அரசிற்கு சொந்தமான இடத்தில் பால்தாக்ரேவிற்கு நினைவிடம், இரவோடு இரவாக அகற்றப்பட்டது!



சிவசேனா கட்சியினர் அரசிற்கு சொந்தமான சிவாஜி பார்க்கில் 30 க்கு 30 நிலத்தை ஆக்ரமித்து அதில் பால்தாக்ரேவிற்கு தற்காலிக நினைவிடம் அமைத்தனர். பால் தாக்ரே உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் தான் அவருக்கு நாங்கள் நினைவிடம் கட்டுவோம் எனக் கூறி சட்டத்திற்கு புரம்பாக அங்கு நினைவிடம் அமைத்தனர்.
ஆரம்பத்தில் லேசாக இதற்கு எதிர்ப்பு கிழம்பியது. இதற்கு பதில் அளித்த சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான Eknath Shinde என்பவர் ”எதுவேண்டுமானாலும் வரட்டும் நினைவிடத்தை நீக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் அங்கு தான் நினைவிடம் இருக்கும்” எனக் கூறினார்.
பால்தாக்ரேவிற்காக பந்த அனுஸ்டிக்கப்பட்டதற்கு எதிராக ஃபெஸ்புக்கில் கருத்து கூறிய பெண்னை கைது செய்ததற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு எடும் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியையே கலைக்க நேரிடும் எனக் கூறி மஹாராஷ்ட்ர முதல்வரையே கதிகலங்க வைத்து விட்டார்.
பின்னர் அலரி அடித்துக் கொண்டு முதல்வர் சவான் பெண்ணை கைது செய்தவர்கள் மீது இலாக்காவாரியாக நடவடிக்கை எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து பால்தாக்ரேவிற்கு அரசிற்கு சொந்தமான சிவாஜி பார்க்கில் நினைவிடம் அமைக்கப்பட்டதும் இது போன்று பெரிய அளவில் பிரச்சனை ஆகிவிடும் என பயந்த போய் மஹாராஷ்ட்ர முதல்வர் சவான் சிவசேனா கட்சிக்கு நினைவிடத்தை நீக்குமாறு முனிசிபால்டி மூலம் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில் ”சிவாஜி பார்க்கில் பால்தாக்ரேவின் உடலை தகனம் செய்வதற்கு தான் அனுமதி அளித்து இருந்தோம். அங்கு நினைவிடம் கட்ட அனுமதி அளிக்கவில்லை. அது அரசிற்கு சொந்தமான இடம். அதை அப்படியே திருப்பி தர வேண்டும் அதில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தை நீக்கா விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறிப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து சிவசேனா கட்சி நினைவிடத்தை நீக்க ஒத்துக் கொண்டது.
நேற்று இரவோடு இரவாக ஷிவாஜி பார்க்கில் கட்டப்பட்ட பால்தாக்ரேவின் நினைவிடம் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது.
நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger