பிலடெல்பியா: போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி 15-04-2014 இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 96. பிறக்கும் போது ஊனமாக பிறந்துவிட்டால் விதியே என்று விட்டுவிடலாம். ஆனால் சுகமாக பிறந்து நன்றாக ஓடி ஆடி விளையாடிய பிள்ளைகள் திடீரென நோய் தாக்கி நடக்க முடியாமல் ஊனமடைவது என்பது தாங்க இயலாத துயரம். இந்த துயரத்திற்கு முடிவு கட்டும் வகையில் சொட்டு மருந்து ஒன்றினை கண்டுபிடித்தார் ஹிலாரி கோப்ரோவ்க்ஸ்கி..
போலியோவிற்கு முடிவு... இவரது இந்த அரிய கண்டுபிடிப்பு உலக நாடுகளை உலுக்கி வந்த போலியோவிற்கு முடிவினை ஏற்படுத்தியது. இன்றைக்கும் லட்சக்கணக்கான இளம் தலைமுறையினர் ஹிலாரி கோப்ரோவ்ஸ்கியை வாழ்த்துகின்றனர். வைரஸ் நோய் தொற்றினால் போலியோ ஏற்படுகிறது மனிதனின் மலம் மற்றும் கழிவுகளில் போலியோ வைரஸ் காணப்படும். இவ்வைரஸினால் மாசுபட்ட உணவுகளை உட்கொள்ளும் போது போலியோ பரவுகிறது. பெரும்பாலான நேரங்களில், இவ்வகை வைரஸ் மலத்திலிருந்து வாய் வழியாகவே ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது. சிறுபிள்ளைகளுக்கு போலியோ ஏற்படும் அதிக ஆபத்து உள்ளது. அவர்களின் வாழ்க்கையை முடக்கிவிடும்.
சொட்டு மருந்து போலியோ ஏற்படாமல் தடுக்க இன்றைக்கு இந்தியாவில் சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியினால் போலியோ இல்லாத சமுதாயம் உருவாகியுள்ளது. இதற்கு காரணமாக விஞ்ஞானி ஹிலாரி கோப்ரோவ்ஸ்க்கியை இந்த நேரத்தில் நாம் நினைவு கூறவேண்டும்.
திறமையான வைராலஜிஸ்ட் மிகச்சிறந்த வைராலஜிஸ்ட் என்று போற்றப்படும் ஹிலாரி கோப்ரோவ்ஸ்க்கி பிலடெல்பியாவில் உள்ள விஸ்ட்டர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் இயக்குநராக 1957ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டுவரை பணிபுரிந்தார்.
எதிர்கால தலைமுறை பிறக்கும் போது நன்கு இருக்கும் குழந்தைகள் போலியோவால் தாக்கப்பட்டு ஊனமாவது அதிகரித்து வந்தனர். இந்த நோயில் இருந்து எதிர்கால தலைமுறை பாதுகாக்கும் வகையில் ஹிலாரி போலியோ மருந்தினை கண்டுபிடித்தார். இதனால் பல குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டது. இதனால் தற்போது பல உலக நாடுகள் போலியோ அற்ற நாடுகளாக உருவாக காரணமாகியுள்ளது.
சொந்த வீட்டிலேயே மரணம் பிலடெல்பியாவில் வசித்து வந்த ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி, கடந்த பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவர் வாழ்ந்த வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது என்று அவரது மகன் தெரிவித்துள்ளார்
.
விஞ்ஞானி மட்டுமல்ல அறிவாளி போலியோ சொட்டு மருந்தினை கண்டுபிடித்து, உலகுக்கு மிகப்பெரிய நன்மையைச் செய்துள்ள கோப்ரோவ்ஸ்கி, மிகச் சிறந்த மனிதராகவும், உலகிலேயே மிகச் சிறந்த அறிவாளியாகவும் வாழ்ந்ததாக அவரது மகன் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - oneindia

Post a Comment