கால் நூற்றாண்டாக ...கூடங்குளம் அணுமின் நிலையம் கடந்த வந்த பாதை

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டு காலமாக கூடங்குளம் அணுமின் நிலையம் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு கடந்து வந்திருக்கிறது. கூடங்குளம் போராட்ட பாதை ஒரு பார்வை... 

1988-நவம்பர் 25: அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி-சோவியத் யூனியன் அதிபர் கோர்ப்பச்சேவ் இடையே கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது போராட்டங்கள் வெடித்தன. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.யாக இருந்த வைகோ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசினார். 2001ல் கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கின.




2011-ல் வெடித்த போராட்டம்- தமிழக அரசு ஆதரவு 

2011 செப்டம்பரில் கூடங்குளம் முதலாவது அணு உலை திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 2011 செப்டம்பர் 8-ந் தேதி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் செப்டம்பர் 19 ந் தேதி கூடங்குளம் அணு உலை தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். செப்டம்பர் 21ந் தேதி கூடங்குளம் அணு உலை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் நாராயணசாமி சந்தித்தார். செப்டம்பர். 22 கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அக்டோபர் அணுஉலைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அக்டோபர் 10ந் தேதி கூடங்குளம் அணுமின் நிலைய தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக குழு சந்தித்தது.



மத்திய வல்லுனர் குழு அமைப்பு 


அக்டோபர் 20ந்- தேதியன்று விஞ்ஞானி முத்துநாயகம் தலைமையில் மத்திய வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. நவம்பர். 8, 18, டிசம்பர் 15, 31ல் ஆகிய நாட்களில் தமிழக குழுவுடன், மத்திய நிபுணர் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. நவம்பர். 12ந் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்காக நிதி குறித்து விசாரிக்க, மத்திய அரசு உத்தரவிட்டது. நவம்பர் 13ந் தேதி கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்


 அணுமின் நிலைய முற்றுகைப் போராட்டம் 

டிசம்பர் 11ந் தேதி கூடங்குளம் அணுமின் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. டிசம்பர் 17ந் தேதி கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படும் என்று பிரதமர் மன்மோகன் ரஷ்யாவில் அறிவித்தார் டிசம்பர் 18ந் தேதியன்று கூடங்குளம் சுற்றுவட்டார மக்களுக்கு இன்னமும் அச்சம் தீரவில்லை என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் அனுப்பினார். 2012-ல் ஜனவரி 23ந் தேதியன்றுதமிழக தலைமை செயலருடன் இந்திய அணுமின் கழக இயக்குனர் பரத்வாஜ் சந்தித்தார்.



மத்திய அரசு ரெய்டு 

ஜனவரி 15ந் தேதியன்று கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தொண்டு நிறுவனங்களில் உள்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. ஜனவரி 31ந் தேதியன்று கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் மத்தியக்குழு இறுதி பேச்சுவார்த்தை நடத்தியது. பிப்ரவரி 1ந் தேதியன்று கூடங்குளம் சுற்றுவட்டார மக்களின் அச்சம் தீர்க்கப்பட்டுவிட்டதாக மத்திய குழு அறிவித்தது. பிப்ரவரி 9ந் தேதியன்று கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழக நிபுணர் குழு அமைக்கப்பட்டது, பிப்ரவரி 19ந் தேதி சர்வதேச அணுசக்தி விஞ்ஞானிகள் கூடங்குளத்தில் ஆய்வு செய்தனர்



தொண்டு நிறுவன லைசென்ஸ்கள் ரத்து 

பிப்ரவரி 24ந் தேதியன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்திய தொண்டு நிறுவன லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டன. பிப்ரவரி 26ந் தேதியன்று கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜெர்மானியர் ஹெர்மான் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். பிப்ரவரி. 28ந் தேதியன்று கூடங்குளம் அணு உலை தொடர்பாக தமிழக குழு வல்லுநர் குழுவின் அறிக்கை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 19ந் தேதி அணு உலையை திறக்க தமிழக அரசு அனுமதித்து, அணுமின் நிலைய வாயில்கள் விஞ்ஞானிகளுக்காக திறக்கப்பட்டன.



சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி 

செப்டம்பர் 6 ந் தேதியன்று கூடங்குளம் அணு உலை செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. செப்டம்பர்.11ந் தேதியன்று அணு உலையில் எரிபொருளை நிரப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டது.  


விடிய விடிய போராட்டம்- கடல் வழி முற்றுகை 

செப்டம்பர் 9-ந் தேதி கூடங்குளம் அணு உலை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. விடியவிடிய கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். செப்டம்பர் 27-ந் தேதி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடல் மணலில் புதைந்து போராட்டம் நடத்தப்பட்டது. அக்டோபர் 8-ந் தேதியன்று கூடங்குளம் அணு உலையை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். 2013 மே 6 : கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் போராட்டக்காரர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறவும் அறிவுறுத்தியுள்ளது. 

thanks to -one india
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger