யாருய்யா நீ...ரோட்ல போகிறவரெல்லாம் வாதாடனும்னா எப்படி....? சு.சாமிக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்


டெல்லி: உச்சநீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் வறுத்தெடுத்து விரட்டியடித்திருக்கிறார். கேரள கடற்பரப்பில் மீனவர்களை படுகொலை செய்த இத்தாலி மாலுமிகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை அல்டமாஸ் கபீர் பிறப்பித்துக் கொண்டிருந்த போது வழக்கறிஞர்கள் அமரும் இருக்கையில் இருந்த சுப்பிரமணியன் சுவாமி எழுந்து நான் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருக்கிறேன் என்றார். அவ்வளவுதான்... உஷ்ணமானார் அல்டமாஸ் கபீர்..." யார் நீங்கள்" என்று சுவாமியைப் பார்த்துக் கேட்டார் அவர். அதற்கு "நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறேன்" என்றார். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'நான் உங்களை யார்னு கேட்டேன்" என்றார் கடுப்பாக. மேலும் " நீங்கள் ஒன்றும் வழக்கறிஞர் இல்லை.. இந்த இடத்தில் இன்று பேசவும் வாதாடவும் உரிமை கிடையாது. ரோட்ல போகிறவர் எல்லாம் இங்க வந்து வாதாடனும்னா எப்படி? இதுக்கு முன்னாடி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்.. ஆனால் நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று வெளுத்து வாங்கிவிட்டார். இதற்கு சுவாமி பதிலளிக்க முயன்றார். அப்போதும் அல்டமாஸ் கபீர் விடவில்லை.. நீங்கள் எதுக்காக முதல் வரிசையில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்.. இங்கே உட்கார உங்களுக்கு உரிமை கிடையாது. இந்த நாற்காலிகள் வழக்கறிஞர்களுக்குத்தான். வழக்கு போடுபவர்களுக்கு அல்ல. உங்களுக்கு இங்கே உட்கார உரிமை கிடையாது என்று அதிரடியாக வெளியேறச் சொன்னார். இதனால் முகம் சிறுத்துப் போன சுப்பிரமணியன் சுவாமி, நீதிமன்றம் நான் இங்கே இருக்கிறதை விரும்பலை எனில் நான் வெளியேறுகிறேன் என்றார். அதற்கும் அதிரடியைக் காட்டினார் அல்டமாஸ் கபீர்.. "உங்களை நீதிமன்றத்துக்கு வரக்கூடாதுன்னு சொல்லை. இந்த நாற்காலியில் உட்கார உங்களுக்கு உரிமை இல்லை என்றுதான் சொல்கிறோம் என்றார். அதற்கும் அடங்காதவராக இங்கே ஒரு ரகசியக் கூட்டு இருக்கிறது என்று சுப்பிரமணியன் சுவாமி கொந்தளித்துப் போனார் தலைமை நீதிபதி. 'நீங்கள் என்ன பேசுகிறோம் என்று எச்சரிக்கையோடு பேசுங்கள்.. ரகசியக் கூட்டு என்றால் என்ன? என்று கடுப்படித்தார். இங்கே என்றால் இங்கே இல்லை. வெளியே... இத்தாலிய மாலுமிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று இத்தாலிக்கு மத்திய அரசு உறுதி மொழி அளித்துள்ளது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி.  

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger