உணவில் அஜினமோட்டோ பயன்படுத்தலாமா?


இன்று, அஜினமோட்டோ   என்ற ஒரு பொருள் உணவில் சுவை சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆதை உணவில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள் என்ன என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
அஜினமோட்டோ  என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும்.
இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினமோட்டோ    சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களில் அஜினமோட்டோ சேர்ப்பது சுகாதாரக் கேட்டை உண்டாக்கும்.
ஆபத்தானது அஜினமோட்டோ :
ஃபிரைட் ரைஸ், சாம்பார், மீன் குழம்பு  என்று எல்லா உணவுகளின் ருசியையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.  தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால், உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கும் நமக்கும் அப்படி என்னதான் பிரச்சினை?    அதென்ன அஜினமோட்டோ? உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ. முன்னர் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது MSG என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.
அதிக அளவில் இந்த MSG நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்!
அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது? இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22%சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.    MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்? நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.  ஆளுபு யின் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை.  எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்!  மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.  MSG நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.  தூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும், திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது. அதிகமான குளுடாமிக் அமிலம் உயிரின் முக்கிய அணுவான DNA என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.  இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.  உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள். சோதனைச்சாலை, எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5 மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.  வன்முறைச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது. பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. ஆளுபு கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.  உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவையும் நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள். குயளவ குழழன மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம். நமக்கு பாதகம் ஏற்படுத்துவதை நாம் பயன் படுத்துவதைப் பற்றி  பின்வருமாறு அல்குர்ஆன் எச்சரிக்கிறது.
உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.  (அல்குர்ஆன் 2:195)
உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள்.  (அல்குர்ஆன் 4:29)
இந்த வசனங்களின் அடிப்படையில், மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் பொருள் என்று நிரூபணமானால் அதை உண்ணக் கூடாது. அஜினமோட்டோ உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக அதை உணவில் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
நன்றி - mahsalafi
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger