ஜும்ஆ உரையில் காஃப் அத்தியாயத்தை ஓதுவது பற்றிய ஆய்வு.
மறுப்புக்கு மறுப்பு.
ஜும்மா உரையின் போது காஃப் சூராவை கட்டாயம் ஓத வேண்டும் என்று ஸைனீ என்பவரும் அவருடன் உள்ள சிலரும் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் இது தொடர்பாக அழைப்பு பத்திரிக்கையில் நாம் மறுப்புகளை வழங்கி வந்தோம். ஆனால் சம்பந்தமில்லாத சில செய்திகளை சொல்லி தனது வழிகெட்ட சிந்தனையை சரியாக்க முனைந்த ஸைனி என்பவருக்கு சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் எழுதியுள்ள மறுப்பு ஆய்வை இங்கு வெளியிடுகின்றோம்.
……………………..
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் காஃப் சூராவை ஓதினார்கள் என்ற கருத்தில் ஒரு நபிமொழி உள்ளது. இதை அடிப்படையாக வைத்து இலங்கையில் உள்ள சிலர் ஒவ்வொரு ஜும்ஆவிலும் காஃப் சூரா ஓதாமல் ஜும்ஆ நடத்தக்கூடாது என்று கூறிவந்தனர்.
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்றாலும் அது இவர்கள் கூறும் கருத்தைத் தரவில்லை. எனவே இவர்களின் நிலைபாட்டிற்கு இந்தச் செய்தி ஆதாரமாக முடியாது என்பதை விளக்கி நாம் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டோம்.
இலங்கையைச் சார்ந்த ஸைனி என்பவர் நம்முடைய இந்த ஆய்வுக் கட்டுரையை தவறானது என்று விமர்சித்து ஒரு மறுப்புக் கட்டுரையை வெளியிட்டார்.
இந்த மறுப்புக் கட்டுரையில் அவர் கேட்ட கேள்விகளுக்கும் எழுப்பிய வாதங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் நாம் ஒரு மறுப்புக் கட்டுரையை நமது அழைப்பு பத்திரிக்கையில் வெளியிட்டோம்.
நமது மறுப்புக் கட்டுரையில் தவறான வாதங்கள் இருப்பதாக விமர்சித்து தற்போது அவர் மறுபடியும் ஒரு கட்டுரை தயார் செய்து அனுப்பியுள்ளார். அவருடைய விளக்கங்களுக்கும் கேள்விகளுக்கும் இந்தக் கட்டுரையில் பதிலளிக்கிறோம்.
நம்மை விமர்சித்து இரண்டு கட்டுரைகளை மாத்திரமே வெளியிட்டிருக்கின்றார். இந்த இரண்டிற்குள் முரண்பாடுகள். சொன்னதைச் சொல்லவில்லை என்று பொய் சொல்லுதல், ஆதாரங்களை மறைத்தல் போன்ற காரியங்களை இவரிடம் பார்க்க முடிகின்றது.
இவருடைய வாதங்களை ஒவ்வொன்றாக நாம் ஆராய்வோம்.
………………………………………………………………………………………………………………………………….
சைனியின் முதலாவது வாதம்.
நாம் எமது கடந்த மறுப்பில் முக்கியமான ஒரு கேள்வியையும் எழுப்பியிருந்தோம். அது பற்றி இவர் கண்டு கொள்ளவேயில்லை. எமது கேள்வி என்னவெனில் நபி (ஸல்) அவர்கள் (ஜும்ஆவின்) இரு உரைகளுக்கிடையில் உட்காருவார்கள் என ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு இடம் பெற்ற எந்த ஹதீஸ்களிலும் இரு உரைகளுக்கிடையில் உட்காருங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்ததாக இடம் பெறவில்லை. மேலும் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் இரு உரைகளுக்கிடையில் உட்காருவார்கள் என்றும் இடம் பெறவில்லை.
ஆனால் எமக்கு மாற்றுக்கருத்திலுள்ள சகோதரர்கள் அனைவருமே ஒவ்வொரு ஜும்ஆவிலும் இரு உரைகளுக்கிடையில் உட்கார்ந்து வருகின்றனர். தங்கள் நிலைப்பாட்டில் உறுதியானவர்களாக இருந்தால் இரு உரைகளுக்கிடையில் அமர்வது அவசியமில்லை என அறிவிக்க வேண்டும். அல்லது ஒரு முறையாவது இதை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும். இதை நாம் விதண்டாவாதமாகக் கேட்கவில்லை. நாம் ஒரு விடயத்தில் ஒரு முடிவை எடுத்தால் அது நியாயமானதாகவும் முரண்பாடில்லாததாகவும் இருக்க வேண்டும். நாம் எடுக்கும் முடிவு நமது மனச்சாட்சிக்கே விரோதமாக இருந்தால் அம்முடிவில்தான் ஏதாவது கோளாறு இருக்கின்றது என்பதே அதன் அர்த்தமாகும்.
முதல் வாதத்துக்கான நமது பதில்.
காப் சூராவை ஒவ்வொரு ஜும்மாவிலும் ஓதவேண்டும் என்பதை நிறுவிட மற்றொரு சட்டத்தை இவர் துணைக்கு அழைக்கிறார். அதாவது ஜும்மாவில் இரு உரைகளுக்கு மத்தியில் அமர்ந்தார்கள் என்று ஹதீஸ் உள்ளது. எல்லா ஜும்மாவிலும் எல்லாக் காலங்களிலும் இவ்வாறு அமர வேண்டும் என்று சொல்லும் நீங்கள் காப் சூரா விஷயத்தில் மட்டும் அப்படி முடிவெடுக்காதது ஏன் என்பது இவரது முதல் வாதம்.
ஜும்மாவில் இரு உரைகளுக்கு இடையில் உட்கார வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து செய்வது போல் காஃப் சூரா விஷயத்திலும் செய்ய வேண்டும் என்ற இவரது வாதம் எப்போது சரியானதாக இருக்கும்? இரண்டும் ஒரே மாதிரியான அம்சம் கொண்டதாக இருந்தால் தான் இது சரியானதாக ஆகும். இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசம் இருந்தால் இந்த வாதம் சரியானதாக இருக்க முடியாது. இந்த நுணுக்கமான விஷயம் இவருக்குத் தெரியவில்லை.
ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கு இடையில் அமருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிடவில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கு இடையில் அமர்வார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன.
ஜும்ஆவில் உரை நிகழ்த்துவது ஒரு இபாதத். இந்த வணக்கத்தை நபி (ஸல்) அவர்கள் இந்த முறையில் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்கள்.
ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கிடையில் அமருவதை விட்டுவிட்டால் நபியவர்கள் நமக்கு வழமையாகச் செய்து காட்டிய முறையை நாம் விட்டுவிடுவோம். எனவே ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கிடையில் அமர்வது அவசியமானதாகும் என்ற வாதம் சரியானது தான்.
இவ்வளவு காலம் அமர்ந்தார்கள் அல்லது இன்ன காரணத்துக்கு அமர்ந்தார்கள் என்றோ சொல்லப்படாமல் ஜும்மாவில் அமர்வார்கள் என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காரணத்துக்காக அமர்ந்தார்கள் என்று சொல்லப்படவில்லை. எனவே நாமும் அதைப் பொதுவாகவே புரிந்து கொள்ள வேண்டும்
உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வயது முதிர்ந்த போது நீண்ட நேரம் நிற்க முடியாததால் இடையில் சிறிது உட்காருவார்கள் என்று ஹதீஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை எப்படிப் புரிந்து கொள்வோம்? யாருக்கு இயலவில்லையோ அவர் உட்கார்ந்து கொள்ள அனுமதி உண்டு. அனைவரும் உட்கார வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற முடிவைத்தான் இதில் இருந்து எடுக்க முடியும்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தை ஒரு காரணத்தின் நிமித்தம் செய்திருந்தால் அந்தக் காரணம் இருக்கும் பட்சத்தில் அது போன்று செய்யலாம். காரணம் இல்லாவிட்டால் செய்யத் தேவையில்லை என்று முடிவெடுப்பது தான் சரியானது.
ஆனால் காஃப் சூரா ஓதியது குறித்த ஹதீஸ்களில் காரணம் சொல்லப்பட்டுள்ளது.குறிப்பிட்ட காரணத்துக்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்தார்கள் என்றால் அதை எப்போதும் செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் காஃப் சூராவை ஓதியது இது போன்று காரண அடிப்படையில் அமைந்ததாகும். மக்களுக்கு காஃப் சூராவைக் கற்றுக் கொடுப்பதற்காகத் தான் ஓதினார்கள் என்பது ஹதீஸில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே மக்களுக்குப் போதிக்கும் விதமாக குறிப்பிட்ட காலம் காஃப் சூராவை ஓதலாம். மக்கள் கற்றுக்கொண்டு விட்டால் அதை ஓதவேண்டிய தேவையில்லை. காஃப் சூராவைப் போன்று மக்கள் கற்றுக் கொள்ளாத வேறு சூராவை ஓதிக்காட்டியும் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.
எனவே நபி (ஸல்) அவர்கள் இரண்டு உரைகளுக்கு இடையில் அமர்ந்ததும் அவர்கள் காஃப் சூரா ஓதியதும் ஒரே மாதிரியான விசயங்கள் இல்லை. இரண்டும் வெவ்வேறானவை.
முதலாவது காரணம் இல்லாமல் அமைந்த விசயம்.
இரண்டாவது காரணத்துடன் அமைந்த விசயம்.
இரண்டையும் முடிச்சு போடுவது மொட்டைத் தலைக்கும் முலங்காலுக்கும் முடிச்சு போடும் செயலாகும். இந்த செயலை ஸைனி செய்திருக்கின்றார்.
மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக செய்யப்பட்டது என காரணம் தெளிவாக ஹதீஸில் வந்துவிட்டதால் இது கட்டாயம் ஓதப்படவேண்டிய விசயமில்லை என்பது தெளிவாகின்றது.
இது தவிர நபியவர்கள் குறிப்பிட்ட காலம் தான் ஓதினார்கள் என்ற கருத்தில் அது குறித்த ஹதீஸ்கள் அமைந்துள்ளன.
ஜும்மாவில் குறிப்பிட்ட காலம் வரை தான் இரு உரைகளுக்கு இடையில் அமர்ந்தார்கள் கருதும் வகையில் எந்த ஹதீஸும் இல்லை.
காரணங்கள் எதுவும் சொல்லப்படாமலும் குறிப்பிட்ட காலம் வரை ஓதினார்கள் என்ற கருத்தை தராமலும் ஒவ்வொரு ஜும்ஆவிலும் காஃப் சூராவை ஓதுவார்கள் என்று மட்டும் ஹதீஸ் வந்திருந்தால் ஸைனி கூறுவது போன்று நாமும் ஒவ்வொரு ஜும்ஆவிலும் காஃப் சூராவை ஓத வேண்டும் என்று கூறுவோம்.
ஆனால் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஒரு காரணத்துக்காகவே இதைச் செய்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்ட காலம் வரைதான் ஓதினார்கள் என்பதும் தெளிவாக வருவதால் இது கட்டாயம் ஓதப்பட வேண்டிய விசயம் இல்லை என்கிறோம்.
எனவே ஜும்மா உரைகளுக்கு இடையில் அமர்வது சம்மந்தமான ஹதீஸ்களை காஃப் சூரா ஓதியது சம்மந்தமான ஹதீஸ்களைப் போல் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அறியாமையின் வெளிப்பாடாகும்.
சைனியின் இரண்டாம் வாதம்.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் ஓதியதாக இடம் பெறும் காபை ஒரு ஜும்ஆவிலும் ஓதமாட்டார்கள் ஆனால் ஒவ்வொரு ஜும்ஆ என இடம் பெறாத அம்சத்தை ஒவ்வொரு ஜும்ஆவிலும் அமுல்படுத்தி வருகிறார்கள் இது முரண்பட்ட அளவுகோல் என்பதைத்தான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தாங்கள் விதித்த கோட்பாட்டில் தங்களுக்கே நம்பிக்கை இல்லையென்றால் அதை நாம் என்னவென்று வர்ணிப்பது? இதுதான் எமது கேள்வியாகும். இக்கேள்வியை அப்பாஸ் அலி கண்டுகொள்ளவே இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எமது இக்கேள்விக்கு அப்பாஸ் அலி பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார்.
இரண்டாம் வாதத்துக்கு நமது பதில்.
அவர் கேட்ட கேள்வியை நாம் கண்டுகொள்ளாமல் சென்று விட்டோம் என்று கூறுகிறார். இதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறும் கேட்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் காஃப் சூராவை மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காகத் தான் ஓதினார்கள் என்ற மேற்கண்ட விளக்கத்தை நாம் தற்போது இந்தக் கட்டுரையில் புதிததாக வைக்கவில்லை.
ஜும்ஆவில் காஃப் சூரா ஓதுவது தொடர்பாக நாம் முதலில் எழுதிய கட்டுரையிலேயே இந்த விளக்கத்தைக் கூறியுள்ளோம். மேற்கண்ட கேள்வியை அவர் நம்மிடம் கேட்ட பிறகும் அவருக்கு பதிலளித்து எழுதிய கட்டுரையிலும் இந்த விளக்கத்தைக் கூறியுள்ளோம்.
அவர் கேட்ட கேள்விக்கான பதில் இந்த விளக்கத்தில் அடங்கியிருக்கின்றது. எனவே இதற்கு தனியாகப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவர் புரிந்துகொள்வார் என்று நினைத்தோம். எனவே இந்த கேள்விக்கு என நாம் தனியே பதிலளிக்கவில்லை.
ஆனால் இவருக்கு புரியக்கூடிய சக்தி இல்லை என்பது இப்போது தெரியவருவதால் இரண்டு கட்டுரைகளிலும் கூறிய அதே விளக்கத்தை மூன்றாவது முறையாக இவர் கேட்ட கேள்விக்குரிய பதிலாக மேலே தந்துள்ளோம்.
என்னவோ பயங்கரமான கேள்வியைக் கேட்டுவிட்டது போலவும் அதற்கு நாம் பதில் சொல்லாமல் மாட்டிக்கொண்டது போலவும் நினைத்து சொல்லாமல் விட்டதற்குரிய காரணத்தையும் கேட்கும் அளவுக்கு இவர் நடந்து கொள்கிறார் என்றால் இவருடைய சிந்தனைத் திறன் எப்படிப்பட்டது என்பதை அறிய முடிகின்றது.
இப்போது இவர் எழுதியுள்ள மறுப்பைப் பார்க்கும் போது இவரிடம் உள்ள கோளாறு என்ன என்பது வெளிச்சமாகின்றது.
அதாவது காஃப் அத்தியாயம் சம்மந்தமான ஹதீஸ்களில் ஒவ்வொருஜும்மாவிலும் என்று வந்துள்ளது. ஒவ்வொரு என்ற வார்த்தை வந்துள்ளதால் எல்லாக் காலத்திலும் எல்லா ஜும்மாவிலும் என்று தான் பொருள் செய்ய வேண்டும் என்று இவருக்கு ஒற்றைச் சிந்தனை ஆழமாகப் பதிந்துள்ளது. அதுதான் இவரது கோளாறுகளுக்கெல்லாம் காரணம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு என்பது அது பயன்படுத்தப்படும் இடத்துக்கும் விதத்துக்கும் ஏற்ப பொருள் தரும்.ஒவ்வொரு என்று வந்து விட்டாலே போதும் ஒன்றுவிடாமல் ஒவ்வொன்று என்றுதான் பொருள் செய்ய வேண்டும் என்று யாரோ இவருக்குக் கற்பித்துள்ளார்கள் போலும்.
وَالشَّيَاطِينَ كُلَّ بَنَّاءٍ وَغَوَّاصٍ (37)38
இந்த வசனத்தில் கட்டடம் கட்டும் ஒவ்வொருவரையும் முத்துக்குளிக்கும்ஒவ்வொருவரையும் சுலைமானுக்கு வசப்படுத்தினோம் என்று கூறப்பட்டுள்ளது.ஒவ்வொரு என்று வந்துள்ளதால் உலகத்தில் எல்லா கொத்தனார்களும் உலகம் முழுவதும் முத்துக் குளிப்போர் அனைவரும் அவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தார்கள் என்று இவர புரிந்து கொள்வாரா? அல்லது சுலைமான் நபிக்கு தேவையான அளவுக்கு இந்தப் பணியாளர்கள் வழங்கப்பட்டு இருந்தார்கள் என்று புரிந்து கொள்வாரா?
(57) وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ30:58
மேற்கண்ட வசனத்தில் குர்ஆனில் ஒவ்வொரு உதாரணமும் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. உலகில் அன்று முதல் இன்று அவரை மனிதர்கள் பயன்படுத்தும் எல்லா உதாரணமும் குரானில் உள்ளது என்று இவர் புரிந்து கொள்வாரா? அல்லது மனிதன் படிப்பினை பெறத்தேவையான அளவுக்கு உதாரணங்கள் உள்ளன என்று புரிந்து கொள்வாரா?
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ (27)22
ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்திலும் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்ற வசனத்திலும்ஒவ்வொருஎன்று உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா மெலிந்த ஒட்டகத்திலும் ஒரு ஒட்டகம் கூட விடுபடாமல் ஏறி மக்கள் ஹஜ்ஜுக்கு வந்தார்கள் என்று மேற்படி ஆய்வாளர் வாதிடுவாரா?
وَقَالُوا إِنْ نَتَّبِعِ الْهُدَى مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَا أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ (57)57
மேற்கண்ட வசனத்தில் ஒவ்வொரு கனி வர்க்கமும் மக்காவுக்கு கொண்டு வரப்படும் என்று உள்ளது. அப்படியானால் அன்று முதல் இன்று வரை உலகில் உள்ள எல்லாக் கனிகளும் ஒரு கனி விடாமல் அங்கே கிடைக்கும் என்று இவர் புரிந்து கொள்வாரா?
இன்றைக்கு போக்கு வரத்து வசதிகள் நவீனமாக்கியுள்ளது. இந்தக் காலத்தில்கூட உலகில் உள்ள எல்லாக கணிகளும் அங்கே கிடைப்[பதில்லையே? எல்லாக் கனிகளும் என்பதன் பொருளை இவர் விளங்கியது போல் விளங்கி குர்ஆன் பொய்யானாலும் பரவாயில்லையா?
وَآتَاكُمْ مِنْ كُلِّ مَا سَأَلْتُمُوهُ وَإِنْ تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنْسَانَ لَظَلُومٌ كَفَّارٌ (34)14
கேட்ட ஒவ்வொன்றும் உங்களுக்கு வழங்கப்பட்டது என்று இவ்வசனம் கூறுகிறது. கேட்டஒவ்வொன்றும் ஒன்றுவிடாமல் யாருக்காவது வழங்கப்பட்டுள்ளதா? அப்படி வழங்கப்பட்ட ஒருவரையாவது பார்க்க முடியுமா? அப்படியானால் இந்த இடத்தில் ஒவ்வொரு என்பதை சைனீயைப் போல் புரிந்து கொள்ளக் கூடாது என்பது தெரியவில்லையா?
وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالأَقْرَبُونَ وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ فَآتُوهُمْ نَصِيبَهُمْ إِنَّ اللّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيداً (33)4
மேற்கண்ட வசனத்தில் ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஏற்படுத்தியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் உலகில் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாரிசுகள் இருப்பார்கள் என்று தான் அர்த்தமா? சைனீ அப்படித்தான் புரிந்து கொள்வாரா? வாரிசு இல்லாத பலர் உள்ளனரே அப்படியானால் ஒவ்வொரு என்பது என்னவாவது?
وَكَانَ وَرَاءَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ غَصْبًا (79)
மேற்கண்ட வசனத்தில் ஒவ்வொரு கப்பலையும் அந்த மன்னன் எடுத்துக் கொள்வான் என்றால் அன்று உலகில் உள்ள எல்லாக் கப்பல்களிலும் அவனுடையதாக ஆகி இருந்ததா? உலகில்வேறு எங்கும் கப்பல் இல்லையா?
أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ (225)26
கவிஞர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் திரிகிறார்கள் என்று இவ்வசன்ம் கூறுகிறது. ஒரு பள்ளத்தாக்கு கூட கவிஞர்கள் திரியாதது இல்லை என்று பொருளா? எந்த பள்ளத்தாக்குக்கு போனாலும் அங்கே கவிஞர்களைக் காண முடியுமா? இதிலும் ஒவ்வொருஎன்று வந்துள்ளதே?
إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ (23)27
சுலமான் நபி காலத்து ரானிக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டது என்று இவ்வசனம் சொல்கிறதே? அப்படியானால் சுலைமான் நபிக்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் அதைவிடவும் அதிகமாகவும் அவளுக்கு கொடுக்கப்பட்டது என்று சைனீ சொல்லப்போகிறாரா? அதுதான் ஒவ்வொரு என்று வந்து விட்டதே
இப்படி ஏராளமான வசனங்களையும் ஏராளமான ஹதீஸ்களையும் நாம் எடுத்துக் காட்டிக் கொண்டே போகலாம்.
உதாரணமாக சைனீ சொன்ன ஒவ்வொன்றும் பொய்யாக உள்ளது என்று நம் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அவர் வாழ்க்கையில் உண்மையே பேசியதில்லை எனது தான் இந்தச் சொல்லுக்கு அர்த்தமா? அல்லது குறிப்பிட்ட் கட்டுரைகளில் என்று அர்த்தமா?
இந்த அடிப்படை இவருக்கு தெரியாதது தான் அனைத்து உளறல்களுக்கும் காரணம்.
காஃப் அத்தியாயம் பற்றி ஒவ்வொரு ஜும்மாவிலும் என்று சொல்லப்பட்டாலும் கற்றுக் கொடுப்பதற்காக என்ற வாசகமும் குறிப்பிட்ட காலம் வரை செய்தார்கள் என்பதும் ஒவ்வொரு என்பதன் அர்த்த்தை மாற்றிவிட்டது என்பது கூட இவருக்குப் புரியவில்லை
மேற்கண்ட வசனங்களில் உள்ள ஒவ்வொரு என்ற சொல்லின் அர்த்தம் எப்படி சுருங்கி விட்டதோ அது போல் காஃப் சூரா விஷயத்திலும் மேற்சொன்ன காரணங்களால் சுருங்கி விட்டது.
ஜும்மாவில் அமர வேன்டும் என்ற ஹதீஸில் ஒவ்வொரு என்று வரவில்லையே அப்படி இருந்தும் ஒவ்வொரு ஜும்மாவிலும் அமர்வது ஏன் என்பதும் மேற்கண்ட அதே அறியமையால் ஏற்பட்டதுதான்.
ஒவ்வொரு என்ற சொல் இடம் பெற்றாலும் ஒவ்வொரு என்ற அர்த்தம் தராத இடங்களும் உள்ளன.
ஒவ்வொரு என்று இடம் பெறாவிட்டாலும் ஒவ்வொரு என்ற அர்த்தம் தரக் கூடிய இடங்களும் உள்ளன.
இந்த அடிப்படை கூட தெரியாமல் ஆய்வு செய்யப் புகுந்து விட்டார்.
அல்லாஹ் அருளியதை நம்ப வேண்டும் என்று சொன்னால் அதில் ஒவ்வொரு என்று இல்லாவிட்டாலும் ஒவ்வொருஎன்று தான் அர்த்தம். தூதர்களை நம்ப வேண்டும் என்றால்ஓவ்வொரு என்று இல்லாவிட்டாலும் ஒவ்வொரு என்று தான் அர்த்தம்
எனவே ஜும்மா விஷயத்தில் நபியவர்கள் ஜும்மாவில் அமர்பவர்களாக இருந்தார்கள் என்ற வாசகத்துக்குள் ஒவ்வொரு என்ற கருத்து உள்ளது என்பதைக் கூட விளங்காவிட்டால் இவர் என்ன ஆய்வாளரோ?
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் இந்தக் காரியத்தை வழமையாக தொடர்ந்து செய்து வந்தார்கள் என்ற கருத்தை தரக்கூடிய வாசகம் இடம்பெற்றுள்ளது.
920حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَقْعُدُ ثُمَّ يَقُومُ كَمَا تَفْعَلُونَ الْآنَ رواه البخاري
இப்னு உம்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் தற்போது நீங்கள் செய்து வருவதைப் போன்று (முதலில்) நின்று உரையாற்றியும் பிறகு அமர்ந்தும் பிறகு (மீண்டும்) எழுந்தும் வந்தார்கள்
நூல் : புகாரி (920)
எனவே ஒவ்வொரு ஜும்ஆவிலும் என்ற வாசகம் இந்த ஹதீஸில் நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும் அதே கருத்து வேறு வாசகத்தின் மூலம் சொல்லப்பட்டுள்ளது.
சைனியின் மூன்றாவது வாதம்.
நாம் வைக்கும் வாதங்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் இவர் தேவையற்ற விளக்கங்களையே கூறிக் கொண்டிருக்கிறார். பெண்கள் ஜும்ஆவுக்கு வருவது கடமையா? அல்லது இல்லையா?
என்பதெல்லாம் இவ்விடத்தில் பேச வேண்டிய எந்த அவசியமும் இல்லை. உம்மு ஹிஷாம் வீட்டில் இருந்து கொண்டு மனனம் செய்தார் என்றோ அல்லது பள்ளிக்கு வந்து மனனம் செய்தார் என்ற வாதமெல்லாம் காப் ஓதுவது அவசியம் என்பதை மறுக்கும் வாதங்களாக அமையாது. மாறாக உம்மு ஹிஷாம் பற்றிய தகவலாகவே அமையும்.
உம்மு ஹிஷாம் குறிப்பிட்ட ஆண்டு காலமே நபியவர்களின் வீட்டுக்கு அருகில் குடியிருந்தார். எனவே குறிப்பிட்ட காலமே காப் அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்களும் ஓதியுள்ளார்கள் என்பதை நிறுவுவதற்கே அப்பாஸ் அலி படாத பாடுபடுகிறார். ஆனாலும் அவரால் அது முடியவில்லை.
உம்மு ஹிஷாம் நபியவர்களின் வீட்டிற்’கு அருகில் குடியிருந்த காலத்திற்கு வேண்டுமானால் காலவரைகள் வரலாம். ஆனால் காப் ஓதியதற்கு எந்த வரையரையும் வரவில்லை. வரையரை வராத ஒன்றிற்குத்தான் அப்பாஸ் அலி வரையரை செய்ய முயற்சிக்கிறார். என்பது இங்கு தெளிவாகின்றது.
மூன்றாவது வாதத்துக்கு நமது பதில்.
நபியின் அடுப்பும் எங்களுடைய அடுப்பும் ஒன்றாக இருந்தது என உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறிதை விளக்குவதற்காகவே பெண்கள் ஜும்ஆவில் கலந்துகொள்வது கடமை இல்லை. உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் வீட்டிலும் தொழுதிருக்கலாம் என்பதைக் கூறினோம்.
ஒரு விசயத்தை விளக்குவதற்காக சொன்ன விசயங்களை எல்லாம் நாம் அடிப்படை ஆதாரமாக வைத்ததாக இவர் நினைக்கிறார் என்றால் இவரைப் பற்றி என்ன சொல்வது?.
ஒருவர் தான் என்ன கேள்வி கேட்டோம் என்பதையே மறந்துவிட்டால் அவருக்கு எவ்வளவு அற்புதமாக பதில் கொடுத்தாலும் அது அவருக்கு பதிலாகத் தெரியாது. ஸைனி இந்த நிலையில் தான் இருக்கின்றார்.
இவர் முதலாவதாக வெளியிட்ட கட்டுரையை இவரே படித்துப் பார்க்கட்டும். அதில் இவர் பின்வரும் வாதத்தை வைத்திருந்தார்.
இங்குதான் அப்பாஸ் அலி தவறிழைகின்றார். நாங்களும் நபி(ஸல்) அவர்களும் இரண்டு ஆண்டு அல்லது ஓராண்டும் சில மாதங்களும் ஒரே அடுப்பையே பயன் படுத்திவந்தோம் என்று உம்மு ஹிஷாம் கூறியதால் குறிப்பிட்ட காலம் மாத்திரம் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவின் போது காப் அத்தியாயத்தை ஓதினார்கள் என்று இவர் கூறுவது தவறாகும். இந்த ஹதீஸை அறிவிக்கும் உம்மு ஹிஷாம் (ரழி) அவர்கள் ”நபி (ஸல்) அவர்கள் நடத்தியஅனைத்து ஜும்ஆக்களிலும் கலந்து கொள்ளவில்லை” என்ற இவரது கருத்துதவறானதாகும். இக்கருத்திற்கு எவ்வித ஆதாரமுமில்லை
இப்படி எழுதி இருந்தார்.
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் நடத்திய அனைத்து அனைத்து ஜும்ஆக்களிலும் கலந்து கொள்ளவில்லை என்ற நம்முடைய வாதம் தவறானது என்றும் இக்கருத்திற்கு எவ்வித ஆதாரமில்லை என்றும் இவர் கூறியுள்ளார் என்பதை மேலே சுட்டிக்காட்டியுள்ளோம்.
அப்படியானால் உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் நடத்திய அனைத்து ஜும்ஆக்களிலும் கலந்துகொண்டார் என்று இவர் வாதிடுகின்றார். இந்த வாதத்திற்குத் தான் சிறு குழந்தைக்கு விளக்குவது போல் விளக்கியிருந்தோம். ஆனாலும் இவரால் விளங்க முடியவில்லை.
மீண்டும் ஒரு முறை விளக்கம் தருகிறோம். இப்போதாவது இவர் விளங்கிக் கொள்வரா? என்று பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்கு அருகில் தங்கியதாலேயே நபியவர்களுடன் ஜும்ஆவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்று உம்மு ஹிஷாம் நேரடி வாக்குமூலம் தருகிறார்கள். நபியவர்களின் வீட்டுக்கு அருகில் தங்காவிட்டால் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்திருக்காது என்பது இதன் பொருள்.
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்கு அருகில் குறிப்பிட்ட காலமே தங்கியுள்ளார்கள் என்பதை ஹதீஸ் திட்டவட்டமாக அறிவிக்கின்றது. எனவே உம்மு ஹிஷாம் (ரலி) தான் தங்கியிருந்த குறிப்பிட்ட காலமே நபியவர்களுடன் ஜும்ஆவில் கலந்து கொண்டார்கள். இதற்குப் பிறகு கலந்து கொள்ளவில்லை என்பதை அறிவுள்ள யாவரும் புரிந்து கொள்வார்கள்.
உம்மு ஹிஷாம் (ரலி) நபி (ஸல்) அவர்கள் நடத்திய அனைத்து ஜும்ஆக்களிலும் கலந்து கொள்ளவில்லை. குறிப்பிட்ட ஜும்ஆக்களில் மாத்திரம் தான் கலந்து கொண்டார்கள் என்பதற்கு நம்மிடம் ஆதாரம் உள்ளது.
இவர் தன் நிலைபாட்டிற்கு எந்தச் செய்தியை ஆதாரம் காட்டுகின்றாரோ அந்தச் செய்தி தான் நமக்கு ஆதாரமாக உள்ளது.
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் நபியவர்கள் நடத்திய அனைத்து ஜும்ஆக்களிலும் கலந்து கொண்டார்கள் என்ற இவருடைய கூற்றுக்கு இந்தச் செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை என்பதுடன் அவர் கூறும் கருத்திற்கு எதிராகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் தனது வாதத்தை நிலை நாட்டுவதற்காக உம்மு ஹிஷாம் (ரலி) நபியவர்கள்நடத்திய அனைத்து ஜும்ஆக்களிலும் கலந்து கொண்டார்கள் என்ற வடிகட்டியை பொய்யைதுணிந்துசொல்கிறார் என்றால் இதற்கு அவர் ஆதாரம் தர வேண்டும். அப்படியொரு ஆதாரம் ஹதீஸ் கிதாபுகளில் எங்கும் இல்லை.
ஆதாரம் தராவிட்டால் அல்லாஹ்வின் தூதர் சம்மந்தப்பட்ட விஷயத்தில் திட்டமிட்டு பொய் சொன்னதற்காக இவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
உம்மு ஹிஷாம் நபியவர்களின் வீட்டிற்’கு அருகில் குடியிருந்த காலத்திற்குவேண்டுமானால் கால வரைகள் வரலாம். ஆனால் காப் ஓதியதற்கு எந்த வரையரையும்வரவில்லை. வரையரைவராத ஒன்றிற்குத்தான் அப்பாஸ் அலி வரையரை செய்யமுயற்சிக்கிறார். என்பது இங்கு தெளிவாகின்றது.
என்று மேலே சொல்லி இருக்கிறார்.
என்னே அருமையான ஆய்வு என்று பாருங்கள். காஃப் ஓதியதாக அறிவிப்பவர் உம்மு ஹிஷாம். ஒவ்வொரு ஜும்மாவிலும் என்று சொல்பவர் உம்மு ஹிஷாம். அவர் குடியிருந்த காலத்துக்கு வரையறை வந்து விட்டால் ஒவ்வொரு ஜும்மாவிலும் என்பதும் வரையரைக்கு உட்பபட்டது தான் என்ற சாதாரண அறிவு கூடவா இல்லாமல் போய் விட்டது? ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விஷயத்தைக் கூட எப்படி விளங்குகிறார் என்று பாருங்கள்.
இன்னாரை இந்த இடத்தில் புதைத்துள்ளனர் என்று சொல்லும் போது புதைத்ததற்கு வேண்டுமானால் ஆதாரம் இருக்கலாம். அவர் செத்ததற்கு ஆதாரமில்லையே என்று ஒருவன் கூறினால் அது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் இவரது ஆய்வு அமைந்துள்ளது.
ஒன்றுடன் ஒன்று பின்னிப்பினைந்த காரியங்களைக் கூட சம்மந்தமில்லாதவை என்று சொல்லும் அளவுக்கு இவரது சிந்தனை வரண்டுபோயுள்ளது.
சைனியின் நான்காவது வாதம்.
அடுப்பு ஒன்றாக இருந்ததினாலும் உம்மு ஹிஷாம் அதனால் காபை மனனம் செய்ததாலும் காப் ஓதுவது வாஜிபில்லை என ஆகிவிடுமா? உம்மு ஹிஷாம்(ரழி) எப்படி மனனம் செய்தார் என்பது முக்கியமல்ல. நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் காப் ஓதினார்கள் என்பதே இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.
காப் ஓதுவது வாஜிபா? இல்லையா? என்பதற்கு மறுப்புக் கூற வேண்டியவர் உம்மு ஹிஷாம்(ரழி) அவர்களின் சரித்திரத்தை விளக்கிக் கொண்டிருக்கிறார். அது எமது வாதத்தை மறுக்க ஒரு போதும் உதவப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நான்காவது வாதத்துக்கு நமது பதில்.
இதுவும் மேற்கண்ட வாதம் போன்றது தான்.
ஒரு ஹதீஸை எப்படி புரிய வேண்டும் என்பதை கூட இவர் அறியவில்லை. உம்மு ஹிஷாம் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் குறிப்பிட்ட காலமே ஜும்ஆவில் கலந்து கொண்டார்கள் என்ற கருத்து ஹதீஸின் முதல் பகுதியாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் காஃப் சூராவை ஓதுவார்கள் என்பது ஹதீஸின் இன்னொரு பகுதியாகும். இவர் ஹதீஸின் முதல் பகுதியோடு இரண்டாம் பகுதியைச் சேர்த்து விளங்காமல் இரண்டாவது பகுதியை மட்டும் தனியே விளங்குவதால் தான் பிரச்சனை.
ஏனெனில் இவருக்கு ஒவ்வொரு என்ற நோய் பிடித்துள்ளது. ஒவ்வொரு என்பது மட்டும் தான் இவரது கண்களுக்குத் தெரியும், வேறு ஒன்றும் தெரியாது.
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் காஃப் சூரா ஓதுவார்கள் என்று வந்துள்ளது. எனவே நாம் தற்போது ஒவ்வொரு ஜும்ஆவிலும் காஃப் சூரா ஓதுவது கட்டாயம் என்ற முடிவு ஹதீஸை அறைகுறையாக விளங்கி எடுத்த முடிவாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் காஃப் சூரா ஓதுவார்கள் என்ற தகவலைக் கூறியவர் யார்? அவர் நபி (ஸல்) அவர்களுடன் ஒவ்வொரு ஜும்ஆவிலும் கலந்து கொள்ளவில்லையே? என்று இவர் சிந்தித்து இருந்தால் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்.
உம்மு ஹிஷாம் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் அனைத்து ஜும்ஆக்களிலும் கலந்து கொள்ளவில்லை. குறிப்பிட்ட காலம் வரை மாத்திரமே கலந்து கொண்டார் என்பதை முன்பு நிரூபித்துள்ளோம்.
எனவே உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆ என்று கூறினால் அது அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்ட ஜும்ஆக்களைப் பற்றியே கூற முடியும். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை நடத்திய அனைத்து ஜும்ஆவைப் பற்றி கூறியிருக்க முடியாது.
ஹதீஸுடன் சரித்திரம் பின்னிப் பினைந்திருக்கும் போது சரித்திரத்தை தனியாகப் பிரித்தால் அர்த்தமே அனர்த்தமாகி விடும்.
இந்த இடத்தில் ஒரு உதாரணத்தைக் கூறினால் பொருத்தமாயிருக்கும். நான் என் நண்பனுடன் ஒரு மாதகாலம் தங்கினேன். அவன் உடலின் எடை குறைவதற்காக ஒவ்வொரு நாளும் மருந்து சாப்பிடுவான் என்று ஒருவர் கூறினால் இதை எப்படி புரிந்து கொள்வோம்.
இங்கே ஒவ்வொரு நாளும் என்று கூறிவிட்டதால் நண்பன் மரணிக்கும் வரை மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தான் என்று புரிய முடியுமா? நண்பன் ஒரு மாத காலம் மருந்து சாப்பிட்டான் என்பது உறுதியான தகவல். ஆனால் இதற்குப் பிறகும் அவன் மருந்து சாப்பிட்டான் என்று உறுதியாகக் கூற முடியாது.
உடை எடை குறைந்துவிட்டால் மருந்து சாப்பிட வேண்டிய அவசியமில்லாமல் போய்விடும். இதுவல்லாத வேறு காரணங்களுக்காகவும் மருந்து சாப்பிடுவதை நிறுத்தி இருக்கலாம். எனவே ஒவ்வொரு சாகும் வரை ஒரு நாள் கூட விடாமல் மருந்து சாப்பிட்டிருக்க முடியாது என்று புரிந்து கொள்வோம்.
எவ்வளவு நாள் தங்கினான் என்ற சரித்திரம் தேவையற்றது. ஒவொரு நாளும் என்று வந்துள்ளதால் சாகும் வரை ஒவொரு நாளும் தான். யாராவது பதிலளிப்பார்களா? ஆனால் சைனி பதிலளிப்பார் என்று தெரிகிறது.
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இது போன்றதாகும். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட காலம் மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக ஒவ்வொரு ஜும்ஆவிலும் காஃப் சூரா ஓதினார்கள் என்பது ஹதீஸில் கூறப்பட்டுள்ள உறுதியான தகவல்.
இதற்குப் பிறகும் மரணிக்கும் வரை காஃப் சூரா ஓதினார்கள் என்பதை நிறுவ இந்தச் செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை. இதை நிரூபிக்க வேண்டுமானால் இந்த ஹதீஸை விடுத்து வெளியில் வேறு ஏதாவது ஆதாரத்தையே காட்ட வேண்டும்.
இப்படியொரு ஆதாரத்தை இவர் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடினாலும் கிடைக்காது. ஏனென்றால் இவர்கள் தங்கள் கருத்திற்கு உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியைத் தவிர வேறு செய்தியை ஆதாரம் காட்ட முடியாது.
இதற்குப் பிறகும் உம்மு ஹிஷாம் (ரலி) தங்கியிருந்ததற்குத் தான் கால வரையறை கூறப்பட்டுள்ளது. நபியவர்கள் காஃப் சூரா ஓதியதற்கு இல்லை என்று இவர் கூறினால் அது ஆச்சரியப்பட வேண்டிய விசயமில்லை.
சைனியின் ஐந்தாவது வாதம்.
ஹதீஸ்களில் யார் எதை அறிவித்தது? என்பதைக் கூட இவர் சரிவரப் புரியவில்லை என்றே நாம் கருதுகிறோம். காரணம் இவர் கூறுவது போன்று அவ்ஸாயியோ அல்லது முஹம்மதிப்னு இஸ்ஹாக்கோ எதுவும் கூறவில்லை அப்படி அவர்கள் கூறியிருப்பார்கள் என்றால் அவர்கள் இடம் பெறும் இடங்களில் அவர்களின் அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கும். உதாரணமாக முஹம்மதிப்னு இஸ்ஹாக் என்பவரின் அறிவிப்பில் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் அல்லது சில மாதம் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது என்று அப்பாஸ் அலி வாதிடுகிறார். ஆனால் இமாம் பைஹகீ கொண்டு வந்திருக்கும் அறிவிப்பில் முஹம்மதிப்னு இஸ்ஹாக் இடம் பெறுகிறார். அங்கு காலம் சம்பந்தமான எந்த தகவலும் இல்லை
أخبرنا أبو عبد الله الحافظ ، وأبو سعيد بن أبي عمرو ، قالا : حدثنا أبو العباس بن يعقوب ، حدثنا أسيد بن عاصم ، حدثنا علي بن المديني ، حدثنا جرير بن عبد الحميد ، عن محمد بن إسحاق ، عن عبد الله بن أبي بكر بن حزم ، عن أبي عبد الله بن زرارة ، عن أم هشام بنت حارثة بن النعمان ، قالت : أخذت ق والقرآن المجيد من في رسول الله صلى الله عليه وسلم : ” كان يقرؤها كل جمعة على المنبر إذا خطب الناس(شعب الإيمان)
அதே போன்று முஸ்னத் அபீ யஃலா எனும் கிரந்தத்திலும் முஹம்மத் பின் இஸ்ஹாக் இடம் பெறுகிறார் அந்த அறிவிப்பிலும் அப்பாஸ் அலி கூறியது இடம் பெறவில்லை.
حدثنا زهير ، حدثنا جرير ، عن محمد بن إسحاق ، عن عبد الله بن أبي بكر ، عن يحيى بن عبد الله ، عن أم هشام بنت حارثة بن النعمان قالت : ” قرأت ق والقرآن المجيد من في رسول الله صلى الله عليه وسلم ، وكان يقرؤها كل جمعة إذا خطب الناس(مسند أبي يعلى)
முஹம்மத் பின் இஸ்ஹாக்குடைய அறிவிப்பில் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் அல்லது ஒரு மாதம் உள்ளது என அப்பாஸ் அலி வாதிடுகிறார். ஆனால் முஹம்மத் பின் இஸ்ஹாக் இடம் பெற்ற அறிவிப்பில் இவர் கூறியது இல்லை. எனவே இது இவரது கவனக்குறைவே ஆகும்.
மேலும் யஹ்யாவிடமிருந்து அவ்ஸாயி அறிவித்த அறிவிப்பில் சந்தேகத்திக்கிடமின்றி உறுதியாக அறிவிக்கப்படுகின்றது என அப்பாஸ் அலி வாதிடுகிறார்.
இதை நாம் மிக மிக அறியாமை ஆகும். காரணம் ஒரு ஹதீஸினுடைய அறிவிப்பாளர் வரிசையை இவ்வாறு அணுகக் கூடாது. யஹ்யாவிடமிருந்து இரு மாணவர்கள் கேட்கிறார்கள். அவர்களில் இவர் இப்படி சந்தேகமாக அறிவிக்கிறார் மற்றவர் உறுதியாக அறிவிக்கிறார் உறுதியான தகவலையே ஏற்க வேண்டும் என இவர் வாதிட்டிருந்தால் அதை நியாயம் எனலாம்.
ஹதீஸில் இடை நடுவில் இடம் பெற்ற இரு அறிவிப்பாளர்களை தேடி எடுத்து இவரின் அறிவிப்பில் இப்படி உள்ளது. இவரின் அறிவிப்பில் இன்னவாறு உள்ளது எனக் கூறுவது ஹதீஸ்கலை பற்றிய போதிய விளக்கமின்மையின் வெளிப்பாடே ஆகும்.
இவர் கூறும் வாதம் சரியானதென்றால் பைஹகீயிலும் முஸ்னத் அபீயஃலாவிலும் முஹம்மதிப்னு இஸ்ஹாக்குடைய அறிவிப்பு இடம் பெற்றிருக்க வேண்டுமே! ஆனால் இடம் பெறவில்லை. எனவே இது அப்பாஸ் அலியின் ஆய்விலுள்ள குறைபாடே தவிர அறிவிப்பிலுள்ள குறைபாடு அல்ல என்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்கிறோம்.
காலவரையரை சம்பந்தமாக உண்மையில் அறிவித்தவர்கள் உம்மு ஹிஷாமின் மாணவர்களே ஆவர் என்பதை அப்பாஸ் அலி கவனிக்கத்தவறி விட்டார்.
ஐந்தாவது வாதத்துக்கு நமது பதில்.
சொல்வதைப் புரிந்துகொள்ளும் தன்மை இவருக்கு அறவே இல்லை என்பதற்கு இந்த வாதம் ஆதாரமாக அமைந்துள்ளது.
முஹம்மது பின் இஸ்ஹாக்தான் சந்தேகமாக அறிவித்தார். அவ்ஸாயீ உறுதியாகஅறிவித்துள்ளார் என்று நான் கூறவேயில்லை. நான் கூறாத கருத்தை இவராக உருவாக்கி அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
ஒரு சட்டத்தை விளக்கும் போது அபூ ஹுரைரா அறிவிப்பு ஒன்றையும் இப்னு அப்பாஸ் அறிவிப்பு ஒன்றையும் எடுத்துக் காட்டுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
அதன் பின் அந்தக் கட்டுரை நெடுகிலும் அபூ ஹுரைரா அறிவிப்பு என்றும் இப்னு அப்பாஸ் அறிவிப்பு என்றும் சுட்டிக்காட்டுவோம். மேலே சொன்ன அபூ ஹுரைரா அறிவிப்பை இவர் சுட்டிக் காட்டுகிறார் என்று அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அறிவு குறைந்தவர்கள் அபூஹுரைரா வேறுவிதமாக அறிவித்தவைகளத் தேடி அபூஹுரைராவின் அனைத்து அற்விப்புக்களும் இப்படித்தான் என்று அப்பாஸ் அலி கூறினார் என்பார்கள்.
இது போல் தான் சைனியும் இருக்கிறார். இந்த அளவு மந்தபுத்தி உள்ளவராக இருப்பதால் தான் இவருக்கு உண்மை விளங்க முடியாமல் உள்ளது.
அறிவிப்புகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே முஹம்மது பின் இஸ்ஹாக்குடைய அறிவிப்பு என்றும் யஹ்யாவுடைய அறிவிப்பு என்றும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
கால வரையறை தொடர்பான செய்தியை உம்மு ஹிஷாம் (ரலி) அவர்களிடமிருந்து யஹ்யா அறிவிக்கின்றார். யஹ்யாவிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீபக்ர் அறிவிக்கின்றார். அப்துல்லாஹ் பின் அபீ பக்ரிடமிருந்து முஹம்மது பின் இஸ்ஹாக் அறிவிக்கின்றார்.
இந்த அறிவிப்பில் தான் இரண்டு வருடம் அல்லது ஒரு வருடம் சில மாதங்கள் என்று சந்தேகத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தேகத்துடன் வரும் செய்தி முஹம்மது பின் இஸ்ஹாக் இடம்பெறாத வேறு எந்த அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வரவில்லை. இவர் இடம்பெற்ற தொடரில் மாத்திரமே இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது.
எனவே இவருடைய பெயரைக் கூறினால் தான் இந்த அறிவிப்பை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதற்காக முஹம்மது பின் இஸ்ஹாக்குடைய அறிவிப்பு என்று கூறினோம்.
சந்தேகமின்றி ஒரு மாதகாலம் நபியவர்களுடன் தங்கினார்கள் என்று வரும் செய்தியை உம்மு ஹிஷாமிடமிருந்து முஹம்மது பின் அப்திர் ரஹ்மான் அறிவிக்கின்றார். அவரிடமிருந்து யஹ்யா பின் அபீ கஸீர் அறிவிக்கின்றார். யஹ்யாவிடமிருந்து அவ்ஸாயீ அறிவிக்கின்றார்.
இந்த அறிவிப்பில் சந்தேகமின்றி ஒரு மாதம் காலம் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவ்ஸாயீ அவர்களின் அறிவிப்பு என்று சொன்னால் இந்த அறிவிப்பை அடையாளம் காண முடியும் என்பதற்காக அவ்ஸாயீ அவர்களின் அறிவிப்பு என்று குறிப்பிட்டோம்.
கால வரையரை சம்பந்தமாக உண்மையில் அறிவித்தவர்கள் உம்மு ஹிஷாமின்மாணவர்களே ஆவர் என்பதை அப்பாஸ் அலி கவனிக்கத் தவறிவிட்டார்.
என்று சைனீ கூறுகிறார்.
ஸைனி இந்த விளக்கத்தை கூறி மேலும் தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்துகிறார். வாய்க்கு வந்ததை இஷ்டம் போல் கூறுபவர் என்பதை நிரூபித்துள்ளார்.
ஏற்கனவே இவரே ஒப்புக் கொண்ட விஷயத்தை இவரே மறுத்து தனக்குத் தானே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்களிடமிருந்து பல மாணவர்கள் இது தொடர்பான செய்தியை அறிவிக்கின்றார்கள். ஆனால் இவர்களில் யஹ்யா என்ற மாணவரைத் தவிர வேறு யாரும் தங்கியிருந்த காலத்தைப் பற்றி அறிவிக்கவில்லை என்ற கருத்தை இவர் தான் முன்பு கூறினார்.
நமது கட்டுரைக்கு இவர் முதலில் மறுப்பெழுதிய போது இந்தக் கருத்தை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதைக் கீழே காணவும்.
ஆக மொத்தத்தில் உம்மு ஹிஷாமின் ஐந்து மாணவர்களில் யஹ்யா பின் அப்தில்லாஹ்என்ற ஒரே ஒரு அறிவிப்பாளர் மாத்திரம் நபி (ஸல்) அவர்களும் உம்மு ஹிஷாமும்தங்கயிருந்த காலம் பற்றி அறிவிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். (நான்காவது அறிவிப்பை பார்க்கவும்) நபி(ஸல்) அவர்களும் உம்மு ஹிஷாம் அவர்களும் தங்கியிருந்த கால அளவு பற்றி யஹ்யா என்ற அறிவிப்பாளரை விடுத்து வேறு எந்த அறிவிப்பாளரும் அறிவிக்கவில்லை. வேறு அறிவிப்பாளர்கள் அறிவித்தால்தான் அங்கு முரண்பாடு ஏற்படும். ஒரே ஒருவர் கால அளவு பற்றிக் கூறும் போது அப்பாஸ் அலி “இந்தக் காலம் ஓரு ஆண்டா? அல்லது இரண்டு ஆண்டுகளா? அல்லது ஒரு மாதமா? என்பதில் அறிவிப்பாளர்கள் இடையே கருத்துவேறுபாடு நிலவுகின்றது” என்று கூறுவது எந்த வகையில் நியாயமாகும்? இப்படித்தான் ஹதீஸ்களை ஆய்வு செய்வதா? இவரால் முடிந்தால் (யஹ்யாவை தவிர்த்து) காலம் பற்றி வித்தியாசமாக அறிவித்த ஒரே ஒரு அறிவிப்பாளரை எமக்கு எடுத்துக்காட்டட்டும்!
சாவால் விடும் அளவுக்கு ஆணித்தரமாகக் கூறிய கருத்தையே ஸைனி மறந்துவிட்டு அதற்கு மாற்றமாக இரண்டாவது கட்டுரையில் பேசுகிறார். இது தான் ஸைனியிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம்.
முதல் கட்டுரையில் என்ன கூறினோம்? என்பதைக் கூட அவரால் நினைவில் வைத்திருக்க முடியவில்லை. இவரைப் போன்றவர் ஹதீஸை அறிவிக்கக்கூடியவராக இருந்தால் அதிகம் தவறு செய்பவர். நினைவாற்றல் இல்லாதவர். தடுமாறக்கூடியவர் என்ற காரணங்களால் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டு விடுவார். இந்நிலையில் இவர் ஆய்வு செய்யப்புறப்பட்டால் அந்த ஆய்வை எந்த இடத்தில் வைப்பது?
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்களின் மாணவர்களில் ஒருவரான முஹம்மது பின் அப்திர் ரஹ்மான் ஒரு மாதம் என்ற காலத்தை அறிவித்தவர் என்று இவர் கூறினாலும் மாட்டிக் கொள்வார்.
ஏனென்றால் இவருடைய அளவுகோலின் படி முஹம்மது பின் அப்திர்ரஹ்மான் இடம்பெற்ற எல்லா அறிவிப்புகளிலும் ஒரு மாதம் என்ற காலம் இருந்தால் தான் அதை முஹம்மது பின் அப்திர் ரஹ்மான் கூறினார் என்று எடுத்துக்கொள்ள முடியும்.
அவர் இடம்பெற்ற சில அறிவிப்புகளில் கூறப்படாமலும் சில அறிவிப்புகளில் கூறப்பட்டும் இருந்தால் இதை அவர் கூறியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது இவருடைய விசித்திரமான ஹதீஸ் கலை விதியாகும்.
முஹம்மது பின் அப்திர் ரஹ்மான் இடம்பெற்ற அறிவிப்பில் ஒரு மாதம் என்ற காலம் இடம்பெறாமலும் ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
السنن الصغرى – كتاب الجمعة
باب القراءة في الخطبة – حديث : 140123167
أخبرنا محمد بن المثنى ، قال : حدثنا هارون بن إسمعيل ، قال : حدثنا علي وهو ابن المبارك ، عن يحيى ، عن محمد بن عبد الرحمن ، عن ابنة حارثة بن النعمان ، قالت : ” حفظت ق والقرآن المجيد من في رسول الله صلى الله عليه وسلم وهو على المنبر يوم الجمعة ” *
எனவே இவருடைய நிலைபாட்டின் படி சிந்தித்தால் முஹம்மது பின் அப்திர்ரஹ்மான் காலவரையறையைப் பற்றி அறிவிக்கவில்லை என்பதே முடிவு. அப்படியானால் உம்மு ஹிஷாம் (ரலி) அவர்களின் மாணவர்கள் தான் காலம் தொடர்பாக வேறுபட்டு அறிவித்துள்ளார்கள் என்று கூறுவது இவருக்கு முரண்பாடாகத் தெரியவில்லையா?
சைனியின் ஆறாவது வாதம்.
ஒரு விடயத்தில் நாம் உதாரணம் கூறி அது தவறு என்றால் அதை விளக்குவது ஏற்கத்தக்கதுதான் ஆனால் இவர் விளக்கும் முறைக்கும் நாம் கூறும் உதாரணத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இவரது உதாரணத்திலுள்ள அறியாமைகளை தருகின்றோம்.
இவர் இவரது: உதாரணத்திலிருந்து வழங்கிய தவறான விளக்கம்
மகள் எப்போதுமே தாயுடன் இருப்பதால் ஒரு வருடம் மட்டும் தாயார் சமையல் செய்ததில் இருந்து சமையலைக் கற்றுக் கொண்டேன் என பொருள் கொள்ள முடியாது ஆனால் அந்த நண்பன் இப்படிக் கூறினால் ஒரு வருடம் விளையாடிக் கொண்டிருந்த காலத்தில் சமையல் செய்வதைப் பார்த்து கற்றுக் கொண்டேன் என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
நண்பன் ஒரு வருடத்தில் சமையலைக் கற்றுக் கொண்டான் என அர்த்தம் செய்வது சரியென்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் தாய் சமைத்தது ஒரு வருடம் என முடிவெடுக்க முடியுமா?
அல்லது நண்பன் சமையலை பழகியதன் பிற்பாடு தாய் சமைக்கவில்லை என முடிவெடுக்கத்தான் முடியுமா?
உதாரணங்கள் மாறுபட்டாலும் அதிலிருந்து முன்வைக்கப்படுகின்ற வாதம் மழுங்கடிக்கப்படுகின்றதா? என்பதுதான் இங்கு அப்பாஸ் அலி கவனிக்க வேண்டும். நானும் எனது நண்பனும் ஒரு வருடம் அல்லது ஒன்னரை வருடம் விளையாடினோம் என்ற உதாரணம் நபி(ஸல்) அவர்களது அடுப்பும் எங்களது அடுப்பும் ஒரு வருடம் அல்லது ஒன்னரை வருடம் ஒன்றாக இருந்தது என்று கூறுவதைப் போன்றது. எனது தாய் ஒவ்வொரு நாளும் சமையல் வேளைகளைக் கவனிப்பாள் என்ற உதாரணம் நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் காப் என்ற அத்தியாயத்தை ஓதுவார்கள் என்று கூறுவதைப் போன்றது. தாயுடைய சமையலிலிருந்துதான் எனது நண்பன் சமையல் கலையைக் கற்றுக் கொண்டான் எனக் கூறுவது நபி(ஸல்) அவர்கள் காபை ஓதியதினால்தான் நான் காபை மனனம் செய்து கொண்டேன் என்று கூறுவதைப் போன்றது ஆகும்.
இவர் கூறும் உதாரணத்தையும் உம்மு ஹிஷாம்(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நாம் ஹதீஸில் உள்ளது போன்று உதாரணம் வழங்கியுள்ளோம். இவர் வேறு விதமான உதாரணத்தை வழங்கி தனது கருத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறார். இவர் கூறிய படி வைத்துக் கொண்டாலும் தாய் சமைத்தது குறிப்பிட்ட காலம் என்று விளங்கவே இயலாது அவ்வாறு விளங்குவதற்குரிய எந்த முகாந்திரமும் அங்கு இல்லை.
ஆறாவது வாதத்துக்கு நமது பதில்.
நண்பன் ஒரு வருடத்தில் சமையலைக் கற்றுக்கொண்டான் என அர்த்தம் செய்வது சரி என்று வைத்துக்கொள்வோம் என்று இவர் கூறியுள்ளார்.
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் குறிப்பிட்ட ஜும்ஆக்களில் மாத்திரமே கலந்து கொண்டார்கள் என்பதை இவருக்கு புரியவைக்கவே அவர் கூறிய உதாரணத்திலிருந்தே கேள்வி கேட்டோம்.. ஒரு வழியாக இவருக்கு புரிந்துவிட்டது. அடுத்து இவர் கேட்கும் கேள்விக்கு வருவோம்.
நண்பன் ஒரு வருடத்தில் சமையலைக் கற்றுக் கொண்டான் என அர்த்தம் செய்வது சரியென்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் தாய் சமைத்தது ஒரு வருடம் என முடிவெடுக்க முடியுமா? அல்லது நண்பன் சமையலை பழகியதன் பிற்பாடு தாய் சமைக்கவில்லை என முடிவெடுக்கத்தான் முடியுமா?
குறித்த ஹதீஸிற்கு ஏற்றவாறு உதாரணம் கூறினால் தான் உண்மை விளங்கும். குறித்த ஹதீஸில் மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக ஓதினார்கள். நான் கற்றுக்கொண்டேன் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்குத் தகுந்தாற்போல் உதாரணம் இருக்க வேண்டும்.
சமயல் செய்வது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு பெண்களும் தினந்தோறும் செய்யும் செயலாகும். பிறர் கற்றுக்கொண்டாலும் கற்றுக்கொள்ளாவிட்டாலும் சமயல் செய்யாமல் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே குறித்த செய்திக்கு சமையல் உதாரணம் பொருந்தாது.
கற்றுக்கொடுப்பதற்கு என பிரத்யேகமாக செய்யும் செயலையே இதற்கு உதாரணமாக கூற வேண்டும்.
நான் ஒரு மாதம் என் நண்பனுடன் அவன் வீட்டில் விளையாடினேன். என் நண்பனின் தாய் எங்களுக்கு தினமும் அல்ஹம்து சூராவை ஓதிக்காட்டுவார்கள் என்று கூறினால் இதை எப்படி ஸைனி புரிந்துகொள்வார்.
இந்த சிறார்களுக்கு கற்றுத்தருவதற்காகத் தான் தாய் தினமும் அல்ஹம்து சூரா ஓதினாள். இவ்வாறு அவள் ஓதியது ஒரு மாதம் தான். இந்த ஒரு மாதத்தில் சிறார்கள் கற்றுக் கொண்டுவிட்டதால் இனி அவள் ஓதமாட்டாள் என்பது தான் இதன் அர்த்தம் என்று தானே புரிந்துகொள்வோம். அதன் பிறகும் வேறுசிலருக்கு கற்றுக் கொடுத்தால் அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
இதேப் போன்று தான் உம்மு ஹிஷாம் (ரலி) அறிவிக்கும் செய்தியும் உள்ளது.
சைனியின் ஏழாவது வாதம்.
யஹ்யப்னு அபீ கதீர் உம்மு ஹிஷாமை சந்திக்கவில்லை என்பதை இவர் இங்கு ஒப்புக் கொள்கிறார். அல்ஹம்துலில்லாஹ்! ஆனாலும் இதை ஆதாரபூர்வமானது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு ஆதாரமாக தப்ரானியில் இடம் பெறும் ஒரு தொடரை ஆதாரமாகக் காண்பிக்கிறார். அந்த ஆதாரம் ஆதாரபூர்வமானதா? அல்லது பலவீனமானதா? என்பதை வைத்துதான் அப்பாஸ் அலியின் வாதத்தின் தரத்தினை நாம் புரியலாம்.
தொடர்பறுந்ததாக நாம் விமர்சிக்கும் செய்தி ஆதாரபூர்வமானது என்பதை வலுப்படுத்துவதற்கு இவர் எடுத்துக்காட்டிய ஹதீஸின் தொடரை ஏற்க இயலாது. காரணம் அதில் இடம் பெறும் ஹஜ்ஜாஜ் என்ற அறிவிப்பாளரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
இமாம் அபூதாவுத்: இவரது ஹதீஸ்களை அறிஞர்கள் விட்டு விட்டனர் (அல்லுஅபாஉல் கபீர்3:167)
இமாம் அலியிப்னு மத்யனீ இவரது ஹதீஸ் செல்லுபடியற்றது ஆகும்(அல்லுஅபாஉல் கபீர் 3:167)
இமாம் அபூஹாதிம்: இவர் ஹதீஸில் மறுக்கத்தக்கவர் ஆவார். இவரது ஹதீஸை மக்கள் அறிவிக்காமல் விட்டு விட்டனர் )அல்ஜரஹு வத்தஃதீல்3:167(
இமாம் நஸாயீ இவர் நம்பகமற்றவர் ஆவார்(தஹ்தீபுல் கமால்5:464)
எமது கடந்த ஆய்விலும் இந்தச் செய்தியை நாமும் குறிப்பிட்டிருந்தோம். இதன் அறிவிப்பாளர் தொடர் குறையுள்ளது என்பதை ஏற்கனவே காணத்தவறி விட்டோம்.. சகோதரர் அப்பாஸ் அலியும் இதை அறியவில்லை. எமக்கு நிகழ்ந்த அதே தவறு அப்பாஸ் அலிக்கும் நிகழ்ந்துள்ளது. நாம் அதை பலவீனம் என்பதால் எமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் அப்பாஸ் அலி அதை பலவீனம் என ஏற்றுக் கொண்டால் தப்ரானியில் இடம் பெற்ற “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து காஃப் அத்தியாயத்தை மனனம் செய்துகொண்டேன். அவர்கள் ஜும்ஆவில் மிம்பரின் மீது நின்றுகொண்டு அதை ஓதுவார்கள்” என்ற ஹதீஸ் தொடர்பறுந்த செய்தியல்ல என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். அல்லது மேற்குறித்த அறிஞர்களின் விமர்சனங்களுக்கு விளக்கம் கூற வேண்டும். இதுதான் எமது பதிலாகும்.
ஆமாம் அந்த தொடரை சரிகண்டு குறிப்பிட்டது எமது தவறு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இமாம் நஸாயீயின் விமர்சனத்தை நாம் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை. அதனால் அதை சரி கண்டோம்.ஒரு செய்தியின் அறிவிப்பாளர் தொடரை நாம் வலுப்படுத்துவதாயின் நாம் வலுப்படுத்துவதற்கு எடுத்து வைக்கும் அறிவிப்பாளர் தொடர் பலமானதாக இருக்க வேண்டும். உதாரணமாக பிரதான வீதியில் விபத்து நடந்ததாக மனனத்தன்மை குறைந்த ஒருவர் எமக்கு ஒரு தகவலை கூறுகிறார் என வைத்துக் கொள்வோம். இந்த நேரத்தில் இவரது கூற்றை நாம் ஏற்பதா? அல்லது மறுப்பதா? என்ற சந்தேகத்தில் இருப்போம். இச்சந்தர்ப்பத்தில் நம்பகமற்ற ஒருவர் எம்மிடம் வந்து பிரதான வீதியில் விபத்து நடந்தது உண்மைதான் எனக் கூறினாலும் அதை ஏற்கவுமாட்டோம். ஏற்கனவே கூறியவரின் தகவலை வலுப்படுத்தும் சான்றாகவும் கொள்ள மாட்டோம். மாறாக ஏற்கனவே தகவல் கூறியவரை ஏற்றாலும் இறுதியாக தகவல் தந்தவரை ஏற்க இயலாது என்றே நாம் முடிவுக்கு வருவோம் அப்படித்தான் புத்தியுள்ள எவரும் முடிவெடுப்பர். சகோதரர் அப்பாஸ் ;அலியின் மறுப்பிலும் இதே தவறுதான் நிகழ்ந்துள்ளது. யஹ்யா அப்துர்ரஹ்மானை சந்தித்துள்ளார். அப்துர்ரஹ்மான உம்மு ஹிஷாமை சந்தித்துள்ளார் என்ற அடிப்படையில் யஹ்யா உம்மு ஹிஷாம் வாயிலாக என்று இடம் பெறும் தகவலையும் ஏற்க வேண்டும் என வாதிடுகிறார். ஆனால் அதில் இடம் பெறும் ஹஜ்ஜாஜைப் பற்றி அறிஞர்கள் விமர்சித்ததை கவனிக்கத்தவறி விட்டார். இதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..
ஏழாவது வாதத்துக்கான பதில்.
தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்துவிட்டு வெட்கமில்லாமல் நிரூபிக்க வேண்டும் என்று வேறு கூறிக்கொள்கிறார்.
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு மாத காலமே தங்கினார்கள். மேலும் நபியவர்கள் ஜும்ஆவில் காஃப் சூரா அல்லாத மற்ற அத்தியாயங்களையும் ஓதியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக நாம் எடுத்துக்காட்டிய செய்தியை இவர் தொடர்பு அறுந்தது என்று ஆரம்பத்தில் குறை கூறினார்.
அது தொடர்பு அறுந்தது அல்ல என்பதற்கு நாம் அவர் சரிகண்டு குறிப்பிட்டிருந்த அறிவிப்பையே சுட்டிக்காட்டினோம். அதில் ஹஜ்ஜாஜ் என்ற பலவீனமானவர் இடம்பெறுகிறார். நான் இதை அறியாமல் தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன் என்று கூறி நாம் சுட்டிக்காட்டிய தொடர் பலவீனமானது என்று கூறுகிறார்.
அவர் சுட்டிக்காட்டிய அந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். உம்மு ஹிஷாம் (ரலி) அவர்களுக்கும் யஹ்யாவுக்கும் இடையில் முஹம்மது பின் அப்திர் ரஹ்மான் விடுபட்டுள்ளார் என்பதை நிரூபிக்க இதுவல்லாத வேறு ஆதாரப்பூர்வமான தொடரும் உள்ளது.
ஸைனி முறையாக ஆய்வு செய்திருந்தால் இந்த ஆதாரப்பூர்வமான தொடரைப் பார்த்திருப்பார். அவருடைய ஆய்வு முழுக்க முழுக்க அறைகுறை என்பதால் இந்தத் தொடரை அவர் கவனிக்கவில்லை.
السنن الصغرى – كتاب الجمعة
باب القراءة في الخطبة – حديث : 140123167
أخبرنا محمد بن المثنى ، قال : حدثنا هارون بن إسمعيل ، قال : حدثنا علي وهو ابن المبارك ، عن يحيى ، عن محمد بن عبد الرحمن ، عن ابنة حارثة بن النعمان ، قالت : ” حفظت ق والقرآن المجيد من في رسول الله صلى الله عليه وسلم وهو على المنبر يوم الجمعة ” *
இந்த செய்தியில் உம்மு ஹிஷாம் (ரலி) அவர்களுக்கும் யஹ்யாவுக்கும் இடையில் முஹம்மது பின் அப்திர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார். இந்தத் தொடர் எந்தக் குறையும் கூற முடியாத அளவுக்கு ஆதாரப்பூர்வமானதாகும்.
எனவே உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு மாத காலமே தங்கினார்கள். மேலும் நபியவர்கள் ஜும்ஆவில் காஃப் சூரா அல்லாத மற்ற அத்தியாயங்களையும் ஓதியுள்ளார்கள் என்று நாம் கூறிய கருத்து ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
ஏதோ சில காரணங்களால் ஒரு அறிவிப்பாளர் தொடரில் உள்ள பலவீனம் ஆய்வாளருக்கு தெரியாமல் போவது சகஜம் தான். ஆனால் என்னென்ன அறிவிப்புகள் இருக்கின்றது என்பதையே ஒருவர் தொடர்ச்சியாக அறியாமல் இருந்தால் இவர் ஆய்வாளராகவே இருக்க முடியாது. ஸைனியின் ஆய்வு இது போன்று தான் அமைந்துள்ளது.
சைனியின் எட்டாவது வாதம்.
அப்பாஸ் அலியின் பத்தாவது வாதம்: நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் காஃப் சூராவை மட்டும் ஓதவில்லை. பல சூராக்களை ஓதியுள்ளார்கள். அதில் காஃப் சூராவும் ஒன்று என்ற கருத்தை பின்வரும் அறிவிப்பும் கூறுகின்றது.
وقال لي المسندي : حدثنا سفيان ، عن محمد بن عبد الرحمن بن زرارة ، وكانوا يقولون : هذا عامل عمر بن عبد العزيز ، فجلست إليه وأنا ابن خمس عشرة سنة ، قال : سمعت امرأة ، تقول : ” حفظت ق من في النبي صلى الله عليه وسلم مما يقرأ “( التاريخ الكبير- حديث : 12618918 )
நபி (ஸல்) அவர்கள் ஓதியவைகளில் அவர்களின் வாயிலிருந்து கஃப் அத்தியாயத்தை நான் மனனம் செய்தேன். நூல் : தாரீகுல் கபீர்
இந்த செய்தி எந்த குறையும் இல்லாத ஆதாரப்பூர்வமானதாகும்.
மறுப்பு:
மேற்குறித்த இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது என்பதை நாம் மறுக்கவில்லை. இவர் ஆரம்பத்தில் இந்த ஹதீஸை கூறியிருந்தால் நாம் இது தொடர்பறுந்த செய்தி என விமர்சித்திருக்க மாட்டோம். தொடர்பறுந்த செய்தியை இவர் காட்டியதால்தான் அதை தொடர்பறுந்த செய்தி என கூறினோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எட்டாவது வாதத்துக்கு பதில்.
நாம் ஆதாரமாகக் காட்டிய செய்தி தொடர்பு அறுந்தது இல்லை என்பதை நிரூபித்துவிட்டோம். அதே கருத்தைத் தரும் இன்னொரு ஆதாரத்தையும் கூறியிருந்தோம்.
அந்த இன்னொரு ஆதாரத்திற்கு இவர்கள் சரணடைவதைத் தவிர இவர்களிடம் வேறு பதில் இல்லை. ஒரு செய்தி தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புகளையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் முன்பே கூறியிருந்தேன்.
நாங்கள் அப்படித் தான் ஆய்வு செய்துள்ளோம் என்று ஸைனி கூறினார். ஆனால் இவர் அப்படி ஆய்வு செய்யவில்லை என்பதையே தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்.
நாம் முன்பே இதைக் கூறியிருந்தால் தொடர்பு அறுந்த செய்தி என இவர்கள் விமர்சனம் செய்திருக்க மாட்டார்களாம். ஆக நாம் கூறினால் தான் இவர்களுக்கு இப்படியொரு செய்தி இருக்கின்றது என்பது தெரியவருகின்றது என்றால் இவர்களின் ஆய்வின் லட்சணத்தை விளங்க முடிகின்றது.
மொத்தத்தில் நபி (ஸல்) அவர்கள் காஃப் சூரா அல்லாத வேறு சூராவையும் ஓதுவார்கள் என்ற கருத்தில் வரும் செய்தி பலவீனமானது என்று கூறிவிட்டு நாம் சுட்டிக்காட்டிய பிறகு வேறு வழியின்றி அந்தர் பல்டி அடித்துக்கொண்டார்.
சைனியின் ஒன்பதாவது வாதம்.
காஃப் அல்லாத அத்தியாயங்களையும் நபி(ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள் என்று கூறி ஹதீஸை எடுத்து வைத்த இவர் அந்த ஹதீஸ் தரும் கருத்து என்ன? என்பதைக் கூட சிந்திக்கவில்லை.
இவர் இங்கே எடுத்துக்காட்டிய ஹதீஸை வைத்தும் காப் ஓதுவது கட்டாயமில்லை என விளங்க இயலாது. எம்மை பொறுத்த வரை இந்த ஹதீஸை இரண்டு வகைகளில் புரியலாம்.
முதலாவது: நபி(ஸல்) அவர்கள் தனது உரையின் போது குர்ஆன் வசனங்களையும் தேவைக்கேற்ப ஓதியுள்ளார்கள். இதை அப்பாஸ் அலி கூட ஏற்றுள்ளார். இப்போது நபி(ஸல்) அவர்கள் ஓதியவற்றிலிருந்து நான் மனனம் செய்து கொண்டேன் என்றால் அதனை விபரமாக நாம் இப்படிக் கூறலாம். அதாவது ஜும்ஆவின் போது “நபி(ஸல்) அவர்கள் ஓதிய குர்ஆன் வசனங்களிலிருந்து காப் என்ற அத்தியாயத்தை மாத்திரம் நான் மனனம் செய்து கொண்டேன்.
இப்படி இந்த ஹதீஸை எவ்வித முரண்பாடின்றி புரியலாம்.
உரையின் போது நபி(ஸல்) அவர்கள் அல்குர்ஆன் வசனங்களை ஓதியிருப்பதை நாம் மறுக்கவில்லை நாம் மறுத்தால்தான் அப்பாஸ் அலி இந்த வாதத்தை எடுத்து வைக்க வேண்டும். எனவே அவரது வாதம் தவறானது என்பது இங்கே நிரூபணமாகின்றது.
ஒன்பதாவது வாதத்துக்குப் பதில்.
நபி (ஸல்) அவர்கள் காஃப் சூரா அல்லாத சூராக்களையும் ஓதியுள்ளார்கள் என்று நாம் எடுத்து வைத்த ஹதீஸை பலவீனப்படுத்துவதற்குரிய அத்தனை முயற்சிகளில் இறங்கிவிட்டு பலவீனப்படுத்த முடியாமல் தோல்வியைத் தழுவியுள்ளார்.
தற்போது வேறு வழியின்றி அதனுடைய கருத்தைக் குழப்பும் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மக்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக எந்த சூராவை வேண்டுமானாலும் ஓதலாம் என்ற கருத்தையே இது தொடர்பாக வரும் ஹதீஸ்களை ஒன்றினைத்து சிந்திக்கும் போது பெற முடியும்.
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல் உண்மை தெரிந்து பிறகும் தன் மனதில் தோன்றும் சொந்த யூகங்களை கூறி ஹதீஸில் சொல்லப்பட்ட விளக்கத்தை மறுப்பது ஆய்வாளருக்கு தகுதியான செயல் இல்லை. ஸைனீ இந்த செயலைச் செய்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் ஓதியவை என்பது அவர்கள் ஜும்ஆவை துவக்கும் போது தேவைகேற்ப ஓதும் வசனங்கள் என்று இவர் தன்னுடைய சுயக்கருத்தை ஹதீஸில் புகுத்த நினைக்கின்றார். ஆனால் இந்த அவருடைய சுயக்கருத்திற்கு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. இது தொடர்பாக வரும் ஏராளமான அறிவிப்புகளில் ஒரு அறிவிப்பைக் கூட காட்டவில்லை.
இவர் கூறும் விளக்கம் சரியாக இருந்தால் தானே அதற்குரிய ஆதாரத்தைக் காட்ட முடியும். இவராக உருவாக்கிய சுய சிந்தனைக்கு ஹதீஸ்களில் எப்படி ஆதாரம் தர முடியும்?
நபி (ஸல்) அவர்கள் ஓதியவற்றிலிருந்து காஃப் சூராவை கற்றுக்கொண்டேன் என்ற வாசகம் காஃப் சூராவை நபி (ஸல்) அவர்கள் எந்த அடிப்படையில் ஓதினார்களோ அதே அடிப்படையில் தான் மற்ற சூராக்களையும் ஓதியுள்ளார்கள் என தெளிவாக அறிவிக்கின்றது.
காஃப் சூராவை ஓதுவது கட்டாயம் என்று கூறும் இவர் அப்படியானால் இதே அடிப்படையில் நபியவர்கள் மற்ற சூராக்களை ஓதியுள்ளார்களே. அந்த சூராக்கள் எவை? அவற்றையும் கட்டாயம் ஓத வேண்டுமே? இந்த கேள்விகளுக்கு என்ன பதில்?
நபி (ஸல்) அவர்கள் ஓதியவை என்பது நபி (ஸல்) அவர்கள் தேவைக்கேற்ப சில சமயங்களில் குர்ஆன் வசனங்களை ஓதியுள்ளார்கள். அவற்றைக் குறிக்கும் என்று ஸைனி வாதிடுகின்றார்.
தேவைக்கேற்ப ஓதுபவை என்றால் அவை கட்டாயமில்லை என்றாகி விடுகின்றது. இந்த அடிப்படையில் தான் காஃப் சூராவும் ஓதப்பட்டது என்பதால் நபி (ஸல்) அவர்கள் காஃப் சூரா ஓதியதும் தேவையின் நிமித்தமாகத் தான். எனவே காஃப் சூரா ஓதுவது அவசியமில்லை என்ற கருத்தே ஸைனியின் இந்த சுய விளக்கத்தின் மூலம் உறுதியாகின்றது.
நபி (ஸல்) அவர்கள் காஃப் சூராவை ஓதியது போன்று குர்ஆனில் மற்றவைகளையும் ஓதியிருக்கும் போது காஃப் சூரா ஓதுவது மட்டுமே கட்டாயம். மற்றவற்றை ஓதுவது கட்டாயமில்லை என்று கூறுவது மனோ இச்சையைப் பின்பற்றும் தவறான செயலாகும்.
எனவே நாம் கூறுவது போல் காஃப் சூரா ஓதுவது கட்டாயமில்லை என்று கூறுவதைத் தவிர இவருக்கு வேறு வழியில்லை.
சைனியின் பத்தாவது வாதம்.
இரண்டாவது: குறித்த செய்தியில் மிம்பர் என்றோ அல்லது ஜும்ஆ தொழுகை என்றோ இடம் பெறவில்லை. ஜும்ஆ தொழுகையிலும் நபி(ஸல்) அவர்கள் குர்ஆன் வசனங்களை ஓதியுள்ளார்கள் அதனையும் சேர்த்து நபி(ஸல்) அவர்கள் ஓதியதிலிருந்து நான் காபை மனனம் செய்து கொண்டேன் என உம்மு ஹிஷாம் கூறியிருக்க முடியும். எனவே இரண்டு விதங்களிலும் விளங்க இது வாய்ப்புள்ளது.
பத்தாவது வாதத்துக்கு நமது பதில்.
அடுத்து இவர் இரண்டாவது விளக்கம் என்ற பெயரில் முன்பு கூறியதை விட படுமோசமான விளக்கத்தை கூறி நான் ஹதீஸில் நேரடியாக சொல்லப்பட்டதையும் மறுப்பவன் என்று வெளிப்படுத்தியுள்ளார்.
المعجم الكبير للطبراني – باب الفاء
باب الياء - أم هشام بنت حارثة بن النعمان
حديث : 2122623167
حدثنا إبراهيم بن دحيم الدمشقي ، ثنا أبي ، ثنا الوليد بن مسلم ، وعمر بن عبد الواحد ، عن الأوزاعي ، عن يحيى ، عن بنت حارثة بن النعمان ، قالت : لقد مكثنا وآل رسول الله صلى الله عليه وسلم شهرا ، وما لنا ولهم إلا تنور واحد نخبز فيه ، ” فحفظت من رسول الله صلى الله عليه وسلم ق ، مما يقرأ بها على المنبر يوم الجمعة ” *
நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரும் ஒரு மாதகாலம் (சேர்ந்து) தங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் ரொட்டி சுடுவதற்கு ஒரே அடுப்பே இருந்தது. எனவே நான் ஜும்ஆ நாளன்று மிம்பரின் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதியவற்றில் காஃப் அத்தியாயத்தை அவர்களிடமிருந்து மனனம் செய்துகொண்டேன்.
நூல் : தப்ரானீ (21226)
இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்பதை தெளிவாக நிரூபித்து விட்டோம். இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் காஃப் சூரா அல்லாத மற்ற சூராக்களையும் ஓதியுள்ளார்கள் என்று கூறப்படுவதுடன் இதை நபியவர்கள் ஜும்ஆவில் மிம்பரில் நின்று கொண்டு ஓதியுள்ளார்கள் என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
நபிமொழியில் இவ்வளவு நேரடியாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்ட பிறகும் ஹதீஸில் மிம்பர் என்றோ ஜும்ஆ தொழுகை என்றோ கூறப்படவில்லை. இது தொழுகையில் ஓதியதைக் குறிக்கின்றது என்று கூறுகிறார் என்றால் இவர் என்ன கொள்கையில் இருக்கிறார் என்பதே நமக்கு சந்தேகமாக உள்ளது.
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்களிடமிருந்து காஃப் சூரா தொடர்பாக வரும் அறிவிப்புகள் அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் மிம்பரில் நின்றுகொண்டு ஓதியவை என்பதை சாதாரண ஆய்வுத் திறன் கொண்டவர்கள் கூட பளிச்சென்று விளங்கிக் கொள்வார்கள். ஆனால் ஸைனியால் இதை விளங்க முடியவில்லை. இதற்கு அவருடைய சிந்தனையில் உள்ள கோளாறு தான் காரணமே தவிர ஹதீஸில் எந்தக் கோளாறும் இல்லை. ஹதீஸ் தெளிவாக உள்ளது.
ஹதீஸில் உள்ளதை மறுப்பதற்காக மனதில் தோன்றியதை எல்லாம் உளறிக்கொட்டும் நிலைக்குச் சென்றுள்ளார்.
சைனியின் பதினொன்றாவது வாதம்.
நாம் மேற்கூறிய இரு விதங்களில் எப்படி விளங்கினாலும் காப் ஓதுவது அவசியமற்றது என்பதை நிறுவுவதற்கு இந்த ஹதீஸ் ஒரு போதும் உதவாது. மாறாக நபி(ஸல்) அவர்கள் காப் அத்தியாயத்தை ஓதியுள்ளார்கள் என்ற தகவலும் உம்மு ஹிஷாம் என்ற பெண்மனியால் மனனம் செய்கின்ற அளவிற்கு அதை தொடர்ந்து ஓதியுள்ளார்கள் என்பதும்தான் விளங்குகின்றது.
எனவே அப்பாஸ் அலியின் குறித்த வாதம் தவறானது என்பது இங்கே மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
பதினொன்றாவது வாதத்துக்கு நமது பதில்.
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் மனனம் செய்கின்ற அளவிற்கு நபியவர்கள் இந்த அத்தியாயத்தை தொடர்ந்து ஓதியுள்ளார்கள். எனவே காஃப் சூராவை நாமும் தொடர்ந்து கட்டாயமாக ஓத வேண்டும் என்று இவர் வாதிடுகின்றார். இதுவும் தவறான வாதமாகும்.
இந்த வாதத்தில் இவர் உண்மையாளராக இருந்தால் சுப்ஹ் தொழுகையிலும் இவர் கட்டாயம் காஃப் சூராவை ஓத வேண்டும். ஏனென்றால் உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சுப்ஹ் தொழுதுள்ளார்கள். அத்தொழுகையில் நபியவர்கள் காஃப் சூராவை வழமையாக ஓதினார்கள். அதிலிருந்து தான் மனப்பாடம் செய்து கொண்டதாக அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
940أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي الرِّجَالِ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ أُمِّ هِشَامٍ بِنْتِ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ قَالَتْ مَا أَخَذْتُ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ إِلَّا مِنْ وَرَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي بِهَا فِي الصُّبْحِ رواه النسائي
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காஃப் வல் குர்ஆனில் மஜீத் என்று தொடங்கும் அத்தியாயத்தை ஓதி சுப்ஹ் தொழவைக்கக் கூடியவராக இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் (நின்று நான் தொழுததின் மூலமாகவே) தவிர நான் அதை கற்றுக் கொள்ளவில்லை.
நூல் : நஸாயீ (940)
உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் மனனம் செய்யும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் தொடர்ச்சியாக இந்த அத்தியாயத்தை ஓதியுள்ளார்கள் என்பதால் சுப்ஹ் தொழுகையில் கட்டாயம் ஓத வேண்டும் என்று புரிந்துகொள்ள மாட்டோம். இது போன்று தான் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் காஃப் சூரா ஓதியதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
சைனியின் பன்னிரண்டாவது வாதம்.
அப்பாஸ் அலியின் இந்த விளக்கத்தை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். சுட்டிக்காட்டியதற்கு சிறந்த கூலியை அல்லாஹ் நல்குவானாக! நபி(ஸல்) அவர்கள் காப் என்ற அத்தியாத்தை கற்றுக் கொடுத்தார்கள் என்ற அறிவிப்பு ஆதாரபூர்வமானதுதான் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
பன்னிரண்டாவது வாதத்துக்கு பதில்.
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காகத் தான் காஃப் சூராவை குறிப்பிட்ட காலம் ஓதினார்கள் என்பதற்கு நாம் ஒரு ஹதீஸை ஆதாரமாக காட்டினோம்.
ஆரம்பத்தில் இது பலவீனமானது என்று ஸைனீ மறுத்தார். அவருடைய அறியாமையை நாம் தெளிவுபடுத்திய பிறகு தற்போது நமது விளக்கத்தை ஏற்பதாகவும் இது ஆதாரப்பூர்வமான செய்தி என்பதை ஒத்துக்கொள்வதாகவும் கூறுகிறார்.
முஹம்மது பின் இஸ்ஹாக் நேரடியாகக் கேட்டதை வேறு ஏதாவது அறிவிப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளாரா என்பதை கூட இவர் ஆராயவில்லை. இவ்வாறு பல விசயங்களை ஆய்வு செய்யாமல் இருந்துவிட்டு நான் முழுமையாக ஆய்வு செய்து விட்டேன் என்று இவர் கூறுவது கடைந்தெடுத்த பொய்யாகும்.
எனவே ஜும்ஆவில் காஃப் சூராவை ஓதுவது தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புக்களையும் அலசி ஆராய்ந்துவிட்டு இவர் இந்த முடிவை எடுக்கவில்லை. முடிவை எடுத்துவிட்டுத் தான் ஆராயப் புறப்பட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.
சைனியின் பதிமூன்றாவது வாதம்.
ஆயினும் காப் என்ற அத்தியாத்தை கற்றுக் கொடுப்பதற்கு ஓதினார்கள் என்பதை வைத்தும் காப் ஓதுவது அவசியமற்றது என்பதை நிரூபிக்க இயலாது. நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களுக்கு தொழுகையில் ஓதப்படும் அத்தஹிய்யாத்து என்பதை கற்றுத்தந்தார்கள் என புஹாரியில் 6265 வது இலக்கத்தில் ஒரு ஹதீஸ் உள்ளது.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊதிற்கு நபி(ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தை கற்றுக் கொடுப்பதற்காகவே சொல்லிக் கொடுத்தார்கள். அது கடமை என்பதற்கு சொல்லிக் கொடுக்கவில்லை என யாராவது விளங்குவார்களா? அவ்வாறு விளங்கினால் அது அறியாமை என்றே நாம் கூறுவோம்.
காப் ஓதுவது கடமை என்ற காரணத்திற்காகக் கூட நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு இந்த அத்தியாயத்தை ஓதியிருக்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்துள்ளார்கள்.. எனவே இதை வைத்து காப் ஓதியது கற்றுக் கொடுப்பதற்காக மாத்திரமே என்று விளங்கி கட்டாயமான ஒரு நபிவழியை கட்டாயமில்லை என வாதிட முடியாது அது நியாயமான வாதமும் இல்லை.
ஒரு அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் பல முறை ஓதுகின்ற போது அதை உம்மு ஹிஷாம் அவர்கள் கற்றிருப்பார்கள் என்பதை ஹதீஸ் இல்லாவிட்டாலும் நாம் புரிந்து விடலாம். உம்மு ஹிஷாம் மட்டுமல்ல அங்கிருந்த ஏனையவர்களும் கற்றிருப்பார்கள். அதை நாம் மறுக்க இயலாது. எமது கேள்வி என்னவெனில் கற்றுக் கொடுப்பதற்கு மாத்திரமே நபி(ஸல்) அவர்கள் அதை ஓதினார்கள் மக்கள் கற்றுக் கொண்டவுடன் ஓதுவதை விட்டு விட்டார்கள் என தெளிவாக இடம் பெற்றிருந்தால் இவரது வாதம் சரியாகி விடும். ஆனால் அவ்வாறு இடம் பெறவில்லை.
எனவே அப்பாஸ் அலி எடுத்து வைத்த ஹதீஸ் சரியானது என்றாலும் அதிலிருந்து அவர் முன்வைத்த வாதம் பொருத்தமற்ற வாதம் என்பது நிரூபணமாகின்றது.
பதிமூன்றாவது வாதத்துக்கு பதில்.
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக காஃப் சூராவை ஓதினார்கள் என்பதை ஏற்றுக்கொண்டாலும் இதனால் காஃப் சூரா ஓதுவது கடமையில்லை என்று கூற முடியாது என்று வாதிடுகின்றார். இது அறிவுக்கே மாற்றமான தவறான வாதமாகும்.
ஒரு காரணத்துடன் ஒரு செயல் கூறப்பட்டால் அந்த காரணம் இருக்கும் வரை அதை செய்யலாம். அந்த காரணம் இல்லாவிட்டால் செய்யத் தேவையில்லை என்பது பொதுவான விதிமுறை.
நோய் குணமாகுவதற்காக மருந்து சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் கூறினால் நோய் குணமாகும் வரை மருந்து சாப்பிடலாம். நோய் குணமாகிவிட்டால் சாப்பிடத் தேவையில்லை.
என்னுடைய தந்தை எனக்கு சூரத்துல் பாத்திஹாவை கற்றுக்கொடுப்பதற்காக தினமும் அதை என்னிடம் ஓதுவார் என்று மகன் கூறினால் இதன் பொருள் என்ன?
என்னுடைய தந்தை மரணிக்கும் வரை தினமும் என்னிடம் சூரத்துல் பாத்திஹாவை ஓதிக்கொண்டே இருந்தார் என்று யாராவது விளங்குவார்களா? அறிவுள்ளவர்கள் யாரும் இவ்வாறு விளங்கமாட்டார்கள்.
மகன் கற்றுக்கொள்ளும் வரை ஓதினார். கற்றுக்கொண்ட பிறகு ஓதுவதை நிறுத்திவிடுவார் என்று தான் புரிய முடியும். ஒரு தந்தை மகன் கற்றுக்கொண்ட பிறகும் அவனிடம் ஓதுவாரேயானால் அவர் தேவையற்ற காரியத்தையே செய்கிறார்.
மகன் கற்றுக்கொண்ட பின் கற்றுக்கொண்ட சூராவை விட்டுவிட்டு அவன் கற்றுக்கொள்ளாத வேறு சூராவை ஓதினால் அது வரவேற்க வேண்டிய விசயம்.
நபி (ஸல்) அவர்கள் காஃப் சூராவை ஓதியதும் இது போன்ற செயலாகும். எனவே இது கியாமத் நாள் வரை ஒவ்வொரு ஜும்ஆவிலும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விசயமில்லை.
நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு அத்தஹிய்யாத்தை கற்றுக்கொடுத்துள்ளார்கள். எனவே தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது கட்டாயமில்லை என்று கூற முடியுமா? என்ற கேள்வியை கேட்கிறார்.
கொஞ்சம் கூட பொருத்தமில்லாத கேள்வியை இங்கே கேட்கிறார். நாம் இங்கே கற்றுக்கொடுக்கப்படும் விசயம் கட்டாயமானதாக இருக்குமா? இருக்காதா? என்பதைப் பற்றி சர்ச்சை செய்யவில்லை.
கற்றுக் கொடுக்கக்கூடியவர் ஒரு காரியத்தை செய்தால் அவர் தொடர்ச்சியாக நிரந்தரமாக செய்து கொண்டிருந்தார் என்று பொருள் வருமா? என்பதைப் பற்றித் தான் சர்ச்சை நடக்கின்றது.
கற்றுக்கொடுக்கப்படும் விசயம் கட்டாயமானதாகவும் இருக்கலாம். கட்டாயமில்லாமல் ஆர்வமூட்டப்பட்ட விசயமாகவும் இருக்கலாம். கட்டாயமானதா? ஆர்வமூட்டப்பட்டதா? என்பதை வேறு ஆதாரங்களை வைத்தே முடிவு செய்ய முடியும். கற்றுக் கொடுப்பதற்காக என்று வந்துவிட்டதால் கட்டாயம் என்று முடிவு செய்வது அறிவீனம்.
நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள் என்பதால் நபி (ஸல்) அவர்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு தான் மரணிக்கும் வரை அத்தஹிய்யாத்தை கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்று இவர் விளங்குவாரா?
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கற்றுக்கொள்ளும் வரை சொல்லிக் கொடுத்தார்கள். கற்றுக்கொண்ட பிறகு அதை அவருக்கு அவர்கள் சொல்லிக் கொடுக்கவில்லை. ஏனென்றால் கற்றுக்கொண்ட பிறகு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு தான் அறிவுள்ளவர்கள் விளங்குவார்கள்.
எனவே அவர் தனக்கு ஆதரவாக்க் காட்டிய செய்தி உண்மையில் அவருக்கு எதிரானதாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு தொழும் முறையை கற்றுக்கொடுப்பதற்காக மிம்பரில் ஏறிநின்று தொழுது காட்டினார்கள். (புகாரி 917). நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக இவ்வாறு செய்துள்ளதால் அவர்கள் மரணிக்கும் வரை இவ்வாறு செய்துகொண்டே இருந்தார்கள் என்று அறிவுள்ளவர்கள் புரியமாட்டார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் இஸ்திகாரா துஆவையும் இன்னும் சில துஆக்களையும் மக்களுக்கு கற்றுக்கொடுப்பவர்களாக இருந்தார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. (புகாரி 6390) (புகாரி 7390)
இதனால் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை இந்த துஆக்களை மக்களிடம் ஓதிக்காட்டிக்கொண்டு இருந்தார்கள் என்று யாரும் புரியமாட்டோம்.
இது போன்றே நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக காஃப் சூராவை ஓதினார்கள் என்ற ஹதீஸையும் புரிய வேண்டும்.
சைனியின் பதினான்காவது வாதம்.
இவர் சொல்வது போன்று மாத்திரம் ஹதீஸ்களில் இடம் பெற்றிருந்தால் இவர் கூறுவது நியாயம் எனலாம் பிற ஹதீஸ்களையும் வைத்துதான் இதில் நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். உம்மு ஹிஷாம் அவர்கள் அறிவிக்கும் செய்தியில் பின்வரும் அடிப்படையில் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது
حدثني محمد بن بشار ، حدثنا محمد بن جعفر ، حدثنا شعبة ، عن خبيب ، عن عبد الله بن محمد بن معن ، عن بنت لحارثة بن النعمان ، قالت : ” ما حفظت ق ، إلا من في رسول الله صلى الله عليه وسلم ، يخطب بها كل جمعة ” ، قالت : وكان تنورنا وتنور رسول الله صلى الله عليه وسلم واحدا(مسلم)
இந்த ஹதீஸில் காபை கொண்டு உரை நிகழ்த்துவார்கள் என இடம் பெற்றுள்ளது இன்னுமொரு ஹதீஸை கவனியுங்கள்.
وحدثني عبد الله بن عبد الرحمن الدارمي ، أخبرنا يحيى بن حسان ، حدثنا سليمان بن بلال ، عن يحيى بن سعيد ، عن عمرة بنت عبد الرحمن ، عن أخت لعمرة ، قالت : ” أخذت ق والقرآن المجيد من في رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة ، وهو يقرأ بها على المنبر في كل جمعة ” . وحدثنيه أبو الطاهر ، أخبرنا ابن وهب ، عن يحيى بن أيوب ، عن يحيى بن سعيد ، عن عمرة ، عن أخت لعمرة بنت عبد الرحمن كانت أكبر منها ، بمثل حديث سليمان بن بلال
இந்த ஹதீஸில் காபை ஓதுவார்கள் என இடம் பெற்றுள்ளது ஓதுவார்கள் என்பதும் உரைநிகழ்த்துவார்கள் என்பதும் வெவ்வேறானவை ஆகும். காப் என்ற அத்தியாத்தை ஓதிவிட்டு உரையை துவக்குவார்களா? அல்லது காபை ஓதி மக்களுக்கு விளக்கம் கூறுவார்களா? என்பதை புரிய முடியாத நிலையில்தான் இந்த ஹதீஸ்கள் உள்ளன. இதற்கு சற்று விளக்கமாக இன்னுமொரு ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
1442و حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ الْأَنْصَارِيُّ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ عَنْ أُمِّ هِشَامٍ بِنْتِ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ قَالَتْ لَقَدْ كَانَ تَنُّورُنَا وَتَنُّورُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاحِدًا سَنَتَيْنِ أَوْ سَنَةً وَبَعْضَ سَنَةٍ وَمَا أَخَذْتُ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ إِلَّا عَنْ لِسَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَؤُهَا كُلَّ يَوْمِ جُمُعَةٍ عَلَى الْمِنْبَرِ إِذَا خَطَبَ النَّاسَ رواه مسلم
மக்களுக்கு உரைநிகழ்த்தினால் காபை ஓதுவார்கள் என தெளிவாகவே இங்கு இடம் பெற்றுள்ளது அதாவது காப் ஓதுவது என்பது வேறு உரைநிகழ்த்துவது என்பது வேறு என்பதை இந்த ஆதாரம் சுட்டிக்காட்டுகின்றது என்பதை. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம் எனவேதான் நாம் ஜும்ஆ உரையை ஆரம்பிக்கும் முன்பு மிம்பரில் ஏறியவுடன் இந்த அத்தியாத்தை முழுமையாக ஓதுகிறோம் பின்னர் எமது உரையை துவக்குகிறோம் இதுதான் நபிவழியாக உள்ளது.
பதினான்காவது வாதத்துக்கு பதில்.
நபி (ஸல்) அவர்கள் காஃப் சூராவை மக்களுக்கு உரை நிகழ்த்தும் போது ஓதுவார்கள் என்றும் காஃப் சூராவைக் கொண்டு மிம்பரில் ஓதுவார்கள் என்றும் சில அறிவிப்புகளில் வந்துள்ளதால் உரைக்கு முன்பு இதை ஓதிவிட்டு பிறகு உரையை துவங்குவார்கள் என்று இவர் விளக்கம் கொடுக்கின்றார்.
காஃப் சூரா ஓதுவது உரையில் அடங்காது. உரை வேறு. ஓதுவது வேறு என்று இவர் வேறுபடுத்துவது ஹதீஸிற்கு நேர் முரணாகும்.
ஏனென்றால் நாம் எடுத்துக்காட்டிய செய்தியில் காஃப் சூராவையே உரையாக நிகழ்த்துவார்கள் என்று தெளிவாக இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்புக்கு இவரால் ஏற்கத்தக்க பதில் தரமுடியவில்லை.
எனவே தான் இது தொடர்பாக வரும் அறிவுப்புகள் விளங்கமுடியாத வகையில் உள்ளன என்று கூறி நழுவிச் செல்கின்றார். அறிவிப்புகள் தெளிவாகவே இருக்கின்றன. இவருடைய சிந்தனை தான் தெளிவாக இல்லை.
நபி (ஸல்) அவர்கள் காஃப் சூராவை ஓதினார்கள் என்பதும் சரியான தகவல். அந்த சூராவையே உரையாக நிகழ்த்தினார்கள் என்பதும் சரியான தகவல். இந்த இரண்டு தகவல்களுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லை.
ஏனென்றால் ஒரு அத்தியாயத்தை மக்களுக்கு விளக்குவதாக இருந்தால் அதை ஓதிக்காட்டித் தான் விளக்க முடியும். காஃப் சூராவின் பொருளை மக்களுக்கு புரிய வைப்பதாக இருந்தால் அதை ஓதிக்காட்டித்தான் புரிய வைக்க முடியும். இந்த அடிப்படையில் தான் நபியவர்கள் காஃப் சூராவை ஓதிக்காட்டி அதையே மக்களுக்கு உரையாக வழங்கியுள்ளார்கள்.
ஓதினார்கள் என்ற தகவல் உரை நிகழ்த்தினார்கள் என்ற தகவலை மறுக்காது. உரை நிகழ்த்தினார்கள் என்பது ஓதினார்கள் என்பதின் விளக்கமாகும். அதாவது காஃப் சூராவை நபியவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு சடங்காக ஓதவில்லை. உரை என்ற அடிப்படையில் தான் ஓதினார்கள் என்று ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
காஃப் சூரா உரை நிகழ்த்துவது என்ற அடிப்படையில் ஓதப்பட்டதால் அது கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய ஜும்ஆவின் அம்சங்களில் ஒன்றாக ஆக முடியாது என்ற நம்முடைய வாதத்திற்கு இவர் எந்த பதிலையும் கூறவில்லை.
ஓதினார்கள் என்றும் உரை நிழ்த்தும் போது ஓதினார்கள் என்றும் அறிவிப்புகளில் வரும் வார்த்தை வேறுபாட்டை பதிலாக கூற முயற்சித்தார். ஆனால் இது நாம் கேட்ட கேள்விக்குரிய பதில் இல்லை.
சைனியின் பதினைந்தாவது வாதம்.
ஒரு சம்பவத்தை பலர் அறிவிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஒரு தகவலை ஒரே ஒருவர் அறிவித்து அது ஆதாரபூர்வமாக இருக்குமெனில் அதையும் நாம் எடுத்துக் கொள்ளவே வேண்டும்.
ஒவ்வொரு ஜும்ஆவிலும் நபி(ஸல்)அவர்கள் காப் ஓதினார்கள் என ஆதாரபூர்வமாக இடம் பெற்றிருக்கும் போது அதை ஜாபிர் (ரழி) அறிவிக்கவில்லை, ஏனையவர்கள்’ அறிவிக்கவில்லை என பேசுவது அதிகப் பிரசிங்கித்தனம் இல்லையா? ஹதீஸில் இடம் பெற்றால் நாம் செய்ய வேண்டியதுதானே! ஏன் நாம் தேவையற்ற கேள்விகள் கேட்க வேண்டும்? எனவே அப்பாஸ் அலி இது போன்ற வாதத்தை கைவிட வேண்டும்.
பதினைந்தாவது வாதத்துக்கு பதில்.
ஒரு நபித்தோழர் அறிவித்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நமது நிலைபாடு. ஆனால் குறித்த விசயத்தில் இவருடைய கருத்துக்கு ஆதரவாக ஒருவர் கூட அறிவிக்கவில்லை என்பதே நிதர்சணமான உண்மை.
இவர் கூறும் கருத்தை உம்மு ஹிஷாம் (ரலி) உட்பட எந்த நபித்தோழரும் அறிவிக்கவில்லை. இதை விளக்குவதற்காகத் தான் மற்ற நபித்தோழர்கள் யாரும் அறிவிக்கவில்லை என்ற தகவலை கூறினோம்.
ஹதீஸில் சொல்லப்படாத கருத்தை இருப்பதாகக் கூறுவது அதிகபிரசிங்கித் தனத்தை விட மோசமான செயலாகும். நபியின் மீது இட்டுக்கட்டும் அளவுக்கு பெரிய பாவம் என்பதை இவருக்கு எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறோம்.
பதினாறாவது வாதம்.
அல்லாஹு அக்பர்! சகோதரர் அப்பாஸ் அலி இந்த ஆதாரத்தை இங்கு கொண்டு வந்திருப்பதையிட்டு மிகவும் ஆச்சரியம் அடைகிறோம். ஹதீஸ்களை ஆய்வு செய்வதில் இந்த தரத்திலா இவர் உள்ளார்? என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மேலே அவர் கொண்டு வந்திருக்கும் அறிவிப்பாளர் தொடரில் இப்றாஹீம் இப்னு முஹம்மத் அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.
யார் இந்த இப்றாஹீம்?
இவர் இமாம் ஷாபி(ரஹ்) அவர்களுக்கு சிறு வயதில் ஆசானாக திகழ்ந்த ஒருவராவார் இவரை ஏராளமான அறிஞர்கள் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
وَسمعت عليا يَقُول ابراهيم بن أبي يحيى كَذَّاب وَكَانَ يَقُول بِالْقدرِ(سؤالات محمد بن عثمان:1:124)
இமாம் அலியிப்னு மத்யனீ இவர் ஒரு பொய்யராவார் இவர் இறைநியதியை (மறுத்துப்) பேசுபவராகவும் இருந்தார்) ஸுஆலாது முஹம்மத் பின் உத்மான்1:124)
عَن يحيى بن سعيد قَالَ كُنَّا نتهمه بِالْكَذِبِ يَعْنِي إِبْرَاهِيم بْن أَبِي يحيى(العلل ومعرفة الرجال:2:535)
இமாம் யஹ்யா: இவரை நாங்கள் பொய்யரென்று குற்றம் சுமத்தினோம்(அல்இலல்2:535)
بِشْرُ بْنُ عُمَرَ قَالَ: نَهَانِي مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي يَحْيَى، قُلْتُ: مِنْ أَجْلِ الْقَدَرِ تَنْهَانِي؟ قَالَ: لَيْسَ هُوَ فِي دِينِهِ بِذَاكَ (الضعفاء الكبير:1:62)
இப்றாஹீமிடமிருந்து அறிவிப்பதை இமாம் மாலிக் எனக்கு தடை செய்தார் அதற்கு நான் இப்றாஹீம் கழா கத்ரை மறுத்ததற்காகவா அவரிடமிருந்து அறிவிக்க வேண்டாம் என தடை செய்கிறீர்கள் எனக் கேட்டேன் அதற்கு மாலிக் இமாமவர்கள் அவர் தனது மார்க்கத்தில் ஒழுங்கானவர் இல்லை என பதிலளித்தார்(அல்லுஅபாஉல் கபீர்:1:62)
سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ يَقُولُ: سَأَلْتُ مَالِكَ بْنَ أَنَسٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي يَحْيَى أَكَانَ ثِقَةً فِي الْحَدِيثِ؟ قَالَ: لَا، وَلَا ثِقَةً فِي دِينِهِ(الضعفاء الكبير:1:62)
இமாம் யஹ்யா இப்றாஹீமைப்பற்றி மாலிக் இமாமிடத்தில் அவர் மார்க்கத்தில் நம்பகமானவரா? என வினவினேன். அதற்கு மாலிக் இமாம் அவர் மார்க்கத்தில் நம்பகமானவர் இல்லை என பதில் அளித்தார்(அல்லுஅபாஉல் கபீர்:1:62)
இமாம் யஹ்யா பின் மயீன் இப்றாஹீம் நம்பகமற்றவர் ஆவார் (அல்லுஅபாஉல் கபீர்:1:62)
இமாம் யஹ்யா பின் மயீன்:( இப்றாஹீம் என்பவர் ஒரு பொய்யர் ஆவார்(அல்இலலுல் முதனாஹியா:2:203
இமாம் இப்னு ஹிப்பான்: இவர் ஹதீஸில் பொய்யுரைப்பவர் ஆவார் அல்மஜ்ரூஹீன் :1:105
இப்றாஹீம் என்ற இந்த அறிவிப்பாளரை கழா கத்ரை மறுத்ததற்காக அறிஞர்கள் அவரை விமர்சிக்கவில்லை மாறாக அவர் பொய்யர் என்பதே அவரது ஹதீஸை அறிஞர்கள் ஏற்காமல் இருந்ததற்குரிய காரணமாகும்.
இது பற்றி இமாம் யஹ்யாவே கூறுகிறார்:
قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ لَمْ يُتْرَكْ إِبْرَاهِيمُ بْنُ أَبِي يَحْيَى لِلْقَدَرِ إِنَّمَا تُرِكَ لِلْكَذِبِ(المجروحين)
இப்றாஹீம் கழாகத்ரை மறுப்பவர் என்ற காரணத்ல்னால்(அறிஞர்களால்) விடப்படவில்லை அவர் பொய்யர் என்பதே அவர் (ஏற்கப்படாமல்) விடப்பட்டதற்குரிய காரணமாகும் அல்மஜ்ரூஹீன்:1:105
இப்றாஹீம் பொய்யர் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன் என இமாம் யஹ்யா கூறுபவராக இருந்தார். அல்மஜ்ரூஹீன்:1:105)
இப்றாஹீம் என்பவர் பொய்யர் என்பது அறிஞர்களுக்கிடையில் இவ்வளவு தெளிவாக இருக்க அப்பாஸ் அலி பொய்யர் இடம் பெற்ற அறிவிப்பாளர் தொடரை ஆதாரம் காட்டுவது எவ்வளவு பிழையானது என்பதை சிந்தித்தால் நாம் புரிந்து கொள்ளலாம்.
இமாம் அபூதாவுத் இப்றாஹீம் என்பவர் ஒரு பொய்யர் ஆவார் (அல்லுஅபாஉல் கபீர்:1:62)
இதல்லாமல் ஏகப்பட்ட அறிஞர்கள் இவரை பொய்யர் எனக் கருதுகின்றனர். அறிவுடையோருக்கு இந்த சான்றுகள் போதுமானவை ஆகும்.
ஷாபி இமாம் செய்த தவறு.
இமாம் ஷாபியீ அவர்கள் இப்றாஹீம் என்ற இந்த அறிவிப்பாளரை ஆதாரமாகக் கொண்டு வந்துள்ளார். இமாம் ஷாபியீ இவ்வாறு இவரை ஆதாரமாகக் கொண்டு வந்ததை அவருக்கு பிறகு வாழ்ந்த இப்னு ஹிப்பான் என்ற அறிஞர் தனது மஜ்ரூஹீன் என்ற நூலில் விமர்சித்துள்ளார்.
أَمَّا الشَّافِعِي فَإِنَّهُ كَانَ يجالسه فِي حداثته ويحفظ عَنْهُ حفظ الصَّبِي وَالْحِفْظ فِي الصغر كالنقش فِي الْحجر فَلَمَّا دَخَلَ مصر فِي آخر عمره فَأخذ يصنف الْكتب المبسوطة احْتَاجَ إِلَى الْأَخْبَار وَلَمْ تكن مَعَهُ كتبه فَأكْثر مَا أودع الْكتب من حفظه فَمن أَجله مَا روى عَنْهُ وَرُبمَا كنى عَنْهُ وَلَا يُسَمِّيه فِي كتبه(المجروحين)
இமாம் ஷாபியீ தனது சிறு வயதில் இப்றாஹீமிமே உட்கார்ந்து கல்வி பயின்றார். சிறு பிள்ளை மனனம் செய்வதைப் போன்று (இப்றாஹீம் கூறுவதை) மனனம் செய்தார். இளமையிற் கல்வி கல்லில் பொறிப்பது போன்றது. இமாம் ஷாபியீ தனது இறுதிக்கால கட்டத்தில் எகிப்துக்கு சென்றார். விரிவான புத்தகங்களை தொகுக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு பல செய்திகள் தேவைப்பட்டன. அந்நேரம் அவரிடத்தில் அவரது எந்த கிதாபுகளும் இருக்கவில்லை. எனவே தான் (சிறு வயதில்) மனனம் செய்தவற்றை வைத்தே நூல்கள் எழுதினார். இதனால்தான் இப்றாஹீமிடமிருந்து இமாம் ஷாபியீ எதையும் அறிவிக்கவில்லை. சில வேளை இப்றாஹீம் என்பவரின் பெயரை புனைப் பெயராக இமாம் ஷாபியீ குறிப்பிடுவார். தனது எந்த நூலிலும் இப்றாஹீம் என்ற பெயரை இமாம் ஷாபியீ குறிப்பிடவில்லை.
அடுத்ததாக இந்த இப்றாஹீம் என்பவருக்கு இமாம் ஷாபி அவர்கள் மாணவராக இருந்துள்ளார் என்பதற்கு தக்க ஆதாரம் உள்ளது ஆனால் இப்றாஹீமிற்கு அப்துல்லாஹிப்னு அபீபக்ர் என்பவர் ஆசானாக இருந்துள்ளாரா என்பதையும் அப்பாஸ் அலி நிரூபிக்க வேண்டும் ஏனெனில் இப்றாஹீமிற்கு அப்துல்லாஹிப்னு அபீபக்ர் ஆசானாக இருந்ததற்குரிய ஆதாரத்தையோ அல்லது அப்துல்லாஹிப்னு அபீபக்ரிற்கு இப்றாஹீம் மாணவராக இருந்ததற்கோ எவ்வித ஆதாரத்தையும் எம்மால் காண முடியவில்லை இதையும் சகோதரர் அப்பாஸ் அலி நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளார்.
பதினாறாவது வாதத்துக்கு நமது பதில்.
நாம் சுட்டிக்காட்டிய அறிவிப்பில் இப்ராஹீம் பின் முஹம்மது என்பவர் இருக்கின்றார். இவர் பொய்யர் என்று அறிஞர்கள் கூறியிருப்பதை ஸைனி சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்ராஹீ பின் முஹம்மதை இமாம் ஷாபி அவர்கள் ஆதாரமாகக் கொண்டு அவருடைய அறிவிப்புகளையும் பதிவுசெய்துள்ளதால் இவர் நம்பகமானவராக இருப்பார் என்ற எண்ணத்தில் இவரைப் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. எனவே இதை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டோம்.
இது பலவீனமான செய்தி என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இது பலவீனமாக இருப்பதால் நாம் வைத்த வாதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஒரு கருத்திற்கு 10 ஆதாரத்தை காட்டுகிறோம். அவற்றில் ஒன்று பலவீனமாக இருப்பது தெரிய வருகின்றது என்றால் மீதமுள்ள ஒன்பது ஆதாரங்களால் அந்தக் கருத்து உறுதியானதாகவே இருக்கும்.
எனவே நாம் இறுதியாக சுட்டிக்காட்டிய இந்த அறிவிப்பு பலவீனமானதாக இருந்தாலும் நாம் சுட்டிக்காட்டிய வேறு பல ஆதாரங்களால் நமது கருத்து சரியானதாகும். இது தவறு என்பதை சகோதரர் ஸைனியால் நிரூபிக்க முடியவில்லை.
சைனியின் பதினேழாவது வாதம்.
அப்பாஸ் அலியின் பதினாறாவது வாதம்:
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று கொண்டு காஃப் சூரா அல்லாத ஸாத் போன்ற வேறு சூராக்களையும் ஓதியுள்ளார்கள். அவர்கள் இவ்வாறு செய்துள்ளதால் நாமும் கண்டிப்பாக இவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறமாட்டோம்.
மறுப்பு:
நபி(ஸல்) அவர்கள் ஸுறத்துஸ் ஸாத் என்ற அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை தினத்தில் ஓதினார்கள் என்பதற்கு இவர் ஆதாரம் தர வேண்டும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமைக்கு மாத்திரம் மிம்பரைப் பயன்படுத்தவில்லை. வெள்ளிக்கிழமை அல்லாத தினத்திலும் மிம்பரில் ஏறி மக்களுக்கு தேவையானவற்றை நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். அதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால் இன்ஷா அல்லாஹ் தரலாம்
பதினேழாவது வாதத்துக்கு நமது பதில்.
நபி (ஸல்) அவர்கள் காஃப் சூரா அல்லாத வேறு சூராக்களை மிம்பரில் நின்று கொண்டு ஓதினார்கள் என்று தான் நாம் கூறினோம். ஜும்ஆவில் ஓதினார்கள் என்று நாம் கூறவில்லை.
ஜும்ஆவில் ஓதினார்களா? ஜும்ஆவிற்கு வெளியில் ஓதினார்களா? என்பது பிரச்சனை இல்லை. எங்கு ஓதினாலும் எந்த அடிப்படையில் ஓதினார்கள் என்பதே முக்கியம்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சூராவை மக்களுக்கு போதிக்கும் விதமாக ஓதினால் அதை அவர்கள் ஜும்ஆவில் ஓதினாலும் ஜும்ஆவிற்கு வெளியில் ஓதினாலும் அதிலிருந்து ஒவ்வொரு ஜும்ஆவிலும் ஓதுவது கடமை என்று வாதிடுவது அறிவீனம்.
இதை இவருக்கு புரிய வைப்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் காஃப் சூரா அல்லாதவற்றையும் ஓதியுள்ளார்கள். இவற்றையும் கட்டாயமாக ஓதுவீர்களா? என்று கேட்டோம். இதற்கு அவர் எந்த பதிலையும் கூறவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தேவையானவற்றை மக்களுக்கு மிம்பரில் ஏறி விளக்கியுள்ளார்கள். அவை தேவை என்ற அடிப்படையில் செய்யப்பட்டவை என்பதால் கட்டாயமில்லை என்று கூறுகிறார்.
நபி (ஸல்) அவர்கள் காஃப் அத்தியாயத்தை ஜும்ஆ தினத்தில் குறிப்பிட்ட காலம் ஓதியதும் தேவை என்ற அடிப்படையில் தான். மக்களுக்கு கற்றுக்கொடுத்தல் என்ற தேவைக்காகவே இதை செய்தார்கள். அப்படியிருக்கு இதை மட்டும் ஒவ்வொரு ஜும்ஆவிலும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று கூறுவது சரியா? இதற்கு இவர் பதில் சொல்ல வேண்டும்.
சகோதரர் ஸைனி நம்மிடம் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் அல்லாஹ்வின் கிருபையால் நாம் பதில் கூறி விட்டோம். நாம் கேட்ட கேள்விகளுக்கும் வைத்த ஆதாரங்களுக்கும் அவரால் சரியான பதிலை கூறமுடியவில்லை.
அவர் ஒவ்வொரு முறை பதில் கூற முயற்சிக்கும் போது அவருடைய அறியாமை மட்டுமே வெளிப்படுகின்றது. ஏதாவது ஒரு விசயத்தை அவர் அறியாமல் விட்டிருந்தால் அதை பெரிய குறையாக நாம் பேசமாட்டோம். ஏனென்றால் இது போன்ற நிலை எல்லா ஆய்வாளருக்கும் ஏற்படும்.
ஆனால் ஒரு ஆய்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இவர் அறியாமல் தவறு செய்கிறார் என்றால் அவர் முறையாக ஆய்வு செய்யவில்லை என்பதையே இது காட்டுகின்றது. அவருடைய தவறுகளை அவர் மீது நல்லெண்ணம் வைத்து அவர் அறியாமல் செய்தார் என்று கருதுகிறோம்.
இப்போது தான் அவர் ஆய்வு செய்ய கற்றுக் கொள்கிறார் என்றால் இதற்காக அவர் முறையான அடிப்படையில் முயற்சி செய்யலாம்.
ஆனால் தன்னுடைய திறமையை வளர்ப்பதற்காக மார்க்கத்தில் இல்லாததை கூறி இருப்பதை மறுப்பது பாராதூரமான செயல். இவர் விளையாடும் விளையாட்டிற்கு மார்க்கத்தை களமாக ஆக்கினால் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச திறமையும் பாழாகிவிடும். மறுமையில் அல்லாஹ்விடமும் பதில் கூற வேண்டும்.
மருத்துவம் படிப்பதற்காக மனிதர்களுடைய உயிரில் விளையாடுவது மிகப்பெரிய தவறாகும். கட்டிடம் கட்டத் தெரியாதவன் கட்டிடம் கட்டினால் அதனால் ஏற்படும் விளைவு பயங்கரமாக இருக்கும். இது போன்ற தவறையே சகோதரர் ஸைனி செய்துகொண்டிருக்கின்றார்.
எனவே ஸைனியின் நன்மை கருதி அவருக்கு நாம் கூறுவது என்னவென்றால் எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதை முதலில் அறிந்துவிட்டு பிறகு இம்முயற்சியில் ஈடுபடுவதே அவருக்கும் நல்லது. மார்க்கத்திற்கும் நல்லது.
அல்லாஹ் போதுமானவன்.
நன்றி - sltj
Post a Comment