ஷஹாதா சொல்லி விட்டு, தவ்பாவும் கேளுங்கள்!


ஆமினா அஸாத் ஸாலிக்கு பகிரங்க மடல்.
அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னனியின் செயலாளர் அஸாத் ஸாலியின் மகள் ஆமினா கங்காராம விகாரகைக்கு மலர் தட்டுடன் சென்றது தொடர்பாக ஓர் ஆக்கத்தை நாம் வெளியிட்டிருந்தோம். அது தொடர்பில் அஸாத் ஸாலியின் மகள் ஆமினா தன்னிலை விளக்கம்ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவருடைய விளக்கத்திற்கு பதிலாக இந்த ஆக்கத்தினை வெளியிடுகின்றோம். – Rasmin MISc
ஆமினா அஸாத் ஸாலியின் கடிதத்தை முழுமையாக படிக்க இங்கு க்லிக்செய்யவும்.
……………………………………………….
சகோதரி ஆமினா அஸாத் ஸாலிக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹம்மதுல்லாஹி வபரகாதுஹு
கங்காராம விகாரரைக்கு மலர் தட்டுடன் நீங்கள் சென்றது தொடர்பிலான ஒரு விளக்கத்தை வழங்கியிருந்தீர்கள். இது தொடர்பாக சில விஷயங்களை விரிவாக ஆராயலாம் என்று எண்ணுகின்றேன்.
காரணம் உங்கள் தந்தையின் விடுதலை என்பது எவ்வளவு தேவையானதோ அதை விட நீங்கள் நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பது மிக மிக முக்கியமானது. இதை மனதில் வைத்துக் கொண்டு நான் சொல்லும் செய்திகளை நீங்கள் படித்தால் இறைவனின் நாட்டம் உங்களுக்கு நேர் வழி கிடைக்கலாம்.
இது உபத்திரவமல்ல உங்களுக்கு செய்யும் உதவி.
ஆரம்பமாக நீங்கள் மலர் தட்டுடன் விகாரைக்கு சென்றது தொடர்பில் அன்றிரவே இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடியதாக எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சியான விஷயம். இருப்பினும் நீங்கள் செய்த காரியம் குப்ரை உண்டாக்கக் கூடியது என்பதினால் தெளிவாக மீண்டும் ஷஹாதா கலிமாவை (இது வரை சொல்லாவிட்டால்) சொல்லி தூய இஸ்லாத்திற்குள் நுழையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
ஏன் என்றால் (மன்னிப்பு கேட்க்காத வரை) இறைவன் மன்னிக்காத பெரும் குற்றம் இணை வைத்தலாகும்.
உங்கள் பார்வைக்கு இரண்டு திருக் குர்ஆன் வசனங்களை தந்திருக்கின்றேன்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4: 48)
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். (அல்குர்ஆன் 4: 116)
மேலுள்ள இரண்டு வசனங்களும் சொல்லுகின்ற தகவல் என்ன?
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரும் பாவத்தை செய்த நரகத்திற்கு உரியவர் என்பதை மேலே உள்ள வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன.
இனி உங்கள் விளக்கத்திற்கு வருவோம். நீங்கள் சொல்லியுள்ள தகவல்களை ஒவ்வொன்றாக நான் இங்கு அலசுவதற்கு கடமைப்பட்டுள்ள காரணத்தினால் தனித் தனியாக அவற்றுக்கு விளக்கமளிக்கின்றேன்.
உங்கள் விளக்கத்தின் முதல் கட்டமாக …………
உங்கள் விளக்கத்தில் என்னுடைய தந்தையின் விடுதலைக்காக நானும் எனது தாயும் கங்காராம விகாரையில் மலர்த்தட்டு ஏந்தி வழிபாட்டில் ஈடுபட்டதாகவும் நாங்கள் காபிர்களாகிவிட்டதாகவும்,தற்போது பழிச்சொல்லை சுமந்தவர்களாக நாம் இந்த சமூகத்தின் முன் நிற்கின்றோம். நீங்கள் பார்த்த காட்சிகள் உண்மை. அதை நான் மறுக்கவில்லை. என்று கூறியுள்ளீர்கள்.
ஆனால் அதன் தொடரிலேயே வீடியோவில் காண்பிக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மையென்றும் நீங்களே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். அப்படியானால் உங்கள் மேல் யாரும் பழிச் சொல் சொல்லவில்லை நீங்கள் தான் தூய இஸ்லாமிய மார்க்கத்தில் இருப்பதாக சொல்லிக் கொண்டு மார்க்கத்தின் ஏகத்துவக் கொள்கையை பழித்துள்ளீர்கள்.
உங்களுக்கு பழிச் சொல் சொல்வதென்றால் நீங்கள் செய்யாத ஒன்றை சொல்லியிருந்தால் அது பழிச் சொல் சொல்லியதாகவிருக்கும். நீங்கள் செய்த தவரை சுட்டிக் காட்டுவது எப்படி பழிச் சொல்லாக இருக்க முடியும்? நீங்கள் செய்த காரியத்தை யார் செய்தாலும் அவர்கள் குப்ருடைய காரியத்தை செய்த காபிர்களாவே கருதப்படுவார்கள். உங்களுக்கு முன்பு இந்த காரியத்தை செய்த மறைந்த அமைச்சர் அஷ்ரப் அவர்களுக்கு அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா இந்த பத்வாவைத் தான் வழங்கியது.
அன்று அஷ்ரப் செய்ததைத் தான் இன்று நீங்கள் செய்துள்ளீர்கள். இதை நாங்கள் சுட்டிக் காட்டினால் பழிச் சொல் சொல்வதாக எங்கள் மேல் ஏன் நீங்கள் பழிச் சொல் சொல்கின்றீர்கள்?
அது போல் நீங்கள் செய்த குற்றத்திற்கு அன்றிரவே இறைவனிடம் மன்றாடி பாவ மன்னிப்புத் தேடியதாக கூறியுள்ளீர்கள். நாங்கள் உங்கள் மீது பழிச் சொல் சொல்லியதாக சொல்லும் அதே நேரம் இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடியதாகவும் கூறுகின்றீர்கள் ஏன் இந்த முரன்பாடு?
பழிச் சொல் சுமந்தவர்கள் என்றால் நீங்கள் பாவம் செய்யாதவர்கள் என்று அர்த்தம் பாவம் செய்தவர்கள் என்றால் பழிச் சொல் சுமக்கவில்லை என்று அர்த்தமாகிவிடும்.
ஆக உங்கள் கடிதத்தின் படி நாங்கள் உங்கள் மீது பழிச் சொல் சொல்லவில்லை. நீங்கள் தான் தெளிவான குப்ரில் ஈடுபட்டுள்ளீர்கள்.
மீண்டும் சொல்கின்றேன் முதலில் ஷஹாதா கலிமாவை மொழிந்து தூய இஸ்லாத்திற்குள் நுழையுங்கள்.
நிச்சயம் சிறியவளாகிய நான் என்னை அறியாமல் செய்த அந்த தவறுக்காக எல்லாம் வல்ல அருளாளன்கருணை மிக்க இறைவன் என்னை நிச்சயம் மன்னிப்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது.
சிறியவளாக நான் அறியாமல் செய்த தவறு என்று நீங்கள் சொல்வதை உண்மையில் எம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. காரணம் தெவடகஹ தர்காவில் மரணித்தவர்களுக்கு சிறம் பணியும் குடும்பத்தில் பிறந்து, அதே காரியத்தை காலா காலம் செய்து வருபவர்கள் நீங்களும் உங்கள் குடும்பத்தவர்களும், மார்க்க அடிப்படையில் தெவடகஹ தர்காவுக்கு சென்று அங்குள்ள அவ்லியாவிடம் கையேந்துவதும், விகாரையில் போய் பூஜை செய்வதும் ஒன்றுதான் இரண்டுக்கும் எவ்விதமான வேறுபாடுகளும் கிடையாது.
கங்காராம விகாரை விஷயத்தில் எப்படி “நான் சிறியவள், தெரியாமல் செய்த தவறு” என்றெல்லாம் வியாக்கியாணம் சொல்கின்றீர்களோ அதே வியாக்கியானத்தை தெவடகஹ தர்கா விஷயத்திலும் உங்களாலும் உங்கள் குடும்பத்தினராலும் சொல்ல முடியுமா?
தர்காவுக்குப் போய் அங்குள்ள வலியுல்லாஹ் விடம் வேண்டுகின்ற விஷயத்திலும் “சிறியவளாகிய நான் அறியாமல் செய்த தவறு” என்று சொல்லி அதைவிட்டும் இனிமேலாவது ஒதுங்குவீர்களா?
இறைவன் கருணையாளன் அதே போல் மனிதனும் தவறு செய்பவன் யார் தவறு செய்தாலும் இறைவன் அவர்களை மன்னிப்பான் ஆனால் யார் இறைவனுக்கு இணை கற்பித்தாலும் அவர்கள் மீண்டும் இஸ்லாத்திற்குள் நுழையாத வரை அவர்கள் மன்னிக்கமாட்டான். நீங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோரியதாக சொல்வதில் சந்தோஷப்படுபவர்களில் நானும் ஒருவன் தான் இருந்தாலும் நீங்கள் செய்தது இணை வைக்கும் காரியம் என்பதினால் முதலில் செய்ய வேண்டியது ஷஹாதா மொழிவது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் கங்காராம விகாரையில் போய் பூஜை செய்ததை சுட்டிக்காட்டியதற்கான காரணம் உங்கள் தந்தை மேல் கொண்ட காழ்புணர்வு போல் உங்கள் எழுத்து நடையில் சித்தரிக்க முனைந்துள்ளீர்கள்.
நீங்கள் செய்த குப்ரிய்யத்தான காரியத்திலிருந்து உண்மையில் நீங்கள் திருந்தியிருந்தால் ஒரு வரியில் “நான் தவறு செய்துவிட்டேன் ஷஹாதா மொழிந்து மீண்டும் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன்” என்று முடித்திருக்கலாம்.
ஆனால் உண்மையில் நீங்கள் திருந்தவில்லை. உங்கள் தந்தையின் தற்போதைய நிலையை காரணம் காட்டி, அனுதாபம் தேடி செய்த தவரை திசை திருப்ப முனைகின்றீர்கள்.
அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடி தூய இஸ்லாத்தின் பக்கம் வருவதை விட மக்களிடம் திருப்தி தேடி அரசியல் இலாபம் அடைவதுதான் உங்கள் குறிக்கோளாக இருப்தை இதன் மூலம் தெளிவாக உணர முடிகின்றது.
சகோதரி தயவு செய்து நீங்கள் செய்த தவரை உங்கள் தந்தையின் நிலையை சொல்லி அனுதாபத்தின் மூலம் மறைக்க முயலாதீர்கள்.
இன்னும் சொல்லப் போனால்…….
உண்மையில் நீங்கள் செய்த தவரை சுட்டிக் காட்டியமைக்கான காரணம் ஏகத்துவத்தின் மீது கொண்ட பிடிப்புதான் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவாக குறிப்பிடுகின்றேன்.
காரணம் உங்கள் எழுத்து நடையில் – ஒரு இறைவனை மாத்திரம் வணங்க வேண்டும், சிலைகளுக்கோ, மரணித்த நல்லடியார்களுக்கோ எவ்விதத்திலும் தலை வணக்கக் கூடாது – என்று போதிக்கும் ஏகத்துவக் கொள்கையை கேளி செய்யும் பாணியை உணர முடிகின்றது.
இஸ்லாத்தின் மீது இவர்களுக்குள்ள பற்றுதலும்நெருக்கமும் அவர்களின் இஸ்லாமிய உணர்வும். அந்த உணர்வால் உந்தப்பட்டு அவர்கள் பிரயோகித்திருந்த வார்த்தைப் பிரயோகங்களும்.. அப்பப்பா… என்னை நெகிழச் செய்துவிட்டன.
தான் செய்த தவரை விட்டும் திருந்தியவர் எழுதுகின்ற வார்த்தை தானா இது? அல்லது தவரை சுட்டிக் காட்டியவர்களையே கிண்டல் செய்யும் வார்தையா? சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.
நிஜம் இதுவல்ல. –  நீங்கள் சொல்வது கதை!
நானும் என்னுடைய தாயும் எமது வாழ்க்கையில் ஒரு விகாரைக்குள் பிரவேசித்தது இதுவே முதற்தடவையாகும். இது சத்தியம். அங்கு என்ன நடக்கும்அவர்களின் கலாசாரம்வழிபாட்டு முறை எதையும் அறிந்தவர்களாக நாம் இருக்கவில்லை.
அங்கு ஏற்கனவே நின்றிருந்த பலரில் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பூத்தட்டை திடீரென என்னிடம் நீட்டினார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் எதற்காக அது தரப்படுகின்றது என்று தெரியாமல் கையில் எடுத்தேன். அதற்கிடையில் மறுபுறத்தில் எனது தாயின் கையிலும் அதேபோல் ஒரு தட்டு வழங்கப்பட்டுவிட்டது. அவரின் நிலையும் அதே நிலைதான்.
இலங்கையில் இருக்கும் எந்த முஸ்லிமுக்கும் விகாரைக்குள் என்ன நடக்கும் என்பதும், பௌத்த மக்கள் மலர் தட்டை எதற்காக எடுத்து செல்வார்கள் என்றும் உள்ளங் கையில் நெல்லிக் கணி போல் தெளிவாகத் தெரியும்.
இலங்கை நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் உங்களுக்கும், உங்கள் தாய்க்கும் இத்தனை வயதாகியும் விகாரைக்குள் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை என்பதை வாசிக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.
“கேட்டால் நான் சிறியவள் எனக்கு எதுவும் தெரியாது”
இப்படி சொன்னால் இவர்கள் நம்பி விடுவார்கள் என்று நீங்கள் நம்பி விட்டீர்கள் போலும்.
கொஞ்சம் அசந்தால் நான் இன்னும் என் தாயிடத்தில் பால் தான் குடிக்கின்றேன், சோறோ, பிஸ்கட்டோ நான் பார்த்ததே இல்லை என்று சொன்னாலும் சொல்வீர்கள்.
“கேட்பவன் கேணயனாக இருந்தால் கினற்றுக்குள் திமிங்கிலம் இரு்க்கிறது என்று சொல்வார்களாம்”
உங்கள் கதையும் இது போல் தான் உள்ளது.
செய்வதையெல்லாம் செய்துவிட்டு “நான் ஒன்றும் தெரியாத சிறு பிள்ளை” என்று சிறு பிள்ளைத் தனமாக பதில் சொல்லி தப்பிக்கலாம் என்று நினைத்திருப்பீர்கள் போல.
உங்களுக்குத் தான் தெரியவில்லை என்றால் உங்கள் தாய்க்குக் கூட தெரியவில்லை என்று சொன்னீர்களே இதுதான் இந்த வருடத்தின் மிகப் பெரும் உண்மையாக(?) இருக்கும் போல…
……………..
வேறு வழியில்லாமல் அதை (மலர் தட்டை) மேலே கொண்டுபோய் வேறு ஒருவரின் கையில் கொடுத்தோம். இது தான் உண்மையில் நடந்தது. இதில் பக்தியோ வழிபாட்டு நோக்கமோ அணு அளவும் கிடையாது. இது ஒரு தற்செயலான நிகழ்வு.
உங்கள் தாய்க்கும், உங்களுக்கும் கிடைத்த மலர் தட்டை மேலே கொண்டு போய் வேறு ஒருவரின் கையில் கொடுத்தோம். என்று செய்த காரியத்தை சரி செய்ய முனையும் உங்கள் சாணக்கியத்தை நான் பாராட்டுகின்றேன்.
கங்காராம விகாரையில் பூமி மட்டத்தில் வைத்து உங்கள் கைகளில் தரப்பட்ட மலர் தட்டை அந்த இடத்திலேயே வேறு ஒருவரிடம் கொடுப்பதற்கு முடியாமலா அவ்வளவு பெரிய படிக்கட்டுக்களை ஏறி மேலே போய் வேறு ஒருவரிடம் கொடுப்பதாக நினைத்து அங்கிருந்த புத்த மத குருவிடம் கொடுத்தீர்கள்?
அதுவும் பூஜை செய்து கொண்டிருந்த புத்த பிக்குவிடம்?
அப்பப்பா….. என்ன விளக்கம்? என்னே வியாக்கியானம்?
பாவம் நீங்களும், உங்கள் தாயும் இருவரின் கையில் கிடைத்த மலர் தட்டை கொடுப்பதற்கு உங்கள் இருவருக்கும் கங்காராம விகாரையில் அடித் தளத்தில் ஒருவர் கூட கிடைக்கவில்லை. படியேறி கஷ்டப்பட்டு மேல் தளத்திற்கு போனீர்கள் அங்கு கூட பௌத்த பிக்கு தான் இருந்தார் அவரும் புத்த பெருமானுக்கு முன்பாகவே நின்றிருந்தார். அதுதான் அவர் கையில் கொடுத்துவி்ட்டீர்கள். அப்படித் தானே ஆமினா தாத்தா?
“இது ஒரு தற்செயலான நிகழ்வு” என்று நீங்கள் தற்செயலாக எழுதிவிட்டீர்களோ?
அடித் தளத்திலிருந்து தாயும், மகளும் மேல் தளத்திற்கு படியேறிச் சென்று புத்த பெருமானுக்கு அருகில் பூஜை செய்யும் பௌத்த மத குருவைப் பார்த்து மலர் தட்டைக் கொடுத்தது உங்கள் பார்வையில் தற்செயலான செயலா?
உங்கள் செயலுக்கு நீங்களே சாட்சியாளர்கள்.
உண்மையில் கங்காராம விகாரையில் என்ன நடந்தது என்தை வீடியோ பதிவு தெளிவாக உணர்த்துகின்றது. அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு மீண்டும் தருகின்றேன். பார்த்து விட்டு உங்கள் மனசாட்சியை கேளுங்கள் நீங்கள் செய்தது தற்செயல் சம்பவமா? திட்டமிடப்பட்ட செயலா என்பதை.
……………..
இறைவன் மனிதனின் செயல்களுக்கன்றி எண்ணங்களுக்கே கூலி கொடுக்கின்றான் என்பதை சிறியவளாகிய நான் படித்துள்ளேன். அந்த வகையில் எனது எண்ணத்தில் எந்த குழப்பமும் இல்லை.
கங்காராம விகாரையில் புத்த சிலையிடத்தில் சென்று பூஜை செய்யவில்லை என்று ஒரு புறம் சொல்கின்றீர்கள்.
இன்னொரு புறம் தற்செயலாக நடத்துவிட்டது என்கின்றீர்கள்.
இறுதியில் மனிதனின் எண்ணத்திற்குத் தான் இறைவன் கூலி தருவான் எனது எண்ணத்தில் எவ்வித குழப்பமும் இல்லை என்கின்றீர்கள்.
நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போல உண்மையில் நீங்கள் திருந்துபவராக இருந்திருந்தால் திருந்துவதற்கு ஒரு வரி போதும். ஆனால் நீங்கள் திருந்தவில்லை. தெளிவாக மழுப்புகின்றீர்கள்.
ஆமினா தாத்தா….. (நீங்கள் உங்கள் செய்த காரியத்தை மழுப்புவதற்காகத்தான் இந்த சிறியவள் வேஷம்  - உண்மையில் அல்ல)
இறைவன் எண்ணங்களுக்கு கூலி தருவான் என்பதைப் போல், செயல்களையும் இறைவன் கவனித்து அதற்கும் கூலி தருவான் என்பது இஸ்லாமிய அடிப்படைகளில் தெளிவான ஒன்றாகும்.
நீங்கள் சொல்லவரும் விளக்கம் என்னவென்றால் நான் பூஜை செய்தது உண்மை ஆனால் அதனை பூஜை என்று நினைக்கவில்லை. எனது எண்ணத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. இதுதானே!
எண்ணத்திற்குத் தான் கூலி செயலுக்கு அல்லவென்றால் யாரும் எதையும் வணங்கிவிட்டு எண்ணத்திற்குத் தான் கூலி என்று சொல்லலாமே!
முஸ்லிம்கள் ஏன் தனியாக பள்ளி கட்டி அதில் போய் அல்லாஹ்வை தொழ வேண்டும்?
உங்கள் பார்வையில் பன்சலையில் போல் புத்த பெருமானை வணங்கிவிட்டு இறைவனை வணங்குவதாக மனதில் நினைத்துவிட்டால் போதுமே?
உங்கள் குடும்பமே இப்படித்தான் தெவடகஹவில் செய்கின்றீர்களோ?
சகோதரி…. உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஓர் உதாரணம் சொல்கின்றேன்.
ஒரு ஆண் பாதையில் போகும் ஒருத்தியை கட்டிப் பிடிக்கின்றான், அல்லது முத்தம் கொடுக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனை பிடித்து ஏன்டா இப்படி செய்தாய் என்று கேட்க்கும் போது நான் என் சகோதரி என்று நினைத்தேன். என்று அவன் சொன்னால் அவனை நீங்கள் மண்ணித்து விடுவீர்களா?
ஏன் என்றால் அவனுடைய எண்ணத்தில் அவளை ஒரு சகோதரியாகத் தான் நினைத்திருக்கின்றான்.
எண்ணத்திற்குத் தானே கூலி வழங்கப்படும் என்கின்றீர்கள்?
இந்த இடத்தில் அண்ணியப் பெண்ணை கட்டியணைத்து, முத்தம் கொடுத்தவனின் அயோக்கியத் தனத்திற்காக அவனை தண்டிக்க வேண்டும் என்பீர்களா? அல்லது உங்கள் பாணியில் எண்ணத்திற்குத்தான் கூலி என்று சும்மா விட்டுவிடுவீர்களா?
நீங்கள் ஒழுக்கத்தை நேசிக்கும் ஒருவராக இருந்தால் அவனை தண்டிக்க வேண்டும் என்றே கூறுவீர்கள். அப்படியானால் இந்த இடத்தில் எண்ணமல்ல செயலே அவனுக்கு தண்டனையைப் பெற்றுத் தந்தது என்ற முடிவுக்கு வரவேண்டும்.
இப்போது சொல்லுங்கள் நீங்கள் செய்த செயலுக்கு ஷஹாதா சொல்லி மீண்டும் இஸ்லாத்தில் நுழைவீர்களா? அல்லது எண்ணத்திற்குத் தான் கூலி என்று புத்தருக்கு பூஜை செய்த காபிராக நீடிக்கப் போகின்றீர்களா?
யார் செய்தாலும் கண்டிக்கின்றோம்.
இப்போதெல்லாம் எனது தொழுகைகளின் பின் நான் இன்னும் ஓர் பிரார்த்தனையையும் சேர்த்து வருகின்றேன். ‘யா அல்லாஹ் ஒரு இளம் பெண் என்று கூட பார்க்காமல் என்மீது பழிசுமத்தி எனது படங்களில் தேவையற்ற வார்த்தைகளைப் புகுத்தி சிலர் தமது முழு நேர பொழுது போக்காக என்மீது அவதூறு சுமத்தி வருகின்றனர்.
சகோதரி நீங்கள் மார்க்க ரீதியாக செய்த இந்த பெரும்பாவத்திற்கு அல்லாஹ்விடம் பாவ மண்ணிப்புக் கேட்பதற்கு முன் ஷஹாதா கலிமாவை மொழிந்து இஸ்லாத்திற்குள் நுழையுங்கள் அதன் பின் செய்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் பாவ மண்ணிப்புத் தேடுங்கள் என்று மீண்டும் உங்களுக்கு உபதேசிப்படுடன், உங்கள் புகைப்படத்தில் கண்டதையும் எழுதி, அதைப் பரப்புபவர்களுக்கு அதற்குறிய தண்டனையை இறைவன் வழங்குவான் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால்….. ஆடை விஷயத்திலும் நீங்கள் ?????
உங்கள் புகைப்படத்தில் கண்டதையும் எழுதி பரப்புகின்றார்கள் என்பதற்காக கவலைப்படும் நீங்கள் உங்கள் ஆடை விஷயத்தில் இஸ்லாமியத் தனத்தை பேணவில்லை என்பதையும் மறக்கலாகாது!
ஒரு முஸ்லிம் பெண் அதுவும் நீங்கள் ஆதங்கப்படுவதைப் போல் ஓர் இளம் பெண் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியான ஒழுக்கமான ஆடையில் நீங்கள் அன்றும் இல்லை இன்றும் இல்லை என்பதை நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
உங்கள் தந்தை கைது செய்யப்பட்ட அன்றைய தினம் நீங்கள் அளித்த முதல் பேட்டியில் எப்படியிருந்தீர்கள் என்பதை சற்று நேரம் சிந்தித்துப் பாருங்கள். (நாகரீகம் கருதி அந்த புகைப்படத்தை இங்கு பிரசுரிப்பதை நான் தவிர்க்கின்றேன்).
உங்கள் மானத்தில் அவர்கள் விளையாடுகின்றார்கள் என்று நீங்கள் கவலைப் படுவதற்கு முன், உங்கள் மானத்தை பாதுகாக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள்.
அவர்கள் என்ன வார்த்தைகளை உங்கள் புகைப்படத்தில் எழுதினார்கள் என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் எதையும் எழுதாவிட்டாலும் உங்கள் இஸ்லாமியப் பற்றை அந்த புகைப்படம் “பேசும் படமாக” தெளிவாக விபரித்துவிடும்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றி யடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)
மேலுள்ள திருமறை வசனம் பெண்கள் எப்படியிருக்க வேண்டும் என்று சொல்கின்றதோ அப்படி நீங்கள் இருக்கவில்லை என்பதை உணருங்கள். இஸ்லாத்தின் தூய கொள்கையினை உண்மையில் விரும்பி பின்பற்றுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றேன்.
இறுதியாக…
சகோதரி உங்களுக்கு உபத்திரவம் செய்வதற்காக நாம் இந்த செய்திகளை சொல்லவில்லை. மாறாக நாளை மறுமையில் நீங்கள் நஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே இந்த உதவியைச் செய்கின்றோம்.
இலங்கையில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து இனவாத செயல்பாடுகளுக்கும் காரணம் உங்கள் தந்தை அஸாத் ஸாலியின் சகோதரர் ரியாஸ் ஸாலி தான் என்பதை நான் சொல்லி நீங்கள் விளங்க வேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கின்றேன்.
தான் கொண்ட வழிகெட்ட தர்கா வழிபாட்டை மக்கள் மத்தியில் பரப்பி அதன் மூலம் அனைத்து மக்களையும் நரகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற உங்கள் பெரிய தந்தை ரியாஸ் ஸாலியின் தீய சிந்தனை தான் இன்றைக்கு இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கக் காரணமாக அமைந்தது.
“இலங்கையில் வஹாபிய தீவிரவாதம்” என்ற தலைப்பில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு “லக்பிம் நியுஸ்” பத்திரிக்கையில் அவர் எழுதிய கற்பனை ஆக்கம் தான் இதன் மூலக் கரு.
சமுதாயத்தை காட்டிக் கொடுத்த சமூகத் துரோகியை உங்கள் குடும்பத்திற்குள் தான் வைத்திருக்கின்றீர்கள்.
உங்கள் குடும்பத்திற்குள் துரோகியை வைத்துக் கொண்டு, உங்கள் தந்தையை தியாகி என்று சொன்னால் ஊர் நம்பலாம் சிந்திக்கும் மக்கள் நம்பமாட்டார்கள். இப்படி நான் சொல்வதினால் கூட “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றீர்கள்” என்றும் நீங்கள் நினைக்கலாம் அப்படி நினைத்தால் அது என் தவறல்ல.
உங்கள் குடும்ப சூழலும், குடும்ப அங்கத்தவர்களின் நடவடிக்கைகளும் இதைத் தான் உணர்த்தி நிற்கின்றன.
கொழும்பில் உங்கள் குடும்பம் தான் இறைவனுக்கு இணை வைக்கும் தர்கா வழிபாட்டை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடும் ஓர் முக்கியமான குடும்பமாக இருக்கின்றது.
உங்கள் தந்தையின் மூத்த சகோதரர் ரியாஸ் ஸாலிதான் இந்த இணை வைப்புக்குத் துணை நிற்பவர் ஆகையினால் தர்கா வழிபாடு, கங்காராமை கோதி பூஜை என்று இணைவைத்து, குப்ரிய்யத்தான காரியங்களில் ஈடுபட்டு நாளை மறுமையில் நரக நெருப்பில் வீழ்ந்து விடாதீர்கள்.
உண்மையான ஏகத்துவக் கொள்கையின் பால் விரைந்து வாருங்கள்.
அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி முறைகளை மாத்திரம் பின்பற்றி வாழும் உண்மை இஸ்லாமியக் கொள்கையின் பக்கம் விரைந்து வாருங்கள் என்று சத்தியத்தின் பால் அழைப்பு விடுக்கின்றேன்.

நன்றி - rasminmisc 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger