இந்தியாவில் கடுமையான மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும்
மண்சரிவு ஆகியவற்றால் குறைந்தபட்சம் 150 பேராவது பலியாகியுள்ளனர்.
இந்துக்களின் யாத்திரைத் தலமான உத்தர்காண்ட் மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் யாத்திரிகர்கள் உட்பட 75,000 பேர் அகப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மீட்புப் பணிகளில் ஹெலிக்கொப்ட்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டைய மாநிலங்களிலும் மாரி காலத்துக்கு முன்னதான மழை பெய்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் வழமையான சராசரிக்கும் 68 வீதம் அதிகமான மழை ஏற்கனவே பெய்துவிட்டதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment