த காரணத்தால் இந்த புதிய அமைச்சரவை மாற்றம் வந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சுதர்ஷனன் நாச்சியப்பன் வணிக, தொழிற்துறை துணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
Post a Comment